Latest Updates
-
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா
2025-ல் இந்த 6 ராசிக்காரங்க தொழிலில் பல பிரச்சனைகளையும், சவால்களையும் சந்திப்பாங்களாம்.. உஷார்..
Career Horoscope 2025: இன்னும் சில வாரங்களில் 2025 ஆம் ஆண்டில் நுழையவுள்ளோம். ஒரு புதிய ஆண்டில் நுழையும் போது, அந்த ஆண்டில், தொழில் வாழ்க்கை, நிதி நிலை, காதல் மற்றும் திருமண வாழ்க்கை போன்றவை எப்படி இருக்கும் என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழும். இந்த கேள்விகளுக்கு ஜோதிடத்தில் பதில் கிடைக்கும்.
ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகள் கொண்டு ஒவ்வொருவரின் எதிர்காலம் கணித்து கூறப்படுகிறது. இந்த கிரகங்களின் நிலைகள் ஒவ்வொரு ஆண்டும் வேறுபடும். இதனால் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒவ்வொரு ஆண்டில் வேறுபட்டிருக்கும். முக்கியமாக அனைவரும் தெரிந்து கொள்ள விரும்புவது தொழில் குறித்து தான்.

ஏனெனில் தொழில் சிறப்பாக இருந்தால் தானே வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் வருகிற 2025 ஆம் ஆண்டில் சில ராசிக்காரர்களுக்கு தொழில் வாழ்க்கை பிரச்சனைகள் நிறைந்ததாகவும், சவால்கள் நிறைந்ததாகவும் இருக்கப் போகிறது. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் 2025 ஆம் ஆண்டில் தொழிலில் வெற்றி பெறுவது என்பது கடினம். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். செய்யும் வேலையில் அதிருப்தி அடைவதால், வேலையை மாற்ற முயற்சிக்கலாம். இருப்பினும், இந்த ராசிக்காரர்கள் அந்த எண்ணத்தைக் கைவிட வேண்டும். இல்லாவிட்டால், இருக்கும் வேலையையும் இழக்க நேரிடும். ஜூலை 2025 முதல் நவம்பர் 2025 வரை இந்த ராசிக்காரர்கள் பல கடினமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் 2025 ஆம் ஆண்டில் சற்று சோம்பேறித்தனத்தை அதிகமாக உணரலாம். எப்போதும் எதையாவது யோசித்தவாறு இருப்பீர்கள். உங்கள் வேலை குறித்த கவலை அதிகமாக இருக்கும். பணியிடத்தில் செய்யும் வேலைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்காமல் வருத்தப்பட நேரிடும். வியாபாரிகளுக்கு 2025 ஆம் ஆண்டு சுமாராக இருக்கும். நிறைய லாபத்தை பெற விரும்பினால், உங்களின் திட்டங்களை மாற்றி முயற்சிக்க வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டில் பணியிடத்தில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்காமல் போகலாம். மேலும் வேலையில் தடைகளையும், சவால்களையும் நிறைய சந்திக்க வாய்புள்ளது. 2025 ஏப்ரல் வரை வியாபாரிகளுக்கும், பணிபுரிபவர்களுக்கும் நன்றாக இருக்கும். ஆனால் இந்த மாதத்திற்கு பின் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மே மாதத்திற்கு பின் சிலருக்கு வேலை மாற்றம் அல்லது இடமாற்றத்திற்கான வாய்ப்புக்கள் உள்ளன. ஜூலை 2025 முதல் நவம்பர் 2025 வரையிலாக காலகட்டம் தொழில் ரீதியாக பலவீனமாக இருக்கும். இக்காலத்தில் வேலையை மாற்றுவது பற்றி யோசிக்க வேண்டும். இல்லாவிட்டால் ரொம்ப கஷ்டப்பட வேண்டியிருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் 2025 ஆம் ஆண்டில் பணியிடத்தில் சிரமப்பட வேண்டியிருக்கும். புதிதாக தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், இந்த ஆண்டு சாதகமாக இருக்காது. மேலும் கூட்டு தொழில் செய்வதையும் தவிர்க்க வேண்டும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் மிகுந்த அழுத்தத்தை சந்திக்க நேரிடும். உங்களின் சிறப்பான செயல்திறன் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படாமல் போகலாம். மொத்தத்தில் இந்த ஆண்டில் வேலையில் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
கடகம்
2025 ஆம் ஆண்டில் கடக ராசிக்காரர்கள் பணியிடத்தில் மன அழுத்தத்தை உணரக்கூடும். இந்த ஆண்டில் கடினமாக உழைப்பீர்கள். ஆனால் அதற்கான பாராட்டு கிடைக்காது. வியாபாரிகள் குறைந்த லாபத்தில் திருப்தி அடைய வேண்டியிருக்கும். தொழிலில் முன்னேற்றமானது மெதுவாகவே இருக்கும். வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், அதை தவிர்க்க வேண்டும். வணிகர்கள் இந்த ஆண்டில் கடுமையான போட்டியை சந்திக்க நேரிடும்.
மிதுனம்
2025 ஆம் ஆண்டில் மிதுன ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் புதிய வாய்ப்புக்களுடன், சவால்களையும் சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்களுக்கு இடமாற்றத்திற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அலுவலகத்தில் எப்போதும் மிகவும் பிஸியாக இருப்பீர்கள். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் மற்றும் முயற்சிகள் உயர் அதிகாரிகளால் கவனிக்கப்படாமல் போகலாம். ஆனால் ஆகஸ்ட் மாதத்திற்கு பின் ஓரளவு சுமாராக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications