Latest Updates
-
பெங்காலி முட்டை புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - வாசனை தெருவே மணக்கும் -
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது! -
பாகிஸ்தானின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவர் முகேஷ் அம்பானியை விட பணக்காரரா? உண்மை என்ன? -
சேமியா ரவா கிச்சடியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 15, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துக்கள் விடாம துரத்தப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
செப்டம்பர் 14-ல் தொடங்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
லன்ச் பாக்ஸிற்கு ஒருடைம் இந்த சோயா புலாவ் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் தேங்காய்ப்பால் ரசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உங்க முகத்தில் இந்த 3 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
குரு வக்ர பெயர்ச்சி அடைவதால் கோடி நன்மைகளை பெறப்போகும் 3 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
ஒருவரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் முன்னேற்றம் நிறைந்திருக்க அவர்களுக்கு குருபகவானின் ஆசீர்வாதம் அவசியம். ஒருவரின் ஜாதகத்தில் குருபகவான் சாதகமான நிலையில் இல்லாவிட்டால், அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. மேலும் அவர்கள் வாழ்க்கையில் பின்னடைவையும், புதிய தொழில் வாய்ப்புகளைப் பெறுவதில் சிரமங்களையும் சந்திக்க நேரிடும். அதேசமயம் குரு சாதகமான நிலையில் இருந்தால், ஒருவர் வாழ்க்கையில் பல சாதனைகளை செய்ய முடியும்.
பிப்ரவரி 4 ஆம் தேதி குருபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போகிறார். சில ராசிக்காரர்களுக்கு குருவின் இந்த வக்ர பெயர்ச்சி அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகிறது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு குருவின் வக்ர பெயர்ச்சியால் நல்ல நேரம் வரப்போகிறது. இதனால் ரிஷப ராசிக்காரர்கள் வேலையில் சிறந்து விளங்க முடியும். இதுவரை தடைப்பட்டிருந்த வேலைகள் இப்போது சுமூகமாக முடிவடையும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள், அவர்கள் முயற்சிகளுக்கேற்ற பாராட்டுக்கள் கிடைக்கும். இந்த ராசிக்காரர்கள் தங்கள் பல ஆசைகளை நிறைவேற்றும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
உங்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண உறவினர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். போட்டித் தேர்வுகளில் பங்கேற்பவர்கள் பெரிய வெற்றியைப் பெற முடியும். குடும்பத்தில் மங்களகரமான நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யலாம், இதனால் குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் ஆட்சி செய்யும்.
மிதுனம்
குருவின் வக்ர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு வரும். பிப்ரவரி முதல், இந்த ராசியில் பிறந்தவர்களை அதிர்ஷ்டம் தேடி வரும். அவர்கள் விரும்பியதை அடைவார்கள். அவர்கள் தொழில் தொடங்க திட்டமிட்டிருந்தால் இப்போது அதற்கான நேரம் கூடிவரும், மேலும் இந்த வியபாரம் அவர்களுக்கு லாபத்தைக் கொடுக்கும்.
ஏற்கனவே வியாபாரத்தில் உள்ளவர்கள் புதிய ஒப்பந்தங்கள் மூலம் பெரும் லாபத்தைப் பெறலாம். வேலையில் இருப்பவர்கள், பணம் சம்பாதிப்பதற்கான மிகவும் பொருத்தமான வழிகளைக் கண்டுபிடிப்பது அவசியம். கையில் உள்ள சேமிப்பு இரட்டிப்பாகும் வாய்ப்பு உள்ளது. இந்த வக்ர பெயர்ச்சியால் அவர்களால் குறுகிய காலத்தில் நல்ல வருமானமும் ஈட்ட முடியும்.
கும்பம்
குரு வக்ர பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்கள் பல நன்மைகளை பெறப்போகிறார்கள். அவர்கள் எந்த துறையில் நுழைந்தாலும், அந்தத் துறையில் பெரிய வெற்றிகளை அடைவார்கள். அவர்கள் பணியிடத்தில் ஆதிக்கம் செலுத்துவார்கள் மற்றும் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
அதிக பொறுப்புகள் மற்றும் கடமைகளை ஏற்றுக்கொள்வார்கள். கூடுதலாக, அவர்கள் பணியிடத்தில் லாபம் ஈட்டவும், மற்றவர்களைக் கட்டுப்படுத்தும் சிறப்பு அதிகாரத்தைப் பெறுவார்கள். புதிய தொழில் தொடங்க வீரும்புவர்களுக்கு அதற்கான உதவிகள் தேடிவரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

