Latest Updates
-
பாண்டிச்சேரி ஏன் சுதந்திரத்திரமடைந்து 16 ஆண்டுக்குப் பின் இந்தியாவுடன் சேர்க்கப்பட்டது தெரியுமா? -
காலையில் இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உங்க சிறுநீரகம் மோசமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
சித்திரை அமாவாசையில் சனி நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
கொங்குநாடு தக்காளி சட்னி - 10 நிமிடத்தில் டக்குன்னு எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க! -
இன்றைய ராசிபலன் 17 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடிவரப்போகுதாம் -
18 ஆண்டுக்கு பின் கேது மகம் நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் -
2 தக்காளியும், கடலைப்பருப்பும் இருந்தா இந்த சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
வெயில் காலத்தில் முடி அதிகமா கொட்டாம இருக்கணுமா? இந்த ஈஸியான வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க -
சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் உங்க உடலை ஜில்லுனு வைச்சுக்கணுமா? இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க -
வாஸ்து படி உங்க பர்ஸில் இந்த பொருட்களில் ஒன்று இருந்தாலும் துரதிர்ஷ்டம் உங்களை விட்டு எப்பவுமே போகாதாம்
செல்வம் பெருக, வறுமை நீங்க 12 ராசியினரும் செய்ய வேண்டிய தானங்கள் என்னென்ன?
ஒவ்வொரு ராசிக்கும் ஒரு குணாதிசயம் இருக்கும். ஒருவருக்கொருவர் விருப்பங்கள் மாறுபடும்.. வாழ்க்கையில் பலவிதமான ஏற்ற இறக்கங்களும் நிகழும்.. அதனால் அனைவரும் ராசிப்படி வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை அறிந்து கொள்வது அவசியம். அதில் சிலருக்கு பரிகாரங்கள் செய்ய வேண்டியிருக்கும் என ஜோதிடர்கள் கூறுவதுண்டு.. கிரகங்கள் எப்படிதான் மாறி இருந்தாலும் தானம் செய்தால் அனைத்தும் சரியாகிவிடும் பரிகாரம் தேவையில்லை என்பார்கள்.
ஆம் தானம் தர்மம் செய்வது நல்லது. ஆனால் தானம் செய்யும்போது சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். ஏனெனில் தானம் செய்வதால் உங்கள் வாழ்வில் பல நன்மைகள் கிடைக்கும். ஆனால் வேத ஜோதிடப்படி நீங்கள் என்ன தானம் செய்ய வேண்டும்? அதை எப்போது செய்ய வேண்டும்? என்பதைத் நன்கு அறிந்து கொண்டு செய்ய வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அவை என்னென்ன? என்பது குறித்து 12 ராசிகளுக்கும் உரிய தானம் பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

மேஷம்
மேஷத்தை ஆளும் கிரகம் செவ்வாய் என்று கூறப்படுகிறது. அதனால் செல்வத்தைப் பெருக்க தானியம், பொன், மஞ்சள், ஆகியவற்றை அவர்கள் வழங்க வேண்டும். இதன் மூலம் அவர்கள் வாழ்வில் வளமும் வெற்றியும் பெறுவார்கள். வறுமை நீங்கி வளமடைவார்கள்..
ரிஷபம்
ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். அதனால் இவர்கள் செல்வம் மற்றும் செழிப்பை அதிகரிக்க தேன், சூப் மற்றும் தானியங்களை தானமாக வழங்க வேண்டும். இது அவர்களின் துன்பங்களைக் குறைக்கும் மற்றும் வாழ்க்கையில் சாதனைகளை அதிகமாக செய்ய தூண்டும்ம்..
மிதுனம்
மிதுன ராசிக்கு அதிபதி புதன் கிரகம். மிதுன ராசிக்காரர்கள் நெய், பழங்கள், தயிர் ஆகியவற்றை தானமாக கொடுக்க வேண்டும். தவறாமல் பித்ரு வழிபாடு செய்ய வேண்டும். புதன்கிழமைகளில் பெருமாளை தரிசனம் செய்து நல்லது..
கடகம்
கடக ராசியின் அதிபதி சந்திரன் ஆவார்... கடக ராசிக்காரர்களுக்கு பால், நீர், வெள்ளி பாத்திரங்கள், முத்துக்களை தானமாக கொடுத்தால் செல்வம் பெருகும். பசுமாட்டுக்கு உணவு தானம் செய்வதை வழக்கமாக கொள்ள வேண்டும். இது குடும்பத்தில் வறுமையை விரட்டி செல்வத்தை சேர்க்க உதவும்.
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதி சூரியன் ஆவார். இவர்கள் தங்கம், குங்குமம், செம்பு ஆகியவற்றை தானம் செய்ய வேண்டும். இது வாழ்க்கையில் அதிக வெற்றியையும் செழிப்பையும் தருகிறது. இதனால் உங்கள் மனதில் அமைதி ஏற்படும். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையானதை கேட்டு வாங்கிக்கொடுங்கள். அது புண்ணியத்தை சேர்க்கும். அடிக்கடி தயிர் சாதத்தை தானமாக கொடுப்பது நல்லது..
கன்னி
கன்னி ராசிக்கு அதிபதி புதன் கிரகமாகும்.. கோவில்களுக்கு புத்தகம், விலங்குகளுக்கு பச்சை புல், தானம் செய்வது நல்லது. இதன் மூலம் அவர்கள் சிறந்த பலன்களைப் பெறுகிறார்கள். குருபகவானை தவறாமல் வழிபடவேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோதுமையால் ஆன இனிப்பு மற்றும் உணவு பொருட்களை தானம் செய்ய வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்கு அதிபதி சூரியன் ஆவார்... இவர்கள் தங்கள் செல்வம் பெருக நெய், பூ, வெள்ளிப் பொருட்களை தானம் செய்ய வேண்டும். அது உங்கள் வாழ்வில் வளம் சேர்க்கும். விநாயக வழிபாடு கைகொடுக்கும். அடிக்கடி ஏழை எளியோர்களுக்கு வெண் பொங்கல்தானம் செய்வது நல்லது..
விருச்சிகம்
விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய் கிரகம் ஆகும்.. இந்த ராசியினர் செல்வத்தை அதிகரிக்க ஆரஞ்சு பொருட்கள், காலணிகள் மற்றும் கருஞ்சிவப்பு நிறங்களை தானம் கொடுக்க வேண்டும்... வாழ்வில் வெற்றிக்கு வழிவகுக்கும் நிலையை உருவாக்குகிறது.கடன்கள் தீர லட்சுமி நரசிம்மரை வழிபட்டு பானகம் தானம் செய்யலாம்.
தனுசு
தனுசு ராசியின் அதிபதி வியாழன் ஆவார். தனுசு ராசிக்காரர்கள் செல்வம் பெருக எஃகு பாத்திரங்கள், காய்கள் மற்றும் மஞ்சள் ஆகியவற்றை தானமாக கொடுக்க வேண்டும்.. வாரம் ஒரு முறை செவ்வாய் அல்லது வெள்ளியில் துர்க்கை அம்மனுக்கு மலர் தானம் செய்யலாம்.
மகரம்
மகர ராசிக்கு அதிபதி சனி. மகர ராசிக்காரர்கள் செல்வம் பெருக செங்கல், சிமெண்ட், செருப்பு, பாதாம் ஆகியவற்றை தானமாக வழங்க வேண்டும். செல்வத்தைப் பெருக்க ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்ததை தானமாக கொடுக்க வேண்டும். மேலும் வாயில்லா ஜீவன்களுக்கு தீவனம் வாங்கி கொடுக்கலாம்.
கும்பம்
கும்ப ராசியினரின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். அவர்களின் அதிபதி சனி ஆவார்.. கும்பம் சிமெண்ட், காலணிகள், ஆடைகள் மற்றும் போர்வைகளை தானம் செய்ய வேண்டும். ஏழைகளுக்கு கதம்ப உணவை அடிக்கடி தானமாக கொடுக்க வேண்டும். இதனால் உங்களுக்கு வரும் பண வரவு இரட்டிப்பாகும்.
மீனம்
வியாழன் மீனத்தின் அதிபதி ஆவார்.. மீன ராசிக்காரர்களுக்கு செம்புப் பொருள்கள், இளஞ்சிவப்பு நிற ஆடைகள், மல்லிகைப்பூ, மாணிக்கம் போன்றவற்றை அர்ச்சனை செய்ய வேண்டும். ஏழை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவினால் புண்ணியம் அதிகரிக்கும். மேலும் நல்லெண்ணை தீபம் தானம் செய்யலாம். அய்யப்ப பக்தர்களுக்கு உதவினால் கூடுதல் நன்மை உண்டாகும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











