Latest Updates
-
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம்
12 ஆண்டுகளுக்கு பின் ரிஷபத்தில் வக்ரமாகும் குரு: இன்னும் 18 நாட்களில் இந்த 3 ராசியின் வாழ்க்கை பிரகாசிக்கும்..
Jupiter Retrograde In Taurus On October 2024: தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். இவர் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். தற்போது குரு பகவான் ரிஷப ராசியில் பயணித்து வருகிறார்.
அறிவு, கல்வி, மரியாதை, செல்வம், நல்லொழுக்கம், குழந்தைகள் ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் குரு பகவான், ஒவ்வொரு முறை ராசியை மாற்றும் போதும், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இந்நிலையில் இன்னும் சில நாட்களில் குரு பகவான் ரிஷப ராசியில் வக்ர நிலையில் பின்னோக்கி பயணிக்கவுள்ளார்.

இந்த வக்ர நிலைக்கு குரு பகவான் அக்டோபர் 09 ஆம் தேதி மாறவுள்ளார். குருவின் வக்ர பெயர்ச்சியானது ஒருவரது வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் சில ராசிக்காரர்களுக்கு குருவின் இந்நிலையால் அதிர்ஷ்டம், வெற்றி, நிதி ஆதாயம் போன்றவை கிடைக்கும். இப்போது ரிஷப ராசியில் வக்ரமாகும் குருவால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 12 ஆவது வீட்டில் குரு வக்ரமாகவுள்ளார். இதன் விளைவாக இந்த ராசிக்காரர்கள் தங்களின் இலக்குகளை எளிதில் அடைவார்கள். புதிய திட்டங்கள் மனதில் உருவாகும். பணிபுரிபவர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நீண்ட நாட்களாக சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். இக்காலத்தில் எதிர்காலம் பற்றிய ஒரு பெரிய முடிவை எடுப்பீர்கள். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். எந்த விஷயத்திலும் நம்பிக்கையுடன் செயல்பட்டால், எதிர்காலத்தில் சிறப்பான பலனைப் பெறலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டில் குரு வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் கூடுதல் கவனத்தை செலுத்துவீர்கள். இதனால் தொழிலில் இரட்டிப்பு லாபத்தைப் பெறுவீர்கள். சிலருக்கு வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ளும் வாய்ப்புக்களும் கிடைக்கலாம். மேலும் பணத்தை சம்பாதிக்கும் புதிய வழிகளும் திறக்கும். வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் நல்லபடியாக முடிவடையும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசியின் அதிபதியான குரு, 6 ஆவது வீட்டில் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அக்டோபர் முதல் அதிர்ஷ்ட காலமாக இருக்கும். சமூகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கையில் நீண்ட நாட்களாக சந்தித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நல்ல பொருள் இன்பத்தைப் பெறுவீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தை பொறுத்தவரை, நன்றாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications