Latest Updates
-
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க..
July Month Rasi Palan 2025: ஜூலை மாதம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பெரிய திருப்புமுனையா இருக்கப்போகுது...
July Month Rasi Palan 2025: ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து பலன்கள் வேறுபடும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் ஏழாவது மாதமான ஜூலை மாதத்தில் நிகழும் கிரக பெயர்ச்சிகளால், பல மங்களகரமான யோகங்கள் உருவாகவுள்ளன. இந்த யோகங்களால் ஜூலை மாதமானது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒருசில மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது.
உங்களுக்கு 2025 ஆம் ஆண்டின் ஜூலை மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? கீழே 12 ராசிக்காரர்களும் ஜூலை மாதத்தில் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என ஜூலை மாத ராசிப்பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் ராசிக்கு 2025 ஜூலை மாதம் எப்படி இருக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! ஜூலை மாதத்தில் உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களின் யோசனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். இருப்பினும் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்க, இந்த மாதத்தில் அதிகமாக அலைவதைத் தவிர்க்க வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! ஜூலை மாதம் உங்களுக்கு பொறுப்புக்களையும், பல புதிய வாய்ப்புக்களையும் கொண்டு வரும். அப்படி கிடைக்கும் வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்திக் கொண்டால், வாழ்க்கையில் நல்ல நிலையை அடையலாம். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். முதலீடு செய்யும் எண்ணம் இருந்தால், அனுபவசாலிகளின் ஆலோசனையைப் பெற வேண்டும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, செரிமான பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளதால், உணவில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! ஜூலை மாதமானது உங்களின் புதிய திட்டங்களை நிறைவேற்ற ஏற்ற மாதமாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் முயற்சிகளுக்கு ஏற்ற பலன் கிடைக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். அதே சமயம் பெரிய செலவுகளை செய்ய வேண்டிய சூழலும் ஏற்படலாம். குடும்பத்தில் சிறு பிரச்சனைகள் வரக்கூடும். இம்மாதத்தில் எதையும் அமைதியாக கையாள வேண்டும். ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
கடகம்
கடக ராசிக்காரர்களே! ஜூலை மாதம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். நல்ல நிதி ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இம்மாதத்தில் உங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகளை நடத்தலாம். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நன்றாக இருக்கும். இருப்பினும், உடற்பயிற்சிகளை தினமும் செய்து வர வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! ஜூலை மாதமானது உங்களுக்கு சவாலாக இருந்தாலும், பயனுள்ளதாக இருக்கும். பணியிடத்தில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அந்த கடின உழைப்பிற்கு ஏற்ற பலனும் கிடைக்கும். இம்மாதத்தில் உங்களின் செலவுகள் அதிகரிக்கலாம். எனவே பட்ஜெட் போட்டு செலவழியுங்கள். இல்லாவிட்டால் பண பிரச்சனையால் சிரமப்பட வேண்டியிருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பள்ளது. எந்த வேலையையும் பொறுமையாக செய்யுங்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்க வேண்டுமானால் மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! ஜூலை மாதமானது உங்களின் திட்டங்களை செயல்படுத்த சிறந்த மாதமாகும். இந்த மாதத்தில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். வீட்டு சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, பருவகால நோய்கள் குறித்து சற்று கவனமாக இருக்க வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! ஜூலை மாதமானது நன்றாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் முடிவுகள் முக்கியமானதாக இருக்கும். நிதி நிலைமை வழக்கத்தை விட நன்றாக இருக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும். ஆனால் அடிக்கடி கண் பிரச்சனைகள் மற்றும் தலைவலியால் அவதிப்பட நேரிடும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! ஜூலை மாதத்தில் உங்களின் தைரியமும், கடின உழைப்பும் சோதிக்கப்படலாம். இம்மாதத்தில் பணியிடத்தில் உங்கள் எதிரிகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். இருப்பினும் புத்திசாலித்தனமாக செயல்பட்டு, உங்கள் எதிரிகளை எளிதில் சமாளிப்பீர்கள். பண விஷயங்களில் இம்மாதத்தில் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடையே வரும் பிரச்சனைகளை பெரிதுபடுத்தாதீர்கள். ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! ஜூலை மாதம் உங்களுக்கு நேர்மறை ஆற்றல் நிறைந்ததாக இருக்கும். தொழில் ரீதியாக முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். ஆனால் இம்மாதத்தில் பயணங்களை மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! ஜூலை மாதத்தில் உங்கள் வாழ்க்கையில் நல்ல உயரத்தை அடைவீர்கள். உங்களின் முயற்சிகள் நல்ல பாராட்டைப் பெறும். நிதி நிலைமை வலுவாக இருக்கும். தேவையற்ற செலவுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களுடன் பேசும் போது சற்று பொறுமையாக இருக்க முயற்சிக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்க நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற முயற்சி செய்யுங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! ஜூலை மாதத்தில் உங்களின் வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். அலுவலகத்தில் உங்களின் யோசனைகள் நல்ல பாராட்டைப் பெறும். நல்ல நிதி ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இருந்தாலும் மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். வீட்டு சூழல் அமைதியாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்க வேண்டுமானால், உணவில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! ஜூலை மாதம் உங்களுக்கு முன்னேற்றத்தைத் தரும் மாதமாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் நிலை வலுவடையும். நிதி பரிவர்த்தனைகளால் நிறைய லாபம் கிடைக்கும். அதே சமயம் அதிக செலவுகளையும் சந்திக்க நேரிடும். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். இம்மாதத்தில் தோலை மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகள் தொந்தரவு செய்யக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











