Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
2025-ல் உருவாகும் முதல் சக்தி வாய்ந்த கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது...
Gajkesari Rajyog On 09 January 2025: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றின் ராசி மாற்றமும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் கிரகங்களில் சந்திரன் மிகவும் வேகமாக நகரக்கூடிய கிரகமாகும். இந்த சந்திரன் ஒரு ராசியில் 2 1/2 நாட்கள் இருப்பார். சந்திரன் கடக ராசியின் அதிபதியாவார்.
சந்திரன் வேகமாக நகர்வதால் மற்ற கிரகங்களுடன் இணைந்து சுப அல்லது அசுப யோகங்களை அடிக்கடி உருவாக்கும். அதில் சந்திரன் குருவுடன் இணையும் போது உருவாகும் யோகம் தான் கஜகேசரி ராஜயோகம். இந்த ராஜயோகமானது மிகவும் சக்தி வாய்ந்ததாகும். இந்த ராஜயோகம் 2025 ஜனவரி 09 ஆம் தேதி உருவாகவுள்ளது. ஏனெனில் இந்நாளில் தான் சந்திரன் ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளார்.

இந்த ராசியில் குரு பயணித்து வருவதால், இவ்விரு கிரகங்களின் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. முக்கியமாக 2025-ல் உருவாகும் முதல் கஜகேசரி ராஜயோகம் இதுவே ஆகும். இப்போது கஜகேசரி ராஜயோகத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப்போகிறது என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு துறையிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் மீண்டும் தொடங்கும். லட்சுமி தேவியின் ஆசியால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால் அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வரும். ஒவ்வொரு துறையிலும் வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும். நிதி பணத்தை சேமிப்பீர்கள்.
தனுசு
தனுசு ராசியின் 6 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் பரம்பரை சொத்துக்களால் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வேலையில் முழு கவனத்தை செலுத்த முடியும். இதனால் வேலையில் சிறப்பாக செயல்பட முடியும். வியாபாரிகள் தங்களின் திட்டங்களால் நல்ல பலனைப் பெறுவார்கள். நிதி நிலை நன்றாக இருக்கும். எளிதில் கடன் கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 4 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் ஒவ்வொன்றும் வெற்றிகரமாக முடிவடையும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலவலகத்தில் நல்ல பலன்களைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. லட்சுமி தேவியின் ஆசியால் பணம் பெருகும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications