Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
உங்களுக்கு 2025-ல் தொழில் ரீதியாக எந்த மாதங்கள் எல்லாம் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது-ன்னு தெரியணுமா?
Career Horoscope 2025: ஒவ்வொரு ஆண்டிலும் கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அதில் சில ராசிக்காரர்களுக்கு சில மாதங்கள் அதிர்ஷ்டமாகவும், சில மாதங்கள் துரதிர்ஷ்டமாகவும் இருக்கும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டில் நுழைய இன்னும் சில வாரங்களே உள்ளன.
வருகிற புதிய ஆண்டில் ஒவ்வொருவரும் தங்களின் தொழில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பார்கள். முக்கியமாக எந்த மாதம் அதிர்ஷ்டமாக, வெற்றி மற்றும் லாபத்தைத் தரும் மாதமாக இருக்கும் என்பதை அறிய விரும்புவார்கள். உங்களுக்கு 2025 ஆம் ஆண்டில் உங்க ராசிக்கு தொழில் ரீதியாக எந்த மாதங்கள் அதிர்ஷ்டமானதா இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள விரும்பினால், தொடர்ந்து படியுங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டில் தொழில் ரீதியாக பிப்ரவரி மற்றும் செப்டம்பர் மாதம் அதிர்ஷ்டமான மாதங்களாக இருக்கும். வியாபாரிகளுக்கு ஜனவரி மற்றும் அக்டோபர் மாதம் நல்ல லாபத்தைத் தரும் மாதங்களாக இருக்கும். மாணவர்களுக்கு ஜனவரி மற்றும் செப்டம்பர் மாதங்கள் மிகவும் சிறப்பான மாதங்களாக இருக்கும். இருப்பினும் இந்த ராசிக்காரர்கள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பலவிதமான சவால்களை சந்திக்க நேரிடும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டில் தொழில் ரீதியாக அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள் சிறந்ததாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு பிப்ரவரி மற்றும் அக்டோபர் மாதங்களில் நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு ஜூலை மற்றும் நவம்பர் மாதங்கள் சிறந்ததாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டில் தொழில் ரீதியாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள் அதிர்ஷ்டமானதாக இருக்கும். இம்மாதத்தில் இந்த ராசிக்காரர்களின் செயல்திறன் சிறப்பாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு ஏப்ரல் மற்றும் டிசம்பர் மாதங்களில் நிறைய லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்கள் சிறந்த மாதங்களாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு தொழில் ரீதியாக கலவையான பலன்கள் கிடைக்கும். இந்த ஆண்டில் பணிபுரிபவர்களுக்கு சிறந்த மாதங்கள் என்றால் அது ஜனவரி மற்றும் டிசம்பர் மாதங்கள் தான். அதோடு மே மற்றும் ஜூன் மாதங்களும் சிறப்பாக இருக்கும். வியாபாரிகளுக்கு பிப்ரவரி மற்றும் ஏப்தல் மாதங்கள் லாபங்களை அள்ளித் தரும் மாதங்களாக இருக்கும். மாணவர்களுக்கு ஏப்டில் மற்றும் மே மாதங்கள் சிறப்பாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டில் தொழில் ரீதியாக நன்றாக இருக்கும். அதுவும் பணிபுரிபவர்களுக்கு பிப்ரவரி மற்றும் ஜூன் மாதங்கள் அதிர்ஷ்டமாக இருக்கும். வியாபாரிகளுக்கு மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்கள் லாபத்தைத் தரும் மாதங்களாக இருக்கும். மாணவர்களுக்கு மே மாதம் அற்புதமாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டில் தொழில் ரீதியாக மார்ச் மாதம் மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். வியாபாரிகளுக்கு ஏப்ரல் மாதம் இரட்டிப்பு லாபத்தைத் தரும். மாணவர்களுக்கு மே மற்றும் ஜூன் மாதங்கள் அற்புதமான மாதங்களாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டில் தொழில் ரீதியாக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு ஜூன் மாதத்தில் எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு மே மாதம் சாதகமாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டில் தொழில் ரீதியாக மே மாதம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். இம்மாதத்தில் எதிரிகளால் உங்களை வீழ்த்தவே முடியாது. வியாபாரம் செய்பவர்களுக்கு ஜூன் மாதத்தில் நிறைய லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் சிறந்ததாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டில் தொழில் ரீதியாக மே மற்றும் ஜூன் மாதங்கள் சிறப்பாக இருக்கும். வியாபாரம் செய்து வந்தால், ஜூலை மாதம் லாபகரமான மாதமாக இருக்கும். மாணவர்களுக்கு ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்கள் சிறந்த மாதங்களாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டில் தொழில் ரீதியாக மார்ச் மற்றும் ஜூலை மாதங்கள் அதிர்ஷ்டமானதாக இருக்கும். வியாபாரிகளுக்கு ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்கள் லாபத்தைத் தரும் மாதங்களாக இருக்கும். மாணவர்களுக்கு அக்டோபர் மாதம் சிறந்ததாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டில் தொழில் ரீதியாக ஆக்ஸ்ட் மாதம் வெற்றிகரமான மாதமாக இருக்கும். வியாபாரிகளுக்கு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நிறைய லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் சாதகமாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டில் தொழில் ரீதியாக ஆகஸ்ட் மாதம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். வியாபாரிகளுக்கு அக்டோபர் மாதத்தில் நிறைய லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் சிறப்பான மாதமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications