நீங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. உங்களுக்கு உண்மையில் எந்த வேலை செட் ஆகும்-ன்னு சொல்றோம்...

Career By Date Of Birth In Tamil: நாம் ஒவ்வொருவருமே நல்ல நிம்மதியான வாழ்க்கையை வாழவே, அயராது உழைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதில் பலர் கிடைத்த வேலையை செய்து கொண்டு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் பிடிக்காத வேலையை சூழ்நிலையின் காரணமாக செய்து வருவதோடு, அந்த வேலையில் எந்த ஒரு முன்னேற்றத்தையும் காணாமல் இருப்பர்.

ஆனால் நீங்கள் உங்கள் தொழில் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வர வேண்டுமென்று ஆசைப்பட்டால், உங்களின் பிறந்த தேதிக்கு ஏற்ற வேலையை தேர்வு செய்து அதில் முயற்சி செய்தால், தொழில் வாழ்க்கையில் நல்ல வெற்றியைப் பெறலாம்.

Career By Date Of Birth Know Your Best Career According To Your Date Of Birth In Tamil

எண் கணிதத்தின் படி, எண்களானது ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுவும் 1 முதல் 9 வரையிலான ஒவ்வொரு எண்களும் சொந்த குணாதிசயங்களுடன், அதிபதிகளையும் கொண்டுள்ளன. அந்த எண்களுக்கு ஏற்ப ஒருவர் தங்களின் தொழில் வாழ்க்கையை தேர்வு செய்தால், அதில் நல்ல முன்னேற்றத்தையும், வெற்றியையும் பெறலாம்.

எண் கணிதத்தில் உள்ள 1 முதல் 9 வரையிலான எண்கள் ஒருவரது பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கையின் ஒற்றை இலக்க எண்ணாகும். கீழே எந்த தேதியில் பிறந்தவர்களுக்கு எந்த மாதிரியான தொழில் பொருத்தமாகவும், நல்ல வெற்றியையும் தரும் என்பதைக் காண்போம்.

எண் 1

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த எண்ணின் அதிபதி சூரியன். எனவே இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இயற்கையாகவே தலைமைப் பண்புகளைக் கொண்டிருப்பார்கள். ரிஸ்க் எடுக்க சற்றும் தயங்கமாட்டார்கள். ஆகவே இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு வணிகம் தான் சிறந்த தொழில்.

எண் 2

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த எண்ணின் அதிபதி சந்திரன். எனவே இந்த எண்களில் பிறந்தவர்கள் மிகவும் ஆக்கப்பூர்வமானவர்கள் மற்றும் அது தொடர்பான துறைகளில் சிறந்து விளங்குவார்கள். ஆகவே இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு கலை, நடிப்பு, ஃபேஷன் டிசைனிங் போன்றவை சிறந்த தொழிலாக இருக்கும்.

எண் 3

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த எண்ணின் அதிபதி குரு பகவான். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இயற்கையாகவே வலிமையானவர்கள் மற்றும் கணக்கு நன்கு போடுவார்கள். எனவே இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு வங்கி மற்றும் நிதி துறை சிறந்ததாக இருக்கும். மேலும் சில்லறை வணிகமும் இவர்களுக்கு நல்ல முன்னேற்றத்தைத் தரும்.

எண் 4

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த எண்ணின் அதிபதி ராகு. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் வழக்கத்திற்கு மாறானவர்கள் மற்றும் தனித்துவமானவர்களாக கருதப்படுகிறார்கள். மேலும் ரிஸ்க் எடுக்க தயங்காதவர்கள். இதனால் தவறான முடிவுகளை எடுத்து அடிக்கடி சிக்கலில் சிக்குவார்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு நடிப்பும், கலையும் நல்ல வெற்றியைத் தரும்.

எண் 5

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த எண்ணின் அதிபதி புதன். இதனால் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் நல்ல தகவல் தொடர்பு திறனைக் கொண்டிருப்பார்கள் மற்றும் சிறந்த முடிவெடுக்கும் திறனைக் கொண்டிருப்பார்கள். இது தவிர இவர்கள் மற்றவர்களை எளிதில் நம்ப வைக்கும் ஆற்றலைக் கொண்டவர்கள். எனவே இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஸ்டாக் மார்கெட், தொழில்நுட்பம், மார்கெட்டிங் அல்லது விற்பனை போன்றவை சிறந்த வெற்றியும், முன்னேற்றத்தையும் தரும்.

எண் 6

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த எண்ணின் அதிபதி சுக்கிரன். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இயற்கையாகவே கவர்ச்சியான ஆளுமையைக் கொண்டிருப்பார்கள். இவ்ர்களுக்கு சிறந்த தொழில் என்றால் ஹோட்டல் அல்லது ரெஸ்டாரண்ட் வணிகம், பொழுதுபோக்கு துறை போன்றவை தான்.

எண் 7

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த எண்ணின் அதிபதி கேது. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ஆராய்ச்சி துறையில் சிறந்து செயல்படுவார்கள். மேலும் இவர்கள் தனித்துவமான புதுமையான மற்றும் ஆக்கப்பூர்வமான திறன்களைக் கொண்டிருப்பார்கள். இவர்களின் தனித்துவமான யோசனை தான் இவர்களுக்கு நிறைய வெற்றியைத் தரும்.

எண் 8

8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த எண்ணிண் அதிபதி சனி. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயது வரை தங்கள் வாழ்க்கையில் அதிகம் போராட்டத்தை சந்திப்பார்கள். இவர்கள் மிகவும் எளிமையானவர்கள் மற்றும் எதையும் நேரடியாக பேசக்கூடியவர்கள். இவர்களின் கடின உழைப்பு தான் இவர்களுக்கு வாழ்க்கையில் வெற்றியைக் கொண்டு வரும். அதுவும் சற்று தாமதமாகவே கிடைக்கும். இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு அரசியல், ரியல் எஸ்டேட், நிதி, மெட்டல் தொழில் போன்றவை நல்ல வெற்றியைத் தரும்.

எண் 9

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த எண்ணின் அதிபதி செவ்வாய். இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு தைரியம் அதிகமாக இருக்கும். இதனால் இவர்கள் விளையாட்டு துறையில் சிறந்து விளங்குவார்கள். இது தவிர டிபென்ஸ், கெமிக்கல் அல்லது ரியல் எஸ்டேட் போன்ற தொழில்கள் நல்ல வெற்றியைத் தரும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Tuesday, November 5, 2024, 15:52 [IST]
Desktop Bottom Promotion