Latest Updates
-
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க..
இந்த 4 ராசி ஆண்கள் ஒரே நேரத்தில் பல பெண்களை காதலிப்பார்களாம்... இவங்ககிட்ட ரொம்ப உஷாரா இருக்கணும்...!
எந்தவொரு உறவிலும் விசுவாசம் என்பது மிகவும் மதிப்புமிக்க பண்புகளில் ஒன்றாகும், ஆனால் உறவுகளில் அர்ப்பணிப்பு மற்றும் விசுவாசமாக இருப்பதைப் பொறுத்தவரை அனைவரும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஜோதிடத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்கள் உறவுகளில் மிகவும் நேர்மையானவர்களாக இருப்பார்கள், அதேசமயம் சில ராசிகளில் பிறந்தவர்கள் இதற்கு முற்றிலும் நேர்மாறாக இருப்பார்கள், குறிப்பாக இந்த ராசிகளில் பிறந்த ஆண்கள்.
சில ராசிகள் சாகசம், உற்சாகம் அல்லது நிலையான மாற்றத்தை விரும்புகிறார்கள் மற்றும் உடல்ரீதியான நெருக்கத்தில் அதிகம் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். இது அவர்களை உறவுகளில் நேர்மையில்லாதவர்களாகவும், அர்ப்பணிப்பு இல்லாதவர்களாகவும் மாற்றும். இந்த பதிவில் எந்தெந்த ராசி ஆண்கள் காதல் மற்றும் திருமணத்தில் ஏமாற்றுபவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
உற்சாகமும், சாகசமும் மேஷ ராசியினரின் அடிப்படைத் தேவைகளாக இருக்கும். எந்தவொரு உறவிலும் அவர்கள் அரிதாகவே திருப்தி அடைவார்கள். காதல் உறவாக இருந்தாலும் சரி, உடல்ரீதியான நெருக்கமாக இருந்தாலும் சரி அவர்கள் எப்போதும் கவனத்தை ஈர்க்கும் ஒருவரைத் தேர்ந்தெடுப்பார்கள்.
அவர்கள் ஒரே நேரத்தில் பல உறவுகளை பராமரிக்க விரும்புவார்கள். மேஷ ராசி ஆண்கள் ஏமாற்றுவதில் மிகவும் திறமையானவர்கள், அவர்கள் தங்கள் துணையிடமிருந்து தங்களின் கடந்த காலத்தையும், தற்போதைய உறவுகளையும் எப்போதும் மறைத்தே வைத்திருப்பார்கள். அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்க ஒரு உறவு போதாது, எனவே அவர்கள் எப்போதும் பேக்கப்பாக வேறுசில உறவுகளை வைத்திருப்பார்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் எப்போதும் கவனத்தின் மையப் புள்ளியாக இருக்க வேண்டும் என்ற தீவிர ஆர்வம் உள்ளவர்கள். அவர்கள் தங்கள் துணை தங்களுக்கு போதுமான கவனம் செலுத்தாவிட்டால், அவர்கள் கவனத்தின் மையமாக இருக்கும் துணையை நோக்கி நகர்வார்கள்.
எனவே சிம்ம ராசிக்காரர்கள் தொடர்ந்து தங்கள் துணையை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் எப்போதும் தங்கள் உறவில் கவனத்தை மையமாக இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள். அவர்கள் புறக்கணிக்கப்படுவதாக சிம்ம ராசிக்காரர்கள் உணர்ந்தால், அவர்கள் துணையை மாற்ற துளியும் சிந்திக்க மாட்டார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் என்பது மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள், மேலும் காதல் மற்றும் காம உணர்ச்சி அதிகமுள்ளவர்கள். அவர்கள் தங்கள் உறவுகளில் எப்போதும் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை விரும்புகிறார்கள். துலாம் ராசிக்காரர்கள் தங்கள் காதல் உறவு மகிழ்ச்சியானதாக இருக்கும் வரை தங்கள் துணைக்கு துரோகம் செய்வதைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்க்கும் உற்சாகமும், மகிழ்ச்சியும் கிடைக்காத போது அவர்கள் துரோகம் செய்ய துளியும் தயங்க மாட்டார்கள்.
தங்களின் தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக அவர்கள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட துணையை வைத்துக் கொள்வார்கள். அதேசமயம் அவர்கள் அனைவரையும் ஏமாற்றி ஒருவருகொருவர் தெரியாமல் பார்த்துக் கொள்வார்கள். ஒருவேளை அவர்கள் மாட்டிக்கொண்டால் அந்த இடத்திலிருந்து காணாமல் போய்விடுவார்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் வசீகரமானவர்கள், நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள் மற்றும் தீவிர ஆர்வமுள்ளவர்கள். அவர்கள் மாற்றத்திற்கான கிரகமான புதனால் ஆளப்படுகிறார்கள், இதனால் அவர்கள் மன தூண்டுதலையும், வாழ்க்கையில் பன்முகத்தன்மையையும் விரும்புகிறார்கள். இது அவர்களை உறவுகளில் துரோகம் செய்யக்கூடியவர்களாக மாற்றுகிறது.
மிதுன ராசிக்காரர்கள் ஒரு உறவில் சிக்கிக்கொண்டதாக உணர்ந்தால், அதிலிருந்து தப்பிக்க உடனடியாக அவர்கள் மற்றொரு உறவில் ஈடுபடுவார்கள். அவர்கள் யாரையும் காயப்படுத்த விரும்புவதில்லை, அதனால் தங்களின் கள்ள உறவுகளை எப்போதும் ரகசியமாகவே வைத்திருப்பார்கள். அவர்களால் ஒருபோதும் மகிழ்ச்சியை அளிக்காத உறவில் நீண்ட காலம் இருக்க முடியாது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
