Latest Updates
-
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம் -
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
ஜூலை 27-ல் வக்ரமடையும் சனி பகவான்: டிசம்பர் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
100 ஆண்டுகளுக்கு பின் ஒரே வேளையில் உருவாகும் பத்ரா மற்றும் மாளவ்ய ராஜயோகம்.. அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்!
Bhadra And Malavya Rajyog On June 2025: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதோடு கிரகங்களின் ராசி மாற்றங்களினால் சுப மற்றும் ராஜ யோகங்கள் உருவாகி, அதுவும் வாழ்க்கையில் சிறப்பான மற்றும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் ஜூன் மாதத்தில் இரண்டு பெரிய ராஜயோகங்கள் உருவாகவுள்ளன. அதில் அசுரர்களின் குருவான சுக்கிரன் தனது சொந்த ராசிக்கு செல்வதால் மாளவ்ய ராஜயோகமும் உருவாகவுள்ளது. அதே வேளையில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் தனது சொந்த ராசியான மிதுன ராசிக்கு செல்வதால் பத்ரா ராஜயோகம் உருவாகவுள்ளது.

இப்படி இவ்விரண்டு ராஜயோகங்களும் ஒரே சமயம் சுமார் 100 ஆண்டுகளுக்கு பின் உருவாக போகிறது. இப்படி இரண்டு சக்தி வாய்ந்த ராஜயோகங்கள் ஒரே வேளையில் உருவாவதால், சில ராசிக்காரர்களின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இப்போது 100 ஆண்டுகள் கழித்து ஒரே சமயம் உருவாகும் பத்ரா மற்றும் மாளவ்ய ராஜயோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு பத்ரா மற்றும் மாளவ்ய ராஜயோகமானது சிறப்பான பலன்களைத் தரப்போகிறது. அதுவும் இந்த ராசிக்காரர்கள் திடீர் நிதி ஆதாயங்களைப் பெறவுள்ளார்கள். மேலும் பேச்சின் தாக்கமும் வலுவாக இருக்கும் மற்றும் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் பேச்சு ஈர்க்கும் வகையில் இருக்கும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைப்பதோடு, வெற்றிகள் குவியும்.
எந்த வேலையை செய்தாலும், அதில் நல்ல வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் காண்பீர்கள். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். நிதி திட்டங்களில் வெற்றி கிடைக்கும். கலை துறையில் இருப்பவர்களுக்கு நல்ல மரியாதையும், புகழும் கிடைக்கும். முக்கியமாக நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு பத்ரா மற்றும் மாளவ்ய ராஜயோகமானது மங்களகரமானதாக இருக்கும். ஏனெனில் புதன் 9 ஆவது வீட்டிலும், சுக்கிரன் 8 ஆவது வீட்டிலும் இருப்பார்கள். இதனால் வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும்.
பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் புதிய பொறுப்புக்களைப் பெறக்கூடும். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு பத்ரா மற்றும் மாளவ்ய ராஜயோகமானது பல வழிகளில் சிறப்பான பலனைத் தரும். ஏனெனில் புதன் 4 ஆவது வீட்டிலும், சுக்கிரன் 3 ஆவது வீட்டிலும் இருப்பார்கள். இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு திடீரென்று பெரிய அளவில் லாபம் கிடைக்கும். அரசு வேலை செய்பவர்கள் பதவி உயர்வை பெற வாய்ப்புள்ளது. முக்கியமாக பெற்றோரின் முழு ஆதரவு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications