Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
நவராத்திரியில் உருவாகும் 2 பெரிய ராஜயோகங்கள்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கபோகுது!
Bhadra And Malavya Rajyog Formed On Navratri 2024: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் ராசி மாற்றங்களால் அவ்வப்போது சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகி, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன், தனது சொந்த ராசியான கன்னி ராசியில் நுழைந்து பத்ர ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார்.
அதேப் போல் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசியில் நுழைந்து மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இவ்விரு ராஜயோகங்களும் ஒரே வேளையில் உருவாகியுள்ளன. அதுவும் இந்த இரண்டு பெரிய ராஜயோகங்களும் நவராத்திரியிலும் நீடித்திருப்பதால், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது.

இந்து நாட்காட்டியின் படி, இந்த ஆண்டின் நவராத்திரி அக்டோபர் 03 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நவராத்திரியில் இந்த ராஜயோகங்கள் உருவாகியிருப்பதால், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவால் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு பத்ர மற்றும் மாளவ்ய ராஜயோகத்தால், தன்னம்பிக்கை அதிகரிக்கும். திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடன் பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு பத்ர மற்றும் மாளவ்ய ராஜயோகத்தால், அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். பணியிடத்தில் உங்களின் செயல்திறனால் உயர் அதிகாரிகள் மகிழ்ச்சி அடைவார்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு பத்ர மற்றும் மாளவ்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வேலை மற்றும் வணிகம் தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தருவதாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்கும். தம்பதிகளுக்கு இடையே பிணைப்பு அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் ஆசை இருந்தால், அது இக்காலத்தில் நிறைவேறும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications