Latest Updates
-
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
100 ஆண்டுகள் கழித்து தீபாவளியில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
Diwali 2025: அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தீபாவளி பண்டிகை அக்டோபர் 20 ஆம் தேதி வரப்போகிறது. ஜோதிடத்தின் படி இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகை சற்று சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்நாளில் பல யோகங்கள் உருவாகவுள்ளன. முக்கியமாக மூன்று கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது.
அதுவும் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன், புத்திகாரகனான புதன் மற்றும் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் ஆகிய 3 கிரகங்கள் தீபாவளி நாளில் ஒன்றிணைந்து சக்தி வாய்ந்த திரிகிரக யோகத்தை உருவாக்கவுள்ளன. குறிப்பாக இந்த யோகம் துலாம் ராசியில் உருவாகவுள்ளது. இந்த 3 கிரகங்களின் சேர்க்கையால் தீபாவளியில் உருவாகும் திரிகிரக யோகமானது 100 ஆண்டுகளுக்கு பின் நிகழ்கிறது.

இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். முக்கியமாக 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இதன் விளைவாக நிதி நிலையில் நல்ல உயர்வும், தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தையும் காணவுள்ளனர். அதோடு சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புக்களும் கிடைக்கலாம். இப்போது திரிகிரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசியின் முதல் வீட்டில் சூரியன், புதன், செவ்வாய் ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் திறமைகள் பாராட்டப்படும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். இந்த யோகத்தால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கைத் துணையும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
மகரம்
மகர ராசியின் 10 ஆவது வீட்டில் சூரியன், புதன், செவ்வாய் ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். இதுவரை உங்களின் கடின உழைப்புக்கான பலன் இக்காலத்தில் கிடைக்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். மேலும் வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்களும் கிடைக்கும். தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு இடமாற்றம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. கூடுதலாக தந்தையுடனான உறவு வலுவடையும்.
தனுசு
தனுசு ராசியின் 11 ஆவது வீட்டில் சூரியன், புதன், செவ்வாய் ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்பும் உள்ளது. தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் இருந்து எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
