2025-ல் இந்த 6 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்குக்கு பிரம்மாண்டமா திருமணம் நடக்க வாய்ப்பிருக்காம்...!

Horoscope 2025: திருமணம் என்பது ஒருவரின் தலைவிதியை மாற்றும் முக்கியமான நிகழ்வாகும். வாழ்க்கையில் திருமணம் எப்போது நடக்குமென்று யாராலும் கணிக்க முடியாது. நீங்கள் விரும்பும் போது அது நடக்காது. ஆனால் சில சமயங்களில் எதிர்பார்க்காத நேரத்தில் திருமண சந்திப்பைப் பார்க்கிறோம்.

வரப்போகிற ஆண்டில் சிலருக்கு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது, சிலருக்கு தள்ளிப்போக வாய்ப்புள்ளது. 2025 ஆம் ஆண்டு கணிப்புகளின் படி, சில நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு 2025-ல் திருமண யோகம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த பதிவில் எந்தெந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு 2025-ல் திருமணம் நடக்கப்போகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

Horoscope 2025 People Born On These Nakshatras Get Married in 2025 in Tamil

அஸ்வினி

கேதுபகவான் அஸ்வினி நட்சத்திரத்தை ஆட்சி செய்கிறார். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்போதும் சுதந்திரத்தை விரும்புவார்கள். 2025 அவர்கள் வாழ்க்கையில் மாற்றத்திற்கான ஆண்டாக இருக்கும், எனவே இந்த ஆண்டு அவர்களின் விருப்பங்களைப் புரிந்துகொள்ளும் ஒரு வாழ்க்கைத்துணையை திருமணம் செய்ய வாய்ப்புள்ளது. அவர்கள் வாழ்க்கையில் பரஸ்பர புரிதல் மற்றும் நெருக்கம் அதிகரிக்கும்.

ரோகிணி

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இது அதிர்ஷ்டமான நேரம். கிரகப் பெயர்ச்சிகள் பொதுவாகப் புத்தாண்டில் அவர்களுக்குச் சாதகமான பல மாற்றங்களைக் கொண்டு வரும். திருமணம் அவர்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது மற்றும் அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் திருமணம் அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும். வாழ்வில் ஏற்படும் நல்ல மாற்றங்கள் அவர்களையே ஆச்சரியப்படுத்தும்.

Horoscope 2025 People Born On These Nakshatras Get Married in 2025 in Tamil

மிருகசீரிஷம்

2025-ல் மிருகசீரிஷ நட்சத்திரகாரர்களுக்கு அவர்களின் விருப்பப்படி திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. அவர்களின் ஆளும் கிரகம் செவ்வாய். 2025 ஆம் ஆண்டு அவர்களுக்கு திருமணத்திற்கு உகந்த ஆண்டு என்பதில் சந்தேகமில்லை. திருமணம் மட்டுமின்றி இந்த ஆண்டு அவர்களின் அனைத்து ஆசைகளும் நிறைவேறப்போகிறது.

பூசம்

பூச நட்சத்திரம் சனிபகவானால் ஆளப்படுகிறது. 2025 அவர்கள் திருமண வாழ்க்கையில் நுழைவதற்கு உகந்த ஆண்டாகும். குடும்பத்தின் மீதான அர்ப்பணிப்பு, அன்பு, நம்பகத்தன்மை மற்றும் உணர்ச்சிவசப்படுதல் போன்ற அவர்களின் குணங்கள் அவர்களுடைய திருமண வாழ்வை சிறப்பானதாக மாற்றும். 2025-ல் அவர்கள் வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வரும்.

உத்திரம்

சூரியன் உத்திரம் நட்சத்திரத்தின் ஆளும் கிரகமாக உள்ளது. அவர்கள் அனைத்து விஷயத்திலும் மிகவும் பொறுப்பானவர்களாக இருப்பார்கள். எனவே திருமண விஷயத்திலும் அவர்கள் பொறுப்பானவர்களாக இருக்கிறார்கள். பெரும்பாலும் அவர்கள் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்காக காத்திருக்கிறார்கள். அதற்கு 2025 மிகவும் பொருத்தமான வருடமாக இருக்கும்.

ஸ்வாதி

ஸ்வாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வசீகரமானவர்கள் மற்றும் எப்போதும் தங்கள் சுதந்திரத்தை விரும்புகிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் ஒருவருக்காக அவர்கள் இத்தனை ஆண்டு காலம் காத்திருந்தார்கள். இப்போது அவர்களின் எதிர்பார்ப்புகளும், ஆசைகளும் பூர்த்தியாகப் போகிறது. எனவே 2025-ல் அவர்கள் சுதந்திரத்தின் அவசியத்தைப் புரிந்துகொள்ளும் ஒரு வாழ்க்கைத்துணையைப் பெற முடியும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Friday, December 27, 2024, 22:57 [IST]
Desktop Bottom Promotion