Latest Updates
-
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாஞ்சில் புளிக்குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும்
வருகிற 2026 புத்தாண்டு இந்த 3 ராசிக்காரங்களுக்கு படுமோசமா இருக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
Horoscope 2026: 2025 ஆம் ஆண்டின் இறுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இன்னும் ஒரு மாதத்தில் 2026 ஆம் ஆண்டில் நுழையவுள்ளோம். இந்த புத்தாண்டில் பல முக்கிய கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. ஜோதிடத்தின் படி கிரகங்கள் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுவும் சில கிரகங்கள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
அதிலும் ராகு, கேது, சனி, குரு போன்ற கிரகங்கள் ஒரு ராசியில் நீண்ட காலம் பயணிப்பதால், அவற்றின் நிலைகளில் சிறு மாற்றங்கள் ஏற்பட்டாலும், அது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டில் சனி பகவான் மீன ராசியில் இருப்பார். குரு பகவான் மிதுனம், கடகம், சிம்மம் ஆகிய ராசிகளில் பயணிப்பார். ராகு ஆண்டின் சில காலம் கும்ப ராசியிலும், பின் மகர ராசியிலும் பயணிப்பார்.

இந்த கிரகங்கள் தவிர மற்ற கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி மனித வாழ்க்கையில் தாக்கத்தை உண்டாக்கும். இப்படி 2026-ல் நடக்கும் கிரகங்களின் பெயர்ச்சிகளால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருந்தாலும், சில ராசிக்காரர்கள் சிரமங்களை சந்திக்க நேரிடும். இப்போது 2026 ஆம் ஆண்டின் கிரக பெயர்ச்சிகள் மற்றும் கிரகங்களின் நிலைகளால் எந்த ராசிக்காரர்கள் நிறைய சிரமங்களை சந்திப்பார்கள் என்பதைக் காண்போம்.
மேஷம்
2026 ஆம் ஆண்டு மேஷ ராசிக்காரர்கள் நிறைய சவால்களை சந்திப்பார்கள். இந்த ஆண்டில் ஏழரை சனி தொடர்ந்து நடப்பதால் பல சிரமங்களை சந்திக்க நேரிடும். மனதில் கவலைகள் அதிகரிக்கும். பண விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த ஆண்டில் எதிரிகளின் ஆதிக்கம் அதிகம் இருக்கும். பணிபுரிபவர்கள் பணியிடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், சற்று கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக இந்த புதிய ஆண்டில் உங்களின் செலவுகள் அதிகரிக்கும்.
சிம்மம்
2026 ஆம் ஆண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு அவ்வளவு சிறப்பாக இருக்காது. சொல்லப்போனால் இந்த ராசிக்காரர்கள் வேலையில் சிரமங்களை சந்திக்க நேரிடும். முக்கியமாக அஷ்டம சனி நடப்பதால், நிறைய மன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதோடு ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும். எந்த வேலையை செய்தாலும் தடைகளை சந்திக்க நேரிடும். இந்த ஆண்டில் முதலீடுகளை செய்வதாக இருந்தால் கவனமாக இருக்க வேண்டும். வணிகர்கள் நிறைய பிரச்சனைகளை சந்திப்பார்கள். வியாபாரிகளுக்கு இந்த ஆண்டு மந்தமாக இருக்கும்.
தனுசு
2026 ஆம் ஆண்டு தனுசு ராசிக்காரர்களுக்கு படுமோசமாக இருக்கும். முக்கியமாக இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்புக்களை அதிகம் சந்திக்க நேரிடும். மேலும் தேவையில்லாத நிறைய செலவுகளையும் சந்திப்பார்கள். பணிபுரிபவர்கள் பணியிடத்தில் சிரமங்களை சந்திக்க நேரிடும். வணிகர்களும் பிரச்சனைகளை அதிகம் சந்திப்பார்கள். குறிப்பாக இந்த ஆண்டில் ஆரோக்கியம் மிகவும் மோசமாக இருக்கும். மருத்துவ செலவுகளை ஏராளமாக சந்திக்க வேண்டியிருக்கும். இதனால் பண பிரச்சனைகளையும் சந்திக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
