Latest Updates
-
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க..
Aries Horoscope 2025: வர 2025 மேஷ ராசிக்காரர்கள் வாழ்க்கையில் டர்னிங் பாயிண்ட்டா இருக்கும்.. ஏழரை சனி வேற..
Aries Horoscope 2025 In Tamil: வருகிற 2025 ஆங்கிலப் புத்தாண்டு பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது. சனி, ராகு கேது, குரு பெயர்ச்சியாலும், நவகிரகங்களின் பயணத்தாலும் மேஷ ராசியில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படப் போகிறது? நல்ல வேலை கிடைக்குமா? பொருளாதார நிலை எப்படி இருக்கும், குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது குறித்து ஜோதிடர் சொ. ஜெயலட்சுமி அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார். வாருங்கள், மேஷ ராசிக்காரர்களுக்கு 2025 எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே.. உங்களுக்கு சொத்து சுகம் வாங்கும் யோகம் தேடி வரப்போகிறது. அற்புதமான மாற்றங்களை தரக்கூடிய அதிர்ஷ்டகரமான ஆண்டாக அமையப்போகிறது. காரணம் கிரகங்களின் பயணம் உங்களுக்கு ஆண்டு முழுவதும் சாதகமாகவே இருக்கப் போகிறது.

2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்யும் சனி பகவான் ஏப்ரல் மாதம் முதல் விரைய ஸ்தானமான 12 ஆவது வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். ஏழரை சனி தொடங்கப்போகிறது. குரு பகவான் இந்த ஆண்டு உங்கள் ராசிக்கு 2,3,4வது வீடுகளில் பயணம் செய்யப்போகிறார். ராகு கேது பெயர்ச்சி மே மாதம் நிகழப்போகிறது. 12 ஆம் வீட்டில் பயணம் செய்யும் ராகு பகவான் லாப வீட்டிற்கும் 6 ஆம் வீட்டில் பயணம் செய்யும் கேது பூர்வ புண்ணிய ஸ்தானமான 5 வது வீட்டிற்கும் இடப்பெயர்ச்சி அடையப்போகிறார்.
குடும்ப வாழ்க்கை
தன வாக்கு ஸ்தானத்தில் குரு இருப்பதால் உங்களுடைய குடும்ப வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை தருவார். பிள்ளைகளின் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவி இடையே பாசமும் நேசமும் அதிகரிக்கும். பாசிட்டிவ் எண்ணங்கள் அதிகரிக்கும். புகழ், அந்தஸ்து கவுரவம் அதிகரிக்கும். குடும்பத்திலும் உறவினர்களிடையேயும் மதிப்பு மரியாதை கூடும். குரு பகவானின் ராசி மாற்றம் மே மாதத்தில் இருந்து உங்களின் வாழ்க்கையை உச்சத்திற்கு கொண்டு செல்லப்போகிறது.
வேலை
கடந்த காலங்களில் வேலையில் சில சிரமங்களை சந்தித்தாலும் உங்களுக்கு 2025ஆம் ஆண்டு மிகப்பெரிய யோகமான ஆண்டாக அமையப் போகிறது. கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். சிலருக்கு தலைமைப்பதவி தேடி வரப்போகிறது. படித்து விட்டு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மே மாதத்திற்குப் பிறகு ராகு கேது பெயர்ச்சியும் நிகழப்போவதால் சிலருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தேடி வரும்.
பொருளாதார நிலை
தன ஸ்தான குருவும் லாப ஸ்தான சனியும் 2025 ஆம் ஆண்டின் முற்பகுதியில் அள்ளித்தரப் போகின்றனர். கை நிறைய பணம் பல வழிகளில் இருந்தும் வந்து கொண்டே இருக்கும். வருமானத்தை சொத்துக்களில் சேமிக்க முயற்சி செய்யுங்கள். பணமாக வைத்திருந்தால் விரைய செலவாகி விடும் காரணம் அள்ளிக்கொடுத்த லாப சனி, மார்ச் மாதம் முதல் விரைய சனியாக இடப்பெயர்ச்சி அடையப் போவதால் தேவையற்ற விரைய செலவுகள் அதிகரிக்கும். கடன் வாங்கி பணத்தை யாருக்கும் கடனாக தர வேண்டாம். உறவினர்களுக்கு ஜாமின் கையெழுத்து போட்டு மாட்டிக்கொள்ளாதீர்கள்.
பெண்கள்
இல்லத்தரசிகள், பெண்களுக்கு 2025 ஆம் ஆண்டு அற்புதமான ஆண்டாக அமையப்போகிறது. உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். குடும்பத்தில் வாழ்க்கைத்துணையின் பாசமும் நேசமும் கிடைக்கும். அன்புப்பரிசால் திக்குமுக்காட வைக்கப்போகிறார். அதே நேரத்தில் வேலையில் இருக்கும் பெண்கள் இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்பட வேண்டாம் கவனம் தேவை. யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள்.
மாணவர்கள்
பள்ளி மாணவர்கள் இந்த ஆண்டு தேர்வுகளை தைரியமாக எதிர்கொள்வீர்கள். நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவீர்கள். அதே நேரத்தில் ஏப்ரல் மாதம் முதல் ஏழரை சனி தொடங்கப்போகிறது. விரைய சனி காலம் என்பதால் மாணவர்களுக்கு முதல் சுற்று சனி என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். நட்பு விசயத்தில் கவனம் தேவை. உயர் கல்வியை தேர்வு செய்பவர்கள் பெரியவர்களின் ஆலோசனையை பெறுவது அவசியம். ஆசிரியர்கள் சொல்படி கேட்டும் நடக்கும் மாணவர்களுக்கு வெற்றிகள் தேடி வரும்.
பரிகாரம்
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு மார்ச் முதல் ஏழரை சனி தொடங்குவதால் பைரவர் வழிபாடு நல்லது. ராகு காலத்தில் பைரவருக்கு தீபம் ஏற்றி வழிபடுவது பாதிப்புகளை குறைத்து நன்மைகளை அதிகரிக்கச் செய்யும். மொத்தத்தில் 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு திடீர் திருப்பங்களை தரக்கூடிய ஆண்டாக அமையப் போகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











