உங்க ராசி என்ன-ன்னு சொல்லுங்க.. 2026-ல் எந்த மாதம் மோசமா இருக்கும்-ன்னு சொல்றோம்..

Worst Month For Zodiac Signs in 2026: புதிய 2026 ஆம் ஆண்டில் நுழைய இன்னும் சில வாரங்களே உள்ளன. வருகிற இந்த புத்தாண்டு ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளன. அதுவும் இந்த புத்தாண்டின் ஒவ்வொரு மாதத்திலும் உள்ள கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து, ஒவ்வொரு மாதமும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அதில் சிலருக்கு சிறப்பாகவும், சிலருக்கு சவால்கள் நிறைந்தும் இருக்கும்.

அந்த வகையில் 2026 ஆம் ஆண்டின் சில மாதங்கள் ஒவ்வொரு ராசிக்கும் அதிர்ஷ்டமானதாக இருக்கும் அதே வேளையில் சில மாதங்கள் சிரமங்கள் நிறைந்து, பல்வேறு சோதனைகளை தரும் வகையில் இருக்கும். இப்போது 2026-ல் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் எந்த மாதம் சிரமமானதாக இருக்கும் என்பதைக் காண்போம்.

Horoscope 2026 Most Challenging Month For Each Zodiac Sign In 2026

மேஷம்

செவ்வாயை அதிபதியாக கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் சிரமங்கள் நிறைந்ததாக இருக்கும். இந்த மாதத்தில் வாழ்க்கையில் பலவிதமான தடைகளை சந்திக்க நேரிடும். கடுமையான மன அழுத்தத்தில் இருக்கக்கூடும். அமைதியற்றவராகவும், சிக்கித் தவிப்பவராகவும் இருப்பீர்கள். எந்த ஒரு முயற்சியிலும் தோல்வியைப் பெறக்கூடும்.

ரிஷபம்

சுக்கிரனை அதிபதியாக கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் பல்வேறு கஷ்டங்களைத் தரும் மாதமாக இருக்கும். இந்த மாதத்தில் வேலை, உறவு, நிதி போன்றவற்றில் எதிர்பாராத பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். மொத்தத்தில் இம்மாதத்தில் எதிர்பாராத சிரமங்களை சந்திக்க நேரிடும்.

மிதுனம்

புதனை அதிபதியாக கொண்ட மிதுன ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதம் நிறைய கஷ்டத்தைத் தரும். இந்த மாதத்தில் தெளிவு இல்லாமல் இருப்பீர்கள். கவனச் சிதறல் அதிகமாக இருக்கும். பேச்சுத்திறன் மோசமாக இருக்கும். இம்மாதத்தில் அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய இழப்பை சந்திப்பீர்கள்.

கடகம்

சந்திரனை அதிபதியாக கொண்ட கடக ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டில் ஜூன் மாதம் மோசமானதாக இருக்கும். அதுவும் இந்த மாதத்தில் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள். மனநிலை மோசமாக இருக்கும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அதிக உணர்ச்சிவசப்படுவதால் பல பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.

சிம்மம்

சூரியனை அதிபதியாக கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் சிரமங்கள் நிறைந்ததாக இருக்கும். இம்மாதத்தில் உங்களின் செயல்திறனுக்கு ஏற்ற பலன் கிடைக்காது. உங்களின் தன்னம்பிக்கை குறையும். ஈகோவால் உறவுகளில் பல பிரச்சனைகளை சந்திப்பீர்கள். மொத்தத்தில் இம்மாதம் இந்த ஆண்டின் மற்ற மாதங்களை விட மோசமானதாக இருக்கும்.

கன்னி

புதனை அதிபதியாக கொண்ட கன்னி ராசியைச் சேர்ந்தவர்களுக்கு 2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதம் மோசமானதாக இருக்கும். இந்த மாதத்தில் மனதில் குழப்பங்கள் அதிகமாக இருக்கும். எந்த முடிவையும் எடுக்க முடியாமல் சிரமப்படுடீவர்கள். வேலைகள் தாமதமாகும். எந்த வேலையை செய்தாலும் முடிக்க முடியாமல் சிரமப்படக்கூடும்.

துலாம்

சுக்கிரனை அதிபதியாக கொண்ட துலாம் ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் கஷ்டங்கள் நிறைந்த மாதமாக இருக்கும். இந்த மாதத்தில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிமும். உறவுகளில் பதட்டங்கள் அதிகரிக்கும். வேலையில் மிகுந்த அழுத்தத்தை சந்திக்க நேரிடும். இலக்குகளை அடைய முடியாமல் சிரமப்படுவீர்கள்.

விருச்சிகம்

செவ்வாயை அதிபதியாக கொண்ட விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டில் மே மாதம் மோசமாக இருக்கும். இந்த மாதத்தில் பல வலிகளை சந்திப்பீர்கள். வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்ததாக இருக்கும். வேலை மற்றும் நிதி நிலையில் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். மனதில் கஷ்டங்கள் அதிகரிக்கும்.

தனுசு

குரு பகவானை அதிபதியாக கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் சிக்கல் நிறைந்ததாக இருக்கும். வேலைப்பளு அதிகரிக்கும். இதன் மூலம் மிகுந்த மன அழுத்தத்திற்கும் ஆளாவீர்கள். வாழ்க்கை இறுக்கமாக இருக்கும். ஒவ்வொரு நாளும் மோசமாக இருக்கும். தொழில், குடும்பம், நிதி போன்றவற்றில் ஏராளமான பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.

மகரம்

சனி பகவானை அதிபதியாக கொண்ட மகர ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் தான் போராட்டம் நிறைந்ததாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகளால் சிரமப்படுவீர்கள். கடின உழைப்புக்கான பலன் கிடைக்காமல் கஷ்டப்படுவீர்கள். வாழ்வின் மீது ஒருவித வெறுப்பு ஏற்படும். தனிப்பட்ட வாழ்க்கையிலும் நிறைய பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.

கும்பம்

சனி பகவானை அதிபதியாக கொண்ட கும்ப ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் சிரமங்கள் நிறைந்ததாக இருக்கும். வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எந்த வேலையை செய்தாலும் தோல்வியை சந்திக்க நேரிடும். புதிய முயற்சிகளை இம்மாதத்தில் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகரிக்கும்.

மீனம்

குரு பகவானை அதிபதியாக கொண்ட மீன ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் மோசமாக இருக்கும். இம்மாதத்தில் பொறுப்புக்களும், அழுத்தங்களும் அதிகரிக்கும். இந்த மாதத்தில் புது வேலைகளை தொடங்குவதைத் தவிர்ப்பது நல்லது. இல்லாவிட்டால் இழப்புக்களையே சந்திக்க நேரிடும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Monday, December 15, 2025, 15:16 [IST]
Desktop Bottom Promotion