12 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது...

Gajkesari Rajyog On Pitru Paksha 2025: நவகிரகங்களில் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுவது குரு. இந்த குரு ஒரு ராசியில் சுமார் 1 ஆண்டு காலம் இருப்பார். இப்படி ஒரு ராசியில் நீண்ட காலம் இருப்பதால் குருவின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

மேலும் குரு பகவான் ஒரு ராசியில் அதிக காலம் இருப்பதால், மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து அவ்வப்போது யோகங்களை உருவாக்குவார். அதே வேளையில் மனதின் காரணியாக கருதப்படும் சந்திரன் ஒரு ராசியில் 2 1/2 நாட்கள் வரை இருப்பார். இதனால் இந்த சந்திரன் அடிக்கடி மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்குவார்.

Gajkesari Rajyog On Pitru Paksha 2025 After 12 Years List Of Lucky Zodiac Signs

அந்த வகையில் சந்திரன் குரு பகவானுடன் ஒன்றிணைந்து உருவாக்கும் யோகம் தான் கஜகேசரி ராஜயோகம். இந்த ராஜயோகமானது செப்டம்பர் 14 ஆம் தேதி உருவாகவுள்ளது. ஆனால் பஞ்சாங்கத்தின் படி, இந்த ஆண்டு பித்ரு பட்சம்/மகாளய பட்சம் செப்டம்பர் 07 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 21 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த பித்ரு பட்சம் காலத்தில் கஜகேசரி ராஜயோகம் உருவாவது சற்று சிறப்பானது. அதுவும் இப்படியான நிகழ்வு சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் ஏற்படுகிறது.

இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் திடீர் செல்வத்தையும், அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வெற்றிகளையும் முன்னேற்றத்தையும் காண்பார்கள். இப்போது பித்ரு பட்ச காலத்தில் குரு சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

துலாம்

துலாம் ராசியின் 9 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். இதன் மூலம் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெற வாய்ப்புள்ளது. பணியிடத்தில் சிறப்பான செயல்திறனால் உங்களுக்கான ஒரு அடையாளத்தை உருவாக்குவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். மாணவர்களுக்கு வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசியின் முதல் வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஒவ்வொரு வேலையையும் ஆர்வத்துடன் செய்வதோடு, வெற்றிகரமாகவும் முடிப்பீர்கள். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.

கன்னி

கன்னி ராசியின் 10 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் தொழிலில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தம்பதிகளிடையே காதல் அதிகரிக்கும். இக்காலத்தில் உங்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். இந்த ஒப்பந்தங்கள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும் வகையில் இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Monday, September 8, 2025, 10:00 [IST]
Desktop Bottom Promotion