Latest Updates
-
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
100 ஆண்டுகளுக்கு பின் சிவராத்திரி அன்று உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்!
Gajkesari Rajyog On Aadi Shivratri 2025: இந்த ஆண்டின் ஆடி மாதம் பிறந்துவிட்டது. இந்த ஆடி மாதம் சிறப்பு வாய்ந்தது. அதுவும் இந்த ஆடி மாதத்தில் வரும் சிவராத்திரி நாளில் ஒரு அரிய நிகழ்வு உருவாகவுள்ளது.
ஜோதிடத்தின் படி நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதுடன், மற்ற கிரகங்களோடு சேர்ந்து யோகங்களையும் உருவாக்குகின்றன. இவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அந்த வகையில் ஆடி மாதத்தில் வரும் சிவராத்திரி ஜூலை 23 ஆம் தேதி வருகிறது.

இந்நாளில் மிகவும் சக்தி வாய்ந்த கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகமானது சுமார் 100 ஆண்டுகளுக்கு பின் ஆடி சிவராத்திரி நாளில் உருவாகிறது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களிடமும் காணப்படும்.
இருந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்து, நிதி ஆதாயங்கள் கிடைப்பதோடு, சமூகத்தில் மரியாதை போன்றவற்றை பெறுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. இப்போது 100 ஆண்டுகளுக்கு பின் ஆடி மாத சிவராத்திரி நாளில் உருவாகும் கஜகேசரி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 2 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகமானது உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் உயர் அதிகாரிகளால் ஈர்க்கப்பட்டு, பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொண்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும். நிதி ரீதியாக சாதகமாக இருக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். இதனால் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். பேச்சில் செல்வாக்கு அதிகரிக்கும். பேச்சால் பல வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மார்கெட்டிங், வங்கி, ஊடகம் போன்ற துறையில் இருப்பவர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். குறிப்பாக வருமானத்தில் உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்களைப் பெறக்கூடும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீர்க்கப்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது.
துலாம்
துலாம் ராசியின் 9 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவுகள் திறக்கப் போகிறது. வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் வரலாம். தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையலாம். தொழிலதிபர்கள் வணிகத்தை விரிவாக்கம் செய்வதற்கான புதிய வாய்ப்புகளைப் பெறலாம். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பேச்சால் பல வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். ஆளுமை மேம்படும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
