Latest Updates
-
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும்
மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: ஏப்ரல் 14 முதல் இந்த 3 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அதிசயம் நடக்கபோகுது
Chaturgrahi Yog In Pisces 2025: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, அவ்வப்போது திரிகிரக யோகம், சதுர்கிரக யோகம் போன்ற யோகங்களை உருவாக்கி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் ஏப்ரல் மாதத்தில் மீன ராசியில் ராகு, சுக்கிரன், புதன், சனி ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது.
இந்த யோகமானது ஏப்ரல் 14 ஆம் தேதி உருவாகவுள்ளது. இந்நாளில் சூரியன் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் மீன ராசியில் 4 கிரகங்களின் சேர்க்கையால் சதுர்கிரக யோகம் உருவாகிறது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது.

குறிப்பாக சில ராசிக்காரர்கள் திடீர் ஆதாயங்களைப் பெறுவதோடு, தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இப்போது மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசியின் 7 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் திருமணமானவர்களின் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையும் முன்னேற்றத்தைக் காண்பார்கள். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. லாப வீட்டில் இந்த யோகம் உருவாவதால், இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய திட்டங்களில் வேலை செய்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையேயான பிணைப்பு அதிகரிக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. அதிர்ஷ்ட வீட்டில் இந்த யோகம் உருவாவதால், புதிய வேலையை தொடங்கினால் அதில் நல்ல வெற்றியைப் பெறக்கூடும். பணிபுரிபவர்கள் தங்கள் இலக்கை அடைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. பயணங்களால் நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்க நேரிடும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
