Latest Updates
-
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும்
12 ஆண்டுகளுக்கு பின் ரிஷபத்தில் வக்ரமாகும் குரு: அக்டோபர் முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..
Jupiter Retrograde In Taurus 2024 After 12 Years: வேத ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் தான் குரு பகவான். இந்த குரு பகவான் ஒரு ராசியில் ஒரு ஆண்டு காலம் பயணிப்பார். இவர் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். தற்போது குரு பகவான் சுக்கிரனின் ராசியான ரிஷப ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் வருகிற அக்டோபர் 09 ஆம் தேதி குரு பகவான் ரிஷப ராசியில் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். அதாவது பின்னோக்கி பயணிக்கவுள்ளார். இந்த வக்ர நிலையில் குரு பகவான் 2024 பிப்ரவரி 05 ஆம் தேதி வரை இருப்பார். ஜோதிடத்தில் செழிப்பு, செல்வம், அறிவு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் குரு பகவான்.

இந்த குரு பகவானின் நிலையில் மாற்றம் ஏற்படும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதுவும் குரு அக்டோபரில் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது குரு வக்ரமாவதால், அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 7 ஆவது வீட்டில் குரு வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கைத் துணையும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படவுள்ளது. இந்த மாற்றம் எதிர்பாராத அளவில் சிறந்த ஒன்றாக இருக்கும். திருமணமாகி குழந்தை இல்லாமல் இருப்பவர்களுக்கு, இந்த குருவின் மாற்றத்திற்கு பின் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 6 ஆவது வீட்டில் குரு வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பல நல்ல செய்திகளைப் பெறுவார்கள். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். புதிய நட்புக்களால் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வசதிகள் பெருகும். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய சொத்துக்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டில் குரு வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வணிகத்தில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவார்கள். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். உங்களின் திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெறும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். தொழிலதிபர்கள் தங்களின் தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். அறிவாற்றல் மூலம் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications