கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு!

Guru Peyarchi 2026 Effect: தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளாகவே திமுகவும், அதிமுகவும் மாறி மாறி ஆட்சி நடத்திக் கொண்டு வந்தார்கள். 2026-ல் நடந்த சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்று விஜய் தலைமையிலான ஆட்சி பதவியேற்றியுள்ளது. இந்த ஆட்சி மாற்றம் தமிழக மக்கள் விரும்பிய மாற்றமாக இருந்தாலும் இதை திமுகவும், அதிமுகவும் ஏற்றுக் கொள்ள முடியாமல், விஜய் தலைமையிலான ஆட்சி நீடிக்காது சீக்கிரமே கவிழ்ந்துவிடும் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

அதாவது திமுக ஆட்சியில் இருந்தால், அதிமுக பல குற்றச்சாட்டுகளை முன் வைக்கும். அதே போல அதிமுக ஆட்சியில இருந்தா, திமுக பல குற்றச்சாட்டுகளை முன் வைக்கும். இப்படி மாறி மாறி ஆட்சி செய்தாலும், திமுகவும் அதிமுகவும் சில விசயங்களில் விட்டு கொடுக்காமல் மறைமுக கூட்டணி போட்டுக் கொள்வார்கள்.

Guru Peyarchi 2026 Effect Big Danger for CM Vijay s Rule After Jupiter Exits Cancer An astrologer s prediction

இப்போது தவெக ஆட்சியில் இருப்பதால் அதிமுகவும், திமுகவும் கூட்டணி சேர்ந்து விஜய் அரசு மேல் குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்கள். அதாவது ஆட்சி நீடிக்காது, சில மாசம் தான் தவெக ஆட்சியில் இருக்கும் என்று அதிமுகவை சேர்ந்த மாஜி அமைச்சர்கள் சொல்கிறார்கள். அதே போலதான் திமுக 2.0-ன்னு சொல்லி பிரசாரம் செய்தவர்கள், தவெக ஆட்சியை பற்றி குறை சொல்வது மட்டுமில்லாமல் இந்த ஆட்சி விரைவில் கவிழும்-ன்னு சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

உண்மையில் தமிழ்நாட்டில் அரசியல் ஸ்திர தன்மைதான் இருக்கா? ஆட்சி கவிழக்கூடிய நிலையில்தான் இருக்கா என்பது பற்றி நவகிரகங்களின் சஞ்சாரம், கிரகங்களின் கூட்டணியை வைத்து ஜோதிடர் ஜெயலட்சுமி அவர்கள் கணித்து தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது, "அரச கிரகமாக குரு பகவான் இப்போது கடக ராசியில உச்சம் பெற்று பயணம் செய்கிறார். முதல்வர் விஜய் கடக ராசி. இப்போது அவருக்கு ஜென்ம குரு.

குரு பகவான் அதிசாரமாக அக்டோபர் மாத இறுதியில சிம்ம ராசிக்கு போய் கேது கூட சில மாசம் கூட்டணியில் இருப்பார். அதன் பின் குரு வக்ரமாகி மறுபடியும் கடக ராசிக்கு வந்து 2027 ஆம் ஆண்டு ஜூன் மாசம் வரைக்கும் இருப்பார்.

இதற்கு இடையில் டிசம்பர் மாதம் ராகு கேது பெயர்ச்சி நடக்கப்போகிறது அப்போது கேது சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கு கேது இடப்பெயர்ச்சி அடைவார். ராகு மகர ராசியில இருந்து கடக ராசியை பார்வையிடுவார். இந்த சமயத்தில கேது உடன் குரு கூட்டணி சேர்ந்து பயணம் செய்வார்.

2027 ஜூன் மாதம் மீண்டும் குரு பெயர்ச்சி நடக்கிறது. அப்போது கடக ராசியில உச்சம் பெற்று பயணம் செய்யும் குரு சிம்ம ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையவுள்ளார். நவம்பர் மாதம் அதிசாரமாக கன்னி ராசிக்கு பயணம் செய்வார்.

2027 ஆம் ஆண்டிலும் குரு 3 ராசியில் பயணம் செய்வார். 2027 ஆம் ஆண்டில் குரு ஜனவரி 25 அன்று கடகத்தில் உள்ள ஆயில்யம் நட்சத்திரத்தில் பயணிப்பார். 2027 ஜூன் 26 அன்று மகம் நட்சத்திரத்திலும், ஆகஸ்ட் 31 அன்று பூரம் நட்சத்திரத்திலும் பயணிப்பார். நவம்பர் 4 அன்று உத்திரத்தில் குரு பயணிப்பார்.

குரு பகவான் பயணம் உத்திரம், ஹஸ்தம், சித்திரை நட்சத்திரங்களில் பயணம் செய்யப்போகும் காலத்தில தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் வரலாம். ஆனால் அது ஆட்சி மாற்றமாக இருக்காது. விஜய் அமைச்சரவையில சில அமைச்சர்கள் மாற்றமாக இருக்கலாம். புதிய கட்சி விஜய் கூட்டணிக்கு வந்து ஆதரவு கொடுக்கலாம். அதன் மூலமாக அவர்களும் அமைச்சரவையில் இடம் பெறலாம்" என்று கூறினார்.

2027 சனியின் ராசி மற்றும் நட்சத்திர பெயர்ச்சி

சனி பகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி மீன ராசியில் இருந்து மேஷம் ராசிக்கு 2027 ஜூன் மாதம் இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். ஆகஸ்ட் மாதம் வக்ரமடையும் சனி அக்டோபரில் மறுபடியும் மீன ராசிக்கு திரும்புவார்.

முண்டேன் அஸ்ட்ராலஜி (Mundane Astrology)படி நாம் பார்த்தால் உத்திரம், அஸ்தம்,சித்திரை நட்சத்திரங்கள் தமிழ்நாடு உள்ளிட்ட தென் இந்திய மாநிலங்களை குறிப்பிடுகிறது.

2027ஆம் ஆண்டு முற்பகுதியில் கடக ராசியில் உச்சம் பெற்று பயணிக்கும் குரு பகவான் ஆண்டின் பிற்பகுதியில் உத்திரம், ஹஸ்தம், சித்திரை நட்சத்திரங்களில் இருக்கப்போவதால் விஜய் ஆட்சியின் அரசியல் நிர்வாகத்தில் சில மாற்றங்கள் ஏற்படலாம்.

சனி பகவான், 2027 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், ரேவதி நட்சத்திரத்திலும், ஜூன் 3 அன்று அசுவினி நட்சத்திலும் பயணிப்பார். அக்டோபர் மாதம் வக்ரகதியில் மீண்டும் ரேவதிக்கு இடப்பெயர்ச்சி அடைவார் சனிபகவான்.

அதே போல சனி பகவானின் பயணத்தை வைத்து நாம பார்த்தாலும் 2027 ஜூன் மாதம் சனிபகவான் கடக ராசிக்கு 10ஆம் வீடான தொழில், கர்ம ஸ்தானத்திற்கு வரும் போது முதலமைச்சர் விஜய்க்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும். அரசியல் ரீதியான நெருக்கடிகளும் ஏற்படும். ஆனால் அதை எல்லாம் சமாளிக்கும் சக்தியை குரு பகவான் கொடுப்பார்.

வரும் 2027ஆம் ஆண்டு குரு பகவானின் பார்வை சிம்ம ராசியில் இருந்து மேஷ ராசியில் நீச்சமடைந்து பயணிக்கும் சனி பகவானின் மீது விழுவதால் எதிர்கட்சியினரின் பிரச்சனையை, நெருக்கடிகளை முதலமைச்சர் விஜய் எளிதில் சமாளிப்பார்.

2027ஆம் ஆண்டு இறுதியில் அதிசார குரு கன்னி ராசிக்கு வரும் போது மீன ராசியில் வக்ர நிலையில் பயணிக்கும் சனியின் பார்வை கிடைப்பதால், நிர்வாக ரீதியாக சில மாற்றங்கள் ஏற்படலாம்.

கடக ராசியில் ஜென்ம கேது பயணிக்கும் காலத்தில் மகர ராசியில் பயணிக்கும் ராகுவின் பார்வையும் கேதுவிற்கு கிடைக்கிறது. இதனால் விஜய்க்கு அரசியல் சார்ந்த முடிவுகள் எடுப்பதில் சில தடுமாற்றங்கள் ஏற்பட வாயப்பு உள்ளது. அந்த நேரத்தில் கூட்டணி கட்சியினரின் அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம்." என்று ஜோதிடர் கூறினார்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Friday, October 9, 2026, 17:02 [IST]
Desktop Bottom Promotion