Latest Updates
-
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா?
2026-ல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்.. உங்க ராசியும் இதுல இருக்கா?
Horoscope 2026: ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். மேலும் ஒவ்வொரு புதிய ஆண்டும் ஒவ்வொருவருக்கும் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்களை கொண்டு வரும். அந்த வகையில் ஜோதிடத்தின் படி 2026 ஆம் ஆண்டு சிறப்பான ஆண்டாகும். குறிப்பாக நிதி ரீதியாக சில ராசிக்காரர்களுக்கு சிறப்பு வாய்ந்த ஆண்டாக இருக்கும்.
ஏனெனில் இந்த ஆண்டில் பல கிரகங்களின் நிலைகளில் சாதகமான மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இவை, ஒருவரது நிதி நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளன. அதில் சில ராசிக்காரர்களுக்கு மற்றவர்களை விட மிகவும் சிறப்பாக இருக்கும்.

அதுவும் சில ராசியை சேர்ந்தவர்களுக்கு 2026 ஆம் ஆண்டில் தொழில் மற்றும் நிதி நிலைமையில் பெருமளவில் உயர்வு ஏற்படவுள்ளன. இப்போது 2026 ஆம் ஆண்டில் பணக்காரர் ஆவதற்கான அதிக வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
1. சிம்மம்
சூரியனை அதிபதியாக கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு 2026 பிரகாசமாக இருக்கும். இந்த ராசியைச் சேர்ந்தவர்களுக்கு 2026-ல் பதவி உயர்வு கிடைக்கும். பணியிடத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். துணிச்சலான முடிவுகள் மூலம் வலுவான நிதி ஆதாயங்கள் கிடைக்கும். செல்வாக்கு மிக்கவர்களிடமிருந்து எதிர்பாராத ஆதரவு கிடைக்கும். இந்த ஆண்டு தங்களுக்கே முதலீடு செய்யும் சிம்ம ராசிக்காரர்கள் நீடித்த நிதி சாம்ராஜ்யங்களை உருவாக்க முடியும்.
2. விருச்சிகம்
செவ்வாயை அதிபதியாக கொண்ட விருச்சிக ராசிக்காரர்கள் 2026 ஆம் ஆண்டில் எதிர்பாராத லாபத்துடன், சக்தி வாய்ந்த மாற்றங்களையும் காண்பார்கள். இந்த ஆண்டில் திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். முதலீடுகள், பங்குகள் அல்லது பரம்பரை சொத்துக்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். ஆழமான உள்ளுணர்வால் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுப்பீர்கள். தொழில் மாற்றங்கள் அதிக வருவாய்க்கு வழிவகுக்கும். மொத்தத்தில் 2026 ஆம் ஆண்டில் தங்கள் உள்ளுணர்வை நம்பும் விருச்சிக ராசிக்காரர்கள் வாழ்க்கையை மாற்றும் ஆதாயங்களைப் பெறலாம்.
3. மகரம்
சனி பகவானை அதிபதியாக கொண்ட மகர ராசிக்காரர்கள் 2026 ஆம் ஆண்டில் கடின உழைப்பிற்கான பெரும் பலனைப் பெறுவார்கள். இந்த ஆண்டில் சனியின் அமைப்பு, மகத்தான நிதி வளர்ச்சியுடன் அவர்களின் முயற்சிகளுக்கு வெகுமதியை அளிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். ஒழுக்கமான நிதி திட்டமிடல் மூலம் பெரிய ஆதாயங்கள் கிடைக்கும். கூட்டு வணிகம் செய்பவர்களுக்கு சாதகமான ஆண்டாக இருக்கும். மொத்தத்தில் 2026 ஆம் ஆண்டு கனவுகளை சாதனைகளாக மாற்றும் ஆண்டாக இருக்கும்.
4. ரிஷபம்
சுக்கிரனை அதிபதியாக கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டில் முதலீடுகள், சொத்து வாங்குதல் மூலம் நிதி நிலைமை உயரும். வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். மொத்தத்தில் ரிஷப ராசியில் பிறந்தவர்கள் பல வருட கடின உழைப்புக்குப் பிறகு திடீர் முன்னேற்றங்களைக் காணலாம்.
5. மீனம்
மீன ராசிக்காரர்கள் 2026 ஆம் ஆண்டில் செல்வத்தையும் படைப்பாற்றலையும் விரிவுபடுத்தும் நேர்மறையான குரு பெயர்ச்சியால் பயனடைவார்கள். அதுவும் வணிகத்தில் எதிர்பாராத வளர்ச்சியைக் காண்பார்கள். நிதி ரீதியாக அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள். இந்த ஆண்டில் வருமானத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது. கூட்டு தொழில் செய்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். மொத்தத்தில் மீன ராசிக்காரர்களுக்கு ஆண்டு முழுவதும் சீரான மற்றும் அதிர்ஷ்டமான உயர்வு கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











