Latest Updates
-
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணம் சம்பாதிக்க கஷ்டப்படுவாங்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
பூண்டும், கறிவேப்பிலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சுக்கிரன் சனிபகவான் ஆளும் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுதாம் -
எந்த ஆரோக்கிய பிரச்சனைக்கு எந்தப் பழம் சிறந்தது? விளக்கும் டாக்டர்.சிவகுமார்! -
சாணக்கிய நீதி படி இந்த 6 நபர்கள் உங்களுக்கு எதிரியானால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாதாம் - ஜாக்கிரதை -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது..! -
1 கப் தேங்காயும், 1 கைப்பிடி புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 04 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
100 ஆண்டுகள் கழித்து நிகழும் அபூர்வ கிரக பெயர்ச்சி: ஜூன் 11-ல் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்! -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. ஒருவாட்டி இந்த சட்னியை செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்..
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. புத்தாண்டு சிறப்பா இருக்க டிசம்பர் 31-ல் என்ன செய்யணும்-ன்னு சொல்றோம்..
Year End Remedies: தற்போது 2025 ஆம் ஆண்டின் இறுதியில் உள்ளோம். இன்னும் ஓரிரு நாளில் 2026 புத்தாண்டில் நுழையவுள்ளோம். பொதுவாக ஒரு புதிய ஆண்டில் நுழையும் போது, அந்த ஆண்டு சிறப்பாக இருக்க பல்வேறு விஷயங்களைப் பின்பற்றுவோம். அதே வேளையில் வருகிற 2026 புத்தாண்டு மகிழ்ச்சியும், செழிப்பும் நிரம்பியிருக்க விரும்பினால், கடந்த வருடத்தின் எதிர்மறை சக்தியை உங்களிடம் இருந்து அகற்ற வேண்டும்.
அதற்கு புத்தாண்டில் நுழைவதற்கு முந்தைய தினம் ஒவ்வொருவரும் தங்களின் பிறந்த தேதிப்படி ஒருசில பரிகாரத்தை செய்ய வேண்டும். எண் கணிதத்தின் படி, 2026 புத்தாண்டு சிறப்பாக இருக்க டிசம்பர் 31 ஆம் தேதி ஒவ்வொருவரும் தங்கள் பிறந்த தேதிப்படி என்ன பரிகாரத்தை செய்ய வேண்டும் என்பதை இப்போது காண்போம்.

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்திருந்தால்..
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் புத்தாண்டிற்கு முந்தைய நாளான டிசம்பர் 31 ஆம் தேதி செய்ய வேண்டிய பரிகாரம் என்றால், உங்கள் மீதான திருஷ்டியைக் கழிக்க ஒரு கைப்பிடி கல் உப்பை எடுத்து, உங்களை மூன்று முறை சுற்றி, நீரில் போட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் எதிர்மறை ஆற்றல் உங்களிடம் இருந்து விலகும்.
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால்...
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் டிசம்பர் 31 ஆம் தேதி செய்ய வேண்டிய பரிகாரம் என்றால் உப்பை நீரில் கரைத்து, அந்நீரால் கைகளைக் கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம் உங்களின் மனதில் உள்ள பாரம் குறைந்து, புத்தாண்டில் உங்கள் மனம் லேசாகவும், சந்தோஷமாகவும் இருக்கும்.
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால்...
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் புத்தாண்டிற்கு முந்தைய நாளான டிசம்பர் 31 ஆம் தேதி இரவு தூங்கும் போது தலையணைக்கு அடியில் ஒரு கிராம்பை வைத்து தூங்க வேண்டும். இப்படி செய்வதனால் மனதில் உள்ள குழப்பம் நீங்கி, மனம் அமைதியாகும்.
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால்...
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் புத்தாண்டிற்கு முந்தைய நாளான டிசம்பர் 31 ஆம் தேதி ஒரு சிட்டிகை மிளகை எடுத்து வீட்டு வாசலில் சில மணிநேரம் வைத்து, பின் நள்ளிரவில் அதை தூக்கி எறிய வேண்டும். இப்படி செய்வதனால் மாற்றம் குறித்த உங்களின் பயம் நீங்கும்.
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால்...
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் டிசம்பர் 31 ஆம் தேதி கையில் ஒரு பிரியாணி இலையை சில நொடிகள் பிடித்து, மனதில் உள்ள ஆசைகளை கூறி, பின் அதை மென்மையாக கிழித்து எறியுங்கள். இதனால் அமைதியின்மை மற்றும் மனக்கிளர்ச்சியில் இருந்து விடுதலை கிடைக்கும்.
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால்...
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் புத்தாண்டிற்கு முந்தைய நாளான டிசம்பர் 31 ஆம் தேதி செய்ய வேண்டிய பரிகாரம் என்றால், அது 3 கிராம்பை எடுத்து ஒரு காகிதத்தில் வைத்து மடித்து, அதை பையில் வையுங்கள். இப்படி செய்வதன் மூலம் நேர்மறை ஆற்றல் நிரம்பியிருக்கும்.
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால்...
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் புத்தாண்டிற்கு முந்தைய நாளான டிசம்பர் 31 ஆம் தேதி செய்ய வேண்டிய பரிகாரம் என்றால், ஒரு சிறிய துண்டு கற்பூரத்தை எடுத்து, அதை எரித்து 30 நொடிகள் கூர்மையாக கவனிக்க வேண்டும். இதனால் மனதில் உள்ள அழுத்தம் நீங்கி, மனம் புத்துணர்ச்சியும், தெளிவும் பெறும்.
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால்...
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் புத்தாண்டிற்கு முந்தைய நாளான டிசம்பர் 31 ஆம் தேதி செய்ய வேண்டிய பரிகாரமெனில், ஒரு எலுமிச்சையை எடுத்து உள்ளங்கையில் வைத்து சிறிது நேரம் உருட்டி, பின் வீட்டிற்கு வெளியே தூக்கி எறிய வேண்டும். இதனால் பழைய காயங்கள் மற்றும் வெறுப்புகள் நீங்கி, மனம் ரிலாக்ஸாகும்.
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால்...
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் புத்தாண்டிற்கு முந்தைய நாளான டிசம்பர் 31 ஆம் தேதி செய்ய வேண்டிய பரிகாரமெனில், ஒரு சிட்டிகை கருப்பு உப்பை எடுத்து, அதை கடிகார சுழற்சியில் உங்களைச் சுற்றி, நீரில் அப்புறப்படுத்த வேண்டும். இதன் மூலம் கோபம் மற்றும் பொறுமையின்மை குறையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications