Latest Updates
-
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
இந்த 3 ராசிகளில் பிறந்த பெண்கள் சரியான பிடிவாதகாரங்களாம்... இவங்க நினைச்சத அடையாம ஓய மாட்டாங்களாம்..
Most Stubborn Zodiac Sign: உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான குணங்கள் இருக்கும். சிலர் எந்த பிரச்சனையும் வேண்டாம் என்று பொறுமையாக இருப்பார்கள். இன்னும் சிலர் தான் நினைத்தது நடந்தாக வேண்டும் என்ற பிடிவாத குணத்துடன் இருப்பார்கள். வேறு சிலரோ அதிகமாக கோபம் கொள்பவராக இருப்பார்கள். இவை அனைத்தும் ஒருவர் பிறக்கும் போது உள்ள கிரகங்களின் நிலைகளைப் பொறுத்தது என்று ஜோதிடம் கூறுகிறது.
வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் உள்ளன. இந்த 12 ராசிகளுக்கும் அதிபதிகள் உள்ளனர். இந்த அதிபதியை பொறுத்து ஒவ்வொரு ராசியினரின் குணாதிசயங்களும் இருப்பதாக ஜோதிடம் கூறுகிறது. அதில் சில ராசிக்கார பெண்களை எடுத்துக் கொண்டால், அவர்கள் யாராலும் கட்டுப்படுத்த முடியாத கோபத்தைக் கொள்பவராகவும், மிகவும் பிடிவாத குணத்தைக் கொண்டவராகவும் இருப்பார்கள்.

மேலும் தான் நினைத்தது தான் சரி என்று இருப்பார்கள் மற்றும் ஒரு வேலையை செய்ய நினைத்துவிட்டால், அதை முடிக்காமல் ஓயமாட்டார்கள். இப்படிப்பட்ட குணங்களை எந்த ராசி பெண்கள் கொண்டிருப்பார்கள் என்பதை இப்போது காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். இந்த மேஷ ராசியைச் சேர்ந்த பெண்கள் மிகவும் கோபமாகவும், பிடிவாத குணத்தைக் கொண்டவராகவும் இருப்பார்கள். சில நேரங்களில் இவர்கள் கோபம் கொள்ளும் போது கொடூரமாக நடந்து கொள்வார்கள். ஆனால் இவர்களின் கோபம் எப்போதும் ஒரு சரியான விஷயத்திற்காகவே இருக்கும். அதிக பிடிவாத குணத்தைக் கொண்டிருப்பதால், வாழ்க்கையில் ஒரு நல்ல நிலையை கட்டாயம் அடைவார்கள். முக்கியமாக இந்த ராசியைச் சேர்ந்த பெண்கள் தைரியமானவர்கள், எதற்கும் அஞ்சமாட்டார்கள். ரிஸ்க் எடுக்க தயங்கமாட்டார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதி சூரியன். இந்த சிம்ம ராசியைச் சேர்ந்த பெண்களுக்கு கோபம் அதிகமாக வரும் மற்றும் அதிக பிடிவாத குணத்தைக் கொண்டிருப்பார்கள். சிறுசிறு விஷயங்களுக்கும் அதிகமாக கோபப்படுவார்கள். இருப்பினும் இவர்கள் கடின உழைப்பாளிகள், மிகவும் நேர்மையானவர்கள். வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற முயற்சிப்பார்கள். இந்த ராசி பெண்களால் தவறான விஷயங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாது. எதையும் வெளிப்படையாகவும், ஒருவரது முகத்திற்கு நேராகவும் பேசுவார்கள். இயற்கையாகவே ஆதிக்கம் செலுத்துவார்கள். யாரேனும் பிரச்சனையில் இருந்தால், அவருக்கு உதவ எப்போதும் தயாராக இருப்பார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். இந்த ராசியைச் சேர்ந்த பெண்களும் அதிக பிடிவாத குணத்தைக் கொண்டிருப்பார்கள் மற்றும் இவர்களுக்கும் அதிக கோபம் வரும். இந்த ராசி பெண்கள் தாங்கள் நினைத்ததை செய்து முடித்த பின்னரே ஓய்வெடுப்பார்கள். மேலும் இவர்கள் எந்த தவறான செயலையும் பொறுத்துக் கொள்ள முடியாது. இந்த ராசி பெண்கள் கோபத்தால் உறவுகளை கெடுத்துக் கொள்வார்கள். சில நேரங்களில் அதிக கோபத்தால் தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்வார்கள். இவர்கள் மிகவும் தைரியமானவர்கள் மற்றும் துணிச்சலானவர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications