Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
சனி பகவானை இந்த பூக்கள் கொண்டு அர்ஜிக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
சனி கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி யாரலும் தடுக்க முடியாது.. கிரகங்களில் சனி மிக முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறது.. இது பாவகிரகம் எனவும் அழைக்கப்படுகிறது.. மேலும் சனி பகவான் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை அளிப்பவர் ஆவார்..
அத்தகைய சனி பகவானுக்கு கண்டிப்பாக இந்த மலர்களை கொண்டு பூஜிக்கக்கூடாதாம்.. காரணம் அவரது வழிபாட்டில் பல விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது.. சனி தேவரை மகிழ்விக்க பல பூக்களை அவருக்கு வழங்குகிறோம். ஆனால் இந்த மலர்களை சனி தேவருக்கு அர்ஜிக்ககூடாது.. அந்த பூக்கள் என்ன? ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

சனி சூரியனின் மகனாவார். ஆனால் தந்தையான சூரியனுக்கும் மகன் சனிக்கும் ஆகாது.. இவர்கள் இருவரும் ஜென்ம பகைவர்கள் ஆவார்கள். ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை வருடம் தங்கும் சனி பகவான், ராசி மண்டலத்தை ஒரு முறை சுற்றிவர 30 வருடங்கள் ஆகிறது. சனியின் ஆட்சி வீடு மகரம், கும்பம். உச்ச வீடு துலாம். நீச வீடு மேஷம். பகை வீடு சிம்மம். மேலும் சனி பகவான் ஆண்கிரகமும் இல்லாமல் பெண் கிரகமாகாவும் இல்லாமல் அலியாக இருக்கிறார்.
1. அத்தகைய சிறப்பு வாய்ந்த இவருக்கு சிவப்பு நிறப் பூக்கள் என்றால் பிடிக்காது.. செம்பருத்தி அல்லது ரோஜா போன்ற செடிகளில் இருந்து சிவப்பு நிறப் பூக்களை நீங்கள் பல தெய்வங்களுக்கும் பூஜைக்கு அளித்திருப்பீர்கள்.. குறிப்பாக துர்கா தேவிக்கு சிவப்பு நிற பூக்கள் மிகவும் பிடிக்கும்.. ஆனால் நீங்கள் சனி தேவருக்கு சிவப்பு நிற பூக்களை அர்ப்பணிக்கக்கூடாது. இதனால் எதிர்காலத்தில் பிரச்சனைகள் வரக்கூடுமாம்..
2. ஜோதிடத்தின்படி, சனி மற்றும் செவ்வாய் இணைவது நல்லதல்ல.. ஏனெனில் நீங்கள் சனி பகவானுக்கு சிவப்பு நிற பூக்களை அர்ப்பணித்தால், செவ்வாய் கிரகத்தை அவருக்கு முன்னால் வைப்பதாக அர்த்தம் ஆகிறது.. இதனால் சனி பகவான் உங்கள் மீது கோபமடைவார்.. அதன் பிறகு உங்களின் வாழ்க்கையில் சிக்கல்கள் பிரச்சனைகள் அதிகமாக வந்துக் கொண்டே இருக்குமாம்..
3. சாமந்தி பூவை சனி பகவானுக்கு பூஜிக்கக்கூடாதாம்.. மற்ற அனைத்து தெய்வங்களுக்கும் சாமந்தியை கொண்டு அர்சனை செய்யலாம். ஆனால் சனி பகவானுக்கு இந்த பூ ஆகவே ஆகாது.. இதற்கு காராணம் சூரிய பகவானுக்கு இது பிடித்த பூ ஆகும்.. அது மட்டுமல்லாமல் நீங்கள் சனிபகவானின் பாதத்தில் சாமந்தி பூக்களை அர்ப்பணித்தால் அது அசுபமாக கருதப்படுகிறது என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.
4. கருங்குவளைப் பூ சனீஸ்வரனுக்கு உகந்த பூ. ஏழரைச் சனி, சனி தசை, சனி குறைபாடு உள்ளவர்கள் இப் பூவை மாலையாகக் கட்டி சனிக்கிழமைகளில் சனீஸ்வர பகவானுக்கு நீலப்பட்டுடன் சாத்தி அர்ச்சனை செய்ய வேண்டும்.
5. அது போலவே சனி பகவானுக்கு ஊதா நிற சங்கு பூவும் உகந்த பூவாகும்.. இதனைக் கொண்டு சனிகிழமைகளில் அர்ச்சனை செய்து வந்தால் சனிக்குரிய தோஷங்கள் விலகிவிடுமாம்..
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications