Ganesh Chaturthi: உங்க ராசிப்படி இன்னிக்கு விநாயகருக்கு இத வாங்கி கொடுங்க.. வாழ்வில் உள்ள கஷ்டங்கள் நீங்கும்..

Ganesh Chaturthi 2025: விநாயகர் சதுர்த்தி என்பது இந்துக்கள் கொண்டாடும் மிகவும் முக்கியமான பண்டிகைகளுள் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியானது ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி நாளில் கொண்டாடப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி முழுமுதற் கடவுளான விநாயகர் பிறந்த நாளாகும். இந்நாளில் மக்கள் களிமண் விநாயகரை வாங்கி வந்து, அவரை அழகாக அலங்கரித்து, அவருக்கு பிடித்த பலகாரங்களை செய்து, பூஜித்து வழிபாடு செய்வார்கள். இந்த ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி, அதாவது இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

Ganesh Chaturthi 2025 What Each Zodiac Signs Should Offer To Lord Ganesha To Get His Blessings

அனைத்து தெய்வங்களிலும் முதன்மையானவராக வணங்கப்படும் விநாயகர், அனைத்து தொடர்ச்சியான தடைகளையும் நீக்குபவர் என்றும், தனது பக்தர்களுக்கு மிகுதியையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் அருளுபவராக கருதப்படுகிறார். விநாயகர் சதுர்த்தி நாளில் விநாயகரை மகிழ்விக்கவும், அவரது அருளைப் பெறவும் மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்கள் எந்த பொருட்களை விநாயகருக்கு படைக்க வேண்டும் மற்றும் எந்த மந்திரத்தை சொல்ல வேண்டும் என்பது குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்

மேஷ ராசியைச் சேர்ந்தவர்கள் "ஓம் வக்ரதுண்டாய ஹோம்" என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். மேலும் இவர்கள் விநாயகருக்கு வெல்லத்தை வாங்கி தந்து வழிபாடு செய்வது நல்லது.

ரிஷபம்

ரிஷப ராசியைச் சேர்ந்தவர்கள் "ஓம் ஹீ கிரீன் ஹீ" என்ற மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும். இந்த ராசிக்காரர்கள் விநாயகருக்கு கற்கண்டு வாங்கி கொடுத்து வழிபாடு செய்தால், வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.

மிதுனம்

மிதுன ராசியை சேர்ந்தவர்கள் "ஓம் கண கணபதயே நமஹ" அல்லது "ஸ்ரீ கணேஷாய நமஹ" என்ற மந்திரத்தை சொல்வதோடு, விநாயகருக்கு பாசிப்பருப்பு லட்டு படைத்து வழிபாடு செய்வது நல்லது. இதனால் வாழ்வில் முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கும்.

கடகம்

கடக ராசியைச் சேர்ந்தவர்கள் "ஓம் வக்ரதுண்டாய நமஹ" என்ற மந்திரத்தை பாராயணம் செய்து, விநாயகருக்கு சந்தனத்தை வாங்கி கொடுத்து வழிபாடு செய்ய வேண்டும். இதனால் விநாயகரின் பரிபூர்ண அருள் கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசியைச் சேர்ந்தவர்கள் கணபதியின் "ஓம் சுமங்கலயே நமஹ" என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். அதோடு இந்த ராசிக்காரர்கள் விநாயகருக்கு மோத்திசூர் லட்டு வாங்கி படைத்து வழிபாடு செய்வது நல்லது. இதன் மூலம் உங்கள் வாழ்க்கையிலிருந்த அனைத்து தடைகளும் நீங்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் "ஓம் சிந்தாமன்யே நமஹ" என்ற மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும். மேலும் விநாயகருக்கு உகந்த 21 வகையான இலைகளை படைத்து வழிபாடு செய்வது நல்லது. அந்த 21 இலைகளாவன மாசிப்பச்சை, கண்டங்கத்திரி, வில்வம், அருகம்புல், ஊமத்தை, இலந்தை, நாயுருவி, துளசி, மாவிலை, அரளி, விஷ்ணுகிராந்தி, நெல்லி, மருக்கொழுந்து, நொச்சி, ஜாதிக்காய் இலை, வெள்எருக்கு, வன்னி, கரிசலாங்கண்ணி, வெண்மருது, எருக்கு, மற்றும் தேவதாரு ஆகியவை. இப்படி வழிபாடு செய்வதனால் அனைத்து கவலைகளிலிருந்தும் விடுபடலாம்.

துலாம்

துலாம் ராசியைச் சேர்ந்தவர்கள் விநாயகப் பெருமானின் "ஓம் வக்ரதுண்டாய நமஹ" என்ற மந்திரத்தை சொல்வது நல்லது. மேலும் இந்த ராசிக்காரர்கள் 5 தேங்காய்களை விநாயகருக்கு வாங்கி வழிபாடு செய்வது சிறந்தது. இதன் மூலம் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வெற்றியை உறுதி செய்யும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியை சேர்ந்தவர்கள் "ஓம் நமோ பகவதே கஜானனய்" என்ற மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும். இவர்கள் விநாயகருக்கு சிவப்பு நிற மலர்கள் வாங்கி கொடுத்து வழிபடுவது நல்லது. இதனால் வாழ்க்கையில் உள்ள சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள்.

தனுசு

தனுசு ராசியை சேர்ந்தவர்கள் விநாயகரின் "ஓம் கண கணபதே நமஹ" என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். மேலும் இவர்கள் விநாயகருக்கு மஞ்சள் நிற பூக்களையும், லட்டுக்களையும் வாங்கி கொடுத்து வழிபடுவது நல்லது. இதன் மூலம் விநாயகர் உங்கள் வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து உங்கள் அனைத்து எளிய விருப்பங்களையும் நிறைவேற்றுவார்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் கணபதியின் "ஓம் கணபதயே நமஹ" என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். அதோடு இவர்கள் விநாயகருக்கு வெற்றிலை, ஏலக்காய், கிராம்பு போன்ற பொருட்களை வாங்கி கொடுத்து வழிபட வேண்டும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் "ஓம் அந்திரிக்ஷாய ஸ்வாஹா" என்ற மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும். மேலும் இவர்கள் விநாயகருக்கு கடலைமாவு லட்டுக்களையும், சிவப்பு மலர்களையும் வாங்கி கொடுத்து வழிபடுவது நல்லது. இது எல்லா துக்கங்களையும் போக்கி, நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் "ஓம் கண கணபதயே நமஹ" என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். அதோடு இந்த ராசிக்காரர்கள் குங்குமப்பூ மற்றும் தேனை வாங்கிக் கொடுத்து வழிபட வேண்டும். இது வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் போக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Wednesday, August 27, 2025, 10:16 [IST]
Desktop Bottom Promotion