Latest Updates
-
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்..
பிப்ரவரியில் நிகழும் 4 கிரக பெயர்ச்சிகளும்.. 5 ராஜயோகங்களும்.. இந்த 3 ராசிக்கு பண வரவை அதிகரிக்கும்..
February 2026 Planet Transits And Rajyogas: 2026 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் ஜோதிட ரீதியாக சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்த மாதத்தில் பல கிரகங்கள் தங்களின் நிலையை மாற்றுவதோடு, பல ராஜயோகங்களையும் உருவாக்கவுள்ளன. இதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
அதில் முதலாவதாக பிப்ரவரி 03 ஆம் தேதி புதன் கும்ப ராசிக்கும், பிப்ரவரி 06 ஆம் தேதி சுக்கிரன் கும்ப ராசிக்கும், பிப்ரவரி 13 ஆம் தேதி சூரியன் கும்ப ராசிக்கும், பிப்ரவரி 23 ஆம் தேதி செவ்வாய் கும்ப ராசிக்கும் செல்லவுள்ளனர். இப்படி 4 கிரகங்களும் கும்ப ராசிக்கு செல்வதால் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது.

அதோடு புதன் சுக்கிரன் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகமும், சூரியன் சுக்கிரன் சேர்க்கையால் சுக்ராதித்ய ராஜயோகமும், சூரியன் செவ்வாய் சேர்க்கையால் மங்களாத்திய ராஜயோகமும், சூரியன் புதன் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகமும் உருவாகவுள்ளன.
இப்படி உருவாகும் யோகங்களின் தாக்கத்தால் சில ராசிக்காரர்களின் செல்வாக்கு அதிகரிக்கும், அதிர்ஷ்டம் பிரகாசிக்கும், நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும், வெற்றிகள் குவியும், முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் தேடி வரும். இப்போது பிப்ரவரி 2026-ல் நடக்கும் கிரக பெயர்ச்சிகள் மற்றும் ராஜயோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் 4 கிரக பெயர்ச்சிகள் மற்றும் 5 ராஜயோகங்கள் உருவாகவுள்ளன. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். நிதி நிலைமை உயரும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், அதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். முதலீடுகளில் இருந்தும் நல்ல லாபம் கிடைக்கும். ஒட்டுமொத்தமாக நிதி ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் பிப்ரவரி மாதம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் 4 கிரக பெயர்ச்சிகள் மற்றும் 5 ராஜயோகங்கள் உருவாகவுள்ளன. இதனால் இந்த ராசிக்காரர்கள் பிப்ரவரி மாதத்தில் நீதிமன்ற வழக்குகள் மற்றும் சட்ட விஷயங்களில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். வணிகத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், இம்மாதத்தில் நல்ல வேலை கிடைக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளன. மொத்தத்தில், நிதி ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் 4 கிரக பெயர்ச்சிகள் மற்றும் 5 ராஜயோகங்கள் உருவாகவுள்ளன. இதனால் இந்த ராசிக்காரர்களின் செல்வாக்கு அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் நிறைவடையும். பண ஆதாயங்களால் நிதி நிலைமையை மேம்படுத்தும். தனிப்பட்ட செலவுகள் மற்றும் தேவைகளை நீங்கள் எளிதாக பூர்த்தி செய்வீர்கள். மொத்தத்தில் நிதி ரீதியாகவும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications