Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
இந்த 5 ராசிக்காரங்க 2025-ல் அவங்க வாழ்க்கையில் பேரழிவுகளை சந்திக்கப் போறாங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
Horoscope 2025: 2025 ஆம் ஆண்டு தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ளது. ஒவ்வொருவரும் வரப்போகிற ஆண்டிற்கென சில திட்டங்களையும், எதிர்பார்ப்புகளையும் கொண்டிருப்பார்கள். ஜோதிட சாஸ்திரத்தின் படி நாம் என்னதான் முயற்சி செய்தாலும் நம்முடைய முயற்சிகளை ஆதரிப்பதில் கிரக நிலைகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன.
2025 ஆம் ஆண்டு சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான ஆண்டாக இருந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு இது சோதனையான ஆண்டாக இருக்கப்போகிறது. இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் பேரழிவை சந்திக்கபோகிறார்கள். 2025 ஆண்டிற்கான கணிப்புகளின் படி சில ராசிக்காரர்கள் சவால்களையும், பிரச்சனைகளையும் சந்திக்கப் போகிறார்கள்.

கிரக நிலைகள் காரணமாக அதிக பிரச்சனைகள் மற்றும் அவப்பெயர்களை சந்திக்க வாய்ப்புள்ளது. தொழில் வாழ்க்கை மட்டுமின்றி அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பின்னடைவை சந்திக்கப் போகிறார்கள். 2025 ஆம் ஆண்டில் பெரிய நஷ்டத்தை சந்திக்கப் போகும் அந்த ராசிக்காரர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே உங்களுக்கு வரப்போகிற ஆண்டு மிகவும் கடினமான ஆண்டாக இருக்கும். உங்கள் பணியிடத்தில் மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களால் பல சிரமங்களை சந்திக்க நேரிடும். உங்கள் இலக்கில் பல தடைகள் உருவாகும்.
நிதி விஷயங்களில் பல சிரமங்கள் ஏற்படலாம், எனவே இந்த நேரத்தில் பெரிய முதலீடுகள் செய்வதைத் தவிர்க்கவும். தனிப்பட்ட உறவுகளில் ஏற்ற இறக்கங்களை சந்திக்க வேண்டி வரும். குடும்பத்தினர் மற்றும் சில நண்பர்களிடம் கவனமாக இருங்கள். குடும்ப உறவுகள் தொடர்பான முடிவுகளை நன்கு ஆலோசித்து எடுங்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு பிறக்கப்போகிற புது வருடம் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் டென்ஷன் அதிகரிக்கலாம், எனவே மன அழுத்தம் அதிகரிக்கும். இதனால் ஆரோக்கியத்திலும் பிரச்சினைகள் ஏற்படலாம்.
தனிப்பட்ட மற்றும் சமூக உறவுகளில் குழப்பம் ஏற்படலாம். சில உறவினர்களால் நீங்கள் ஏமாற்றப்படலாம் அல்லது வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்கள் துரோகம் செய்யலாம். இந்த ஆண்டு உங்கள் ஆற்றலை சரியான திசையில் செலவிட வேண்டியிருக்கும், இல்லையெனில் பல சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இந்த வருடம் அதிக பலன்களை எதிர்பார்த்து ஏமாற வேண்டாம். சனி நான்காமிடத்தில் இருப்பதால் மார்ச் மாதம் வரை நற்பலன்கள் எதுவும் கிடைக்காது. சனியின் பாதகமான பலன் காரணமாக, இந்த ஆண்டு தனுசு ராசிக்காரர்கள் தொழில், காதல் வாழ்க்கை மற்றும் நிதி நிலைமையில் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். குடும்ப உறவுகள் மற்றும் நிதி வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கும். பொறுமையும் , சகிப்புத்தன்மையும் இல்லையென்றால் இந்த வருடம் நீங்கள் பல நஷ்டங்களை சந்திக்க நேரிடும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் 2025-ல் தங்கள் வாழ்க்கையில் பல விஷயங்களில் மோதல்களை சந்திக்க நேரிடும். குறிப்பாக வேலை மற்றும் தொழிலில் அவர்கள் பல சவாலான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும். குருபகவான் பாதகமான நிலையில் இருப்பதால், நிதி நிலையில் ஏற்ற தாழ்வுகள் மற்றும் செலவுகள் அதிகரிக்கும்.
எந்த ஒரு முக்கியமான முதலீடு செய்வதற்கும் முன்னும் கவனமாக சிந்திக்க வேண்டும். அவர்களின் ஐந்தாம் வீட்டிற்கு சுக்கிரன் வருவதால், அவர்கள் காதல் வாழ்க்கையிலும் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குடும்ப உறுப்பினர்களிடையே சில வாக்குவாதங்கள் ஏற்படலாம்.
மீனம்
பாதகமான கிரக நிலைகளால் வரப்போகிற ஆண்டில் மீன ராசிக்காரர்கள் உடல்நலம் மற்றும் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குடும்ப உறுப்பினரின் ஆரோக்கியப் பிரச்சினையால் பெரிய செலவுகள் வரும். அவர்களின் ஆரோக்கியத்தால் மனக்கவலைகள் அதிகரிக்கலாம்.
பொருளாதார நிலையைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு ஒரு மிகவும் இறங்கு முகமாக இருக்கும். திடீர் செலவுகள் அதிகரிக்கும். உறவுகளில் எதிர்மறை உணர்வுகள் நிறைந்திருக்கும். உங்கள் உறவுகளைப் பாதுகாக்க பொறுமை மிக மிக அவசியம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
