குரு அதிசார பெயர்ச்சி 2026: குரு பார்வையால் கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிக்காரர்கள் இவங்கதான்! ஜோதிடர் கணிப்பு!

Guru Peyarchi 2026: ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமான மற்றும் முழுமையான பலன்களைத் தரும் கிரகமாக குரு கருதப்படுகிறார். தேவர்களின் குருவாகவு கருதப்படும் குரு பகவான், தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். இவர் ஒரு ராசியில் சுமார் 1 ஆண்டு காலம் பயணிப்பார். தற்போது குரு பகவான் தனது உச்ச ராசியான கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த குரு பகவான் அக்டோபர் 31 ஆம் தேதி ராசியை மாற்றவுள்ளார்.

Guru Peyarchi 2026 These 3 Zodiac Signs Will Get Koteeswara Yoga And Become Rich Predicts Astrologer Jeyalakshmi

அதுவும் குரு பகவான் சிம்ம ராசிக்கு அதிசாரமாக இடப்பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் குரு பகவானின் பார்வை சில ராசிக்காரர்களுக்கு கிடைக்கிறது. குருவின் பொன்னான பார்வையால் சில ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது. குருவின் பார்வை பலத்தால் யாரெல்லாம் கோடீஸ்வரர்கள் ஆகப்போகிறார்கள் என்பது குறித்து ஜோதிடர் ஜெயலட்சுமி அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார். உங்க ராசியும் இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்

செவ்வாய் பகவானின் ஆதிக்கத்தில் பிறந்த மேஷ ராசிக்காரர்கள் வீரமும் தைரியமும் கோபமும் ஆக்ரோஷமும் ஒருங்கே அமையப் பெற்றவர்கள். 5 ஆம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு குரு இடப்பெயர்ச்சியாகி உங்கள் ராசியை பார்க்கிறார். புத்திரகாரகனும், தனகாரகனுமான குரு 5 ஆம் வீட்டில் அமர்வது அதிர்ஷ்டத்தைத் தரும். திருமணமாகி பல ஆண்டுகளாக வாரிசு இல்லாமல் எதிர்பார்த்து ஏங்கியவர்களுக்கு வாரிசு உண்டாகும். திருமண வயதில் திருமணத்திற்காக காத்திருக்கும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் திருமண யோகம் கைகூடி வரும்.

புதிய சொத்துகள் வாங்கக் கூடிய வாய்ப்புகளும், நீண்டகால கனவுகள் யாவும் நிறைவேறும், புதிய திட்டங்களும், ஆசைகளும் நிறைவேறும். உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டினையும் பதினொன்றாம் வீட்டினையும் குரு பார்ப்பதால் எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். மொத்தத்தில் அதிசார குரு பெயர்ச்சி கோடீஸ்வர யோகத்தையும், அதிர்ஷ்டத்தையும் அள்ளித் தரப்போகிறது. அனுபவிக்கத் தயாராகுங்கள்.

தனுசு

ஓடிப் போனவனுக்கு ஓன்பதில் குரு என்று ஒரு ஜோதிட பழமொழி உள்ளது. தனுசு ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசி நாதனான குருவே 9ஆம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்ப்பது நல்லது. பாக்ய ஸ்தான குரு உங்களுடைய கஷ்டங்களை போக்குவார். கண்ணீரைத் துடைப்பார், ஆறுதலை தருவார். நினைத்த காரியம் நிறைவேறும்.

வாழ்க்கையில், முன்னேற்றமும் வளர்ச்சியும் யோகமும் வந்து சேரும். குரு 7 ஆம் பார்வையாக ராசிக்கு 3 ஆம் இடத்தை பார்ப்பதால் புது முயற்சிகளில் வெற்றி பெறலாம். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குரு தன் 9 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு 5 ஆம் இடத்தை பார்க்கப் போவதால் உங்கள் கஷ்ட நிலைகள் மாறும். குரு பகவான் உங்களுக்கு கோடிகளை கொட்டித் தரப்போவதால் பொருளாதார நெருக்கடி நீங்கும்.

கும்பம்

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களுக்கு குரு பகவான் உங்க ராசிக்கு ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் பயணம் செய்வதால், உங்களுக்கு குரு பகவானின் நேரடி பார்வை கிடைக்கிறது. உங்களின் புகழ், அந்தஸ்து, செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். தடைபட்டிருந்த திருமணம், சுபகாரியங்கள் கை கூடி வரும். இதுநாள் வரை என்னடா வாழ்க்கை என்று ஒருவித வெறுப்பு மனநிலையில் இருந்த கும்ப ராசிக்காரர்களுக்கு அதிசார குரு பெயர்ச்சி வாழ்க்கையில் அதிசயங்களை நிகழ்த்தப் போகிறது.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Wednesday, October 14, 2026, 9:33 [IST]
Desktop Bottom Promotion