Latest Updates
-
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்?
2025 குரு பெயர்ச்சியால் கோடி நன்மைகளை பெறப்போகும் 5 ராசிக்காரங்க இவங்க தான்.. கூறும் ஜோதிடர்!
Guru Peyarchi 2025: குரு பகவான் நவ கிரகங்களில் சுப கிரகம். மனிதர்களின் வாழ்க்கையில் நடைபெறும் சுப காரியங்களுக்கு குரு பகவானின் அருள் தேவை. இந்த குரு பகவான் ஒரு ராசியில் சுமார் 1 ஆண்டு காலம் இருப்பார். தற்போது குரு பகவான் சுக்கிரனின் ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த குரு பகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி வரும் மே 11 ஆம் தேதியன்று ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.
திருக்கணிதப் பஞ்சாங்கப்படி, மே 14 ஆம் தேதி குரு பெயர்ச்சி நிகழ உள்ளது. இந்த குரு பெயர்ச்சியால் குரு பகவானின் பார்வை மிதுன ராசியில் இருந்து துலாம், தனுசு, கும்ப ராசிகளின் மீது விழுகிறது. இந்த குரு பகவானின் பெயர்ச்சியின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.

இருப்பினும் இந்த குரு பெயர்ச்சியாலும் குருவின் பார்வையாலும் 5 ராசிக்காரர்கள் கோடி நன்மைகளை பெறப்போவதாக ஜோதிடர் சொ. ஜெயலட்சுமி தமிழ் போல்ட்ஸ்கையிடம் பகிர்ந்துள்ளார். இப்போது குரு பெயர்ச்சியாலும் குருவின் பார்வையாலும் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
சுக்கிர பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே.. குரு பெயர்ச்சியால் குரு பகவான் 2 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு மிகப்பெரிய யோகத்தை தரப்போகிறது. பொருளாதாரத்தில் மேன்மை கிடைக்கும். பணம் பல வழிகளில் இருந்தும் வரப்போகிறது. நல்ல வேலை கிடைக்கும். புரமோசனுடன் சம்பள உயர்வும் அதிகரிக்கும்.
துன்பங்கள் நீங்கி நன்மைகள் நடக்கும். சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலத்தை ஏற்படுத்த போகிறார் குரு பகவான். வேலைக்காக குடும்பத்தை விட்டு பிரிந்திருந்தவர்கள் குடும்பத்தோடு ஒன்று சேருவார்கள். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் தீரும். வியாழக்கிழமை குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வணங்க நன்மைகள் அதிகரிக்கும்.
சிம்மம்
சூரிய பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே.. குரு பெயர்ச்சியால் குரு பகவான் 11 ஆவது வீட்டிற்கு செல்கிறார். அஷ்டமத்து சனியால் கஷ்டப்பட்டாலும் லாப ஸ்தானத்திற்கு வரப்போகும் குருவின் பயணத்தால், செய்யும் தொழிலில் நல்ல லாபம் வரும். குடும்ப சூழ்நிலைகள் குதூகலமாக இருக்கும்.
பிள்ளைகளுக்கு சுப காரியங்கள் நடைபெறும். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கும். மன அழுத்தம் நீங்கி தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். சென்னை பாடியில் உள்ள திருவல்லீஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் குருபகவானை வணங்க நன்மைகள் நடைபெறும்.
துலாம்
சுக்கிர பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே.. குரு பெயர்ச்சியால் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்யப் போகும் குருபகவானால் பதவியில் முன்னேற்றம் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். அதிர்ஷ்டகரமான காலகட்டமாகும்.
உங்கள் குடும்பத்தில் சுபிட்சமும் சந்தோஷமும் ஏற்படும். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் கோடி கோடியாக செல்வம் தேடி வரப்போகிறது. திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானையும் தட்சிணாமூர்த்தியையும் வணங்கி வர நன்மைகள் அதிகரிக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களேஸ உங்கள் ராசி அதிபதி குரு பகவான் உங்கள் ராசிக்கு 7ஆம் வீடான களத்திர ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகிறார். ஏழாம் வீட்டில் அமரும் குரு வாழ்க்கையில் ஏற்றத்தை தரப்போகிறார். மிதுன ராசியில் இருந்து குரு பகவான் நேரடியாக உங்கள் ராசியை பார்வையிடுவதால், கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
இதுநாள் வரை இருந்த பிரச்சினைகள் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். குரு பகவான் கஷ்டங்கள், பிரச்சினைகளில் இருந்து உங்களை விடுவிக்கப் போகிறார். மனதில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வியாழக்கிழமை நாட்களில் குரு பகவானை மஞ்சள் வஸ்திரம் சாற்றி வணங்க நன்மை அதிகரிக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! சனிபகவான் உங்களை படாத பாடுபடுத்தி வருகிறார். ஏற்கனவே கும்ப ராசிக்காரர்கள் ஏழரை சனியில் பாத சனியால் சிரமப்பட்டு வருகிறீர்கள். ஆனால் குரு பெயர்ச்சியால் ஐந்தாம் இடமான பஞ்சம ஸ்தானத்தில் குரு பகவான் அமர்ந்து பயணம் செய்யப்போவதால் கஷ்டங்கள், கவலைகள் நீங்கப் போகிறது. பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்யும் குரு பகவானால் குல தெய்வ அருள் தேடி வரப்போகிறது.
நீங்கள் நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். குருவின் அருள் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் நீங்கள் தொட்டது துலங்கும். தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். பதவி உயர்வும், சம்பள உயர்வும் தேடி வரும். வீடு மாற்றம் இட மாற்றம் உண்டாகும். திருமணம், குழந்தை பாக்கியத்திற்கு காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரப்போகிறது. மொத்தத்தில் கோடி நன்மைகளை தரப்போகிறார் குருபகவான்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











