Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
ரிஷபத்தில் வக்ரம் அடையும் குரு.. இனி இந்த ராசியினர் காட்டில் பண மழைதான் பொழியும்..!
ஜோதிட சாஸ்திரங்களின்படி, நவகிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவேளியில் தங்களின் ராசியை மாற்றுகின்றன.. பொதுவாக நவகிரகங்களில் ராகு மற்றும் கேது ஆகிய இரு கிரகங்களும் கடிகார சுற்றுக்கு எதிர்திசையில் சுழல்பவை, எனவே அவற்றிற்கு வக்ர இயக்கம் என்பதே கிடையாது.
அதேபோல சூரியனுக்கும் சந்திரனுக்கும் வக்ர இயக்கமே கிடையாது. ஒன்பதில் நான்கு கிரகங்களைத் தவிர மீதி உள்ள 5 கிரகங்களுக்கும் வக்ர கதி இயக்கம் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன..

இந்நிலையில் குரு பகவான் வக்ர பெயச்சி அடைய உள்ளார். சுக்கிரனின் ராசியான ரிஷபத்தில் தற்போது இருக்கும் குரு பகவான், 2025ம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைவார். அதற்கு முன்னதாக அடுத்த மாதம் அக்டோபர் 9 ஆம் தேதி, குரு பகவான் ரிஷப ராசியில் வக்ர நிலையில் பெயர்ச்சி அடைவார். அதாவது தனது இயக்கத்தை நிறுத்திக் கொள்வார். பிப்ரவரி 25 வரை இதே நிலையில் இருக்கும் குரு, மே மாதம் வரை ரிஷபத்திலேயே பயணித்து மே 14 ஆம் தேதி மிதுன ராசிக்குச் செல்வார் என கணிக்கப்பட்டுள்ளது.. இதனால் பலன்களை பெறும் ராசியினர் யார்யார் என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..
குரு வக்ர பெயர்ச்சி: அறிவு, மகிழ்ச்சி, கல்வி, திருமணம் மற்றும் செழிப்பு ஆகியவற்றிற்கு காரணமான கிரகமாக இருக்கும் குரு பகவான், அக்டோபர் 9, 2024 அன்று வக்ர நிலையை அடைவார்.
மிதுனம்
குரு பகவான் வக்ர நிலை பெறுவதால் மிதுன ராசியினருக்கு தூங்குவதில் இருந்த சிக்கல் நீங்கி தூக்கம் நன்றாக வரும். நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயல்களிலும் வெற்றிகள் குவியும்... பொருளாதார நிலை வலுவாக இருக்கும். சமூகத்தில் பாராட்டப்படுவார்கள். நோய்கள் உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படும். வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். செல்வம் பெருகும்.
கன்னி
குரு பகவான் கன்னி ராசியினருக்கு சுப பலன்களை தர உள்ளார். உங்கள் தொழிலில் மகத்தான வெற்றியைப் பெறுவீர்கள். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் வந்து சேரும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். வருமானத்திற்கும் செலவுக்கும் இடையில் சமநிலை இருக்கும். வருமானம் அதிகரிக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். ஒவ்வொரு செயலிலும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவீர்கள்.
விருச்சிகம்
குரு பகவானால் விருச்சிகம் ராசியினர் அதிகமான வருமானத்தை பெறுவார்கள்.. அதனால் அவர்களின் செல்வநிலை உயரும். மாணவர்களுக்கும் இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். போட்டித் தேர்வுகளில் மகத்தான வெற்றியைப் பெறுவீர்கள். சட்டச் சர்ச்சைகளில் இருந்து விடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் அமையும். அரசின் உதவிகள் கிடைக்கும்.. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்...
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications