Latest Updates
-
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்..
800 ஆண்டுகள் கழித்து தீபாவளியில் உருவாகும் 5 ராஜயோகங்கள்: இந்த 4 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
Diwali 2025: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அடிக்கடி மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்தோ அல்லது அம்சங்களின் மூலமோ அல்லது இருக்கும் வீடுகளின் மூலமோ சுப மற்றும் ராஜயோகங்களை உருவாக்கி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் இவ்வாறு உருவாகும் யோகங்கள் பண்டிகை காலங்களில் நிகழும் போது இன்னும் சிறப்பானதாக கருதப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகை சிறப்பானது. ஏனெனில் இந்த தீபாவளி நாளில் 5 ராஜயோகங்கள் உருவாகவுள்ளன. இந்த 5 ராஜயோகங்களும் ஒரே வேளையில் தீபாவளி நாளில் சுமார் 800 ஆண்டுகளுக்கு பின் உருவாகவுள்ளன. அந்த யோகங்களாவன ஹன்ஸ் மகாபுருஷ யோகம், சுக்ராதித்ய ராஜயோகம், நீச்சபங்க ராஜயோகம், நவபஞ்சப ராஜயோகம் மற்றும் காலகிருதி ராஜயோகம்.

இந்த யோகங்கள் ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமானவையாக கருதப்படுகின்றன. இந்த யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும் 4 ராசிக்காரர்களுக்கு இந்த தீபாவளி மிகவும் சிறப்பானதாக, அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது. முக்கியமாக எதிர்பாராத நிதி ஆதாயங்களும், தொழிலில் முன்னேற்றங்களும் ஏற்படவுள்ளன. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
தீபாவளி நாளில் உருவாகும் 5 ராஜயோகங்களால் கடக ராசிக்காரர்களின் மரியாதை அதிகரிக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. பேச்சால் பல வேலைகளை முடிப்பீர்கள். பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. வணிகத்தில் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
மகரம்
தீபாவளி நாளில் உருவாகும் 5 ராஜயோகங்களால் மகர ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். இதன் மூலும் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் இருந்தால், அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் புதிய வேலை வாய்ப்புக்கள் தேடி வரும். தொழிலதிபர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள்.
துலாம்
தீபாவளி நாளில் உருவாகும் 5 ராஜயோகங்களால் துலாம் ராசிக்காரர்கள் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம் மற்றும் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலையில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். உயர் அதிகாரிகளுடனான உறவு சிறப்பாக இருக்கும் மற்றும் அவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட காலமாக சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மிதுனம்
தீபாவளி நாளில் உருவாகும் 5 ராஜயோகங்களால் மிதுன ராசிக்காரர்கள் அவ்வப்போது நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கலாம். தொழிலதிபர்களுக்கு தங்கள் தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புக்களுடன், நல்ல லாபமும் கிடைக்கலாம். வணிகர்களுக்கு எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். முக்கியமாக திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. சுப நிகழ்ச்சிகளிலும் அதிகம் பங்கு கொள்ள நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications