Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
500 ஆண்டுகள் கழித்து 2026-ல் உருவாகும் இரட்டை ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்..
Hans And Malavya Rajyog On 2026 After 500 Years: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். சில சமயங்களில் சில கிரகங்களின் நிலைகள் மற்றும் சேர்க்கைகளால் உருவாகும் யோகங்கள் பல ஆண்டுகள் கழித்து உருவாகும்.
அந்த வகையில் 2026 ஆம் ஆண்டில் பல மங்களகரமான ராஜயோகங்கள் உருவாகவுள்ளன. அதில் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான் 2026 ஆம் ஆண்டில் தனது உச்ச ராசியான கடக ராசிக்குள் நுழைந்து ஹன்ஸ் ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். அதே வேளையில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் தனது உச்ச ராசியான மீன ராசிக்குள் நுழைந்து மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார்.

இப்படி இவ்விரு கிரகங்களும் ஒரே வேளையில் சுமார் 500 ஆண்டுகளுக்கு பின் உருவாகவுள்ளது. இந்த யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. அதோடு நல்ல புகழையும், செழிப்பையும் பெறுவார்கள்.
மேலும் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். மனதில் சந்தோஷம் பெருகும். இப்போது 2026-ல் உருவாகும் ஹன்ஸ் மற்றும் மாளவ்ய ராஜயோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
2026-ல் உருவாகும் ஹன்ஸ் மற்றும் மாளவ்ய ராஜயோகங்களால் மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். அதுவும் 7 ஆவது வீட்டில் ஹன்ஸ் ராஜயோகமும், 3 ஆவது வீட்டில் மாளவ்ய ராஜயோகமும் உருவாகவுள்ளன. இதன் விளைவாக வருமானத்தில் உயர்வு ஏற்படும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கையும் துணையும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
கன்னி
2026-ல் உருவாகும் ஹன்ஸ் மற்றும் மாளவ்ய ராஜயோகங்களால் கன்னி ராசிக்காரர்களின் வாழ்வில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். அதுவும் 11 ஆவது வீட்டில் ஹன்ஸ் ராஜயோகமும், 7 ஆவது வீட்டில் மாளவ்ய ராஜயோகமும் உருவாகவுள்ளன. இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலைமை மேம்படும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வருமானத்தில் கணிசமான உயர்வு ஏற்படும். புதிய வழிகளில் பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வங்கி இருப்பில் உயர்வு ஏற்படும். சமூகத்தில் செல்வாக்கு மிக்க நபர்களின் நட்பு கிடைக்கும். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றின் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.
மேஷம்
2026-ல் உருவாகும் ஹன்ஸ் மற்றும் மாளவ்ய ராஜயோகங்களால் மேஷ ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். அதுவும் 4 ஆவது வீட்டில் குருவால் ஹன்ஸ் ராஜயோகமும், 12 ஆவது வீட்டில் மாளவ்ய ராஜயோகமும் உருவாகவுள்ளன. இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவார்கள். மேலும் புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்களும் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். வாழ்க்கை இனிமையாகவும், செழிப்பாகவும் இருக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். பரம்பரை சொத்துக்கள் பிரச்சனையின்றி கைக்கு வந்து சேரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
