Latest Updates
-
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்..
பெண்கள் காதலில் எதிர்பார்க்கும் 6 விஷயங்கள் இதுதானாம்... இத சரியா செஞ்சாலே போதும் அவங்க பிரிஞ்சி போகமாட்டாங்க!
பெண்கள் எப்போதும் ஆண்களுக்கு புரியாத புதிராகவே உள்ளனர். ஒரு பெண்ணிடம் எவ்வளவுதான் நெருங்கி பழகினாலும் அவர்களின் மனதில் நினைப்பது என்னவென்பதை அறிந்து கொள்ள முடியாது. பெரும்பாலான நவீன உறவுகளில் ஆண்களால் தங்கள் பெண்களை முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை அல்லது பெண்களால் தங்கள் காதலரிடம் முழுமையாக வெளிப்படையாக இருக்க முடியவில்லை.
ஆண்கள் அவர்களுக்குத் தேவையானதைக் கொடுக்காததால் பெண்கள் வெளிப்படையாக இருப்பதில்லை. அதனால் பெண்கள் காதலில் ஏமாற்றம் மற்றும் வெறுப்பை உணர்கிறார்கள், இதனால் அவர்கள் கஷ்டப்படுகிறார்கள்.

பெண்களின் தேவைகளை புரிந்து கொள்ள ஆண்களுக்கு அதிக நேரமும், பொறுமையும் தேவை. ஆனால் காதலில் பெண்களின் அடிப்படைத் தேவைகள் மிகவும் பொதுவானவை மற்றும் எளிமையானவை. பெண்களின் தேவைகள் நபருக்கு நபர் மாறுபட்டாலும் சில அடிப்படைத் தேவைகள் பொதுவானதாகவே இருக்கிறது. இவற்றை பூர்த்தி செய்தாலே பெண்களின் மனதை வென்றுவிடலாம். பெண்களின் அந்த அடிப்படைத் தேவைகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அவர்கள் பேசும் ஒருவரை எதிர்பார்க்கிறார்கள்
பெண்கள் தாங்கள் பேசுவதைக் கேட்கவும், தங்களின் கருத்துக்களை புரிந்து கொள்ளவும், அதனை அங்கீகரிக்கவும் விரும்புகிறார்கள். அவர்கள் தங்கள் எண்ணங்கள், கருத்துக்கள் மற்றும் உணர்ச்சிகள் முக்கியமானவை மற்றும் கருதப்படுவதை அறிந்து உணர விரும்புகிறார்கள். தங்களின் கருத்துக்களை புறக்கணிக்காமல் மதிக்கும் ஒருவரை பெண்கள் எப்போதும் விரும்புவார்கள்.
மரியாதை
ஒரு பெண் மிகப்பெரிய நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியாக இருந்தாலும் சரி, இல்லத்தரசியாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு சூழ்நிலையிலும் அவர்களின் பங்களிப்பு மதிப்புமிக்கது மற்றும் புறக்கணிக்க இயலாதது. பெண்கள் முதலில் தங்களைத் தாங்களே மதிக்க வேண்டும், மேலும் அவர்களின் துணை, நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களும் அதனை செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். பெண்களை மரியாதையாக நடத்தும் ஒரு ஆண் பெண்கள் மனதில் எளிதில் இடம் பிடித்து விடுவார்கள்.
பாராட்டு
பெண்கள் இதனை வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் அவர்கள் தங்களின் அனைத்து செயல்களுக்கும் பாராட்டுக்களை எதிர்பார்ப்பார்கள். உறவுகளை நிர்வகிப்பதில் அவர்கள் எடுக்கும் அனைத்து கடின உழைப்புக்கும், அவர்கள் செய்யும் அனைத்து செயல்களுக்கும் அவர்கள் பாராட்டை விரும்புகிறார்கள். வார்த்தைகள் அல்லது சைகைகள் மூலம் அவர்கள் பாராட்டப்பட விரும்புகிறார்கள்.
உணர்ச்சிரீதியான பாதுகாப்பு
பெண்கள் தங்கள் உறவுகளில் உணர்ச்சிப்பூர்வமாக பாதுகாப்பாக உணர விரும்புகிறார்கள், இதனால் அவர்கள் பாதிக்கப்படாமல் தாங்களாவே இருக்க முடியும், தாங்கள் பலவீனமாகவோ அல்லது சிக்கலான சூழ்நிலைகளில் சிக்கும்போதோ தங்கள் துணை தங்களை தாங்கி பிடிப்பார்கள் என்ற பாதுகாப்பு உணர்வை அவர்கள் விரும்புகிறார்கள்.
ஆதரவு
தங்களின் பலத்தாலும், ஆதரவாலும் தனக்கு ஆறுதலாக நின்றும் பாதுகாக்கும் ஒரு துணையை பெண்கள் விரும்புகிறார்கள். நல்ல நாட்களைப் போலவே மோசமான நாட்களிலும் தங்களுக்கு பக்க பலமாக இருக்கும் ஒருவரை பெண்கள் எதிர்பார்க்கிறார்கள்.
சுதந்திரம் மற்றும் ஸ்பேஸ்
பெண்கள் தங்கள் சுயத்தை இழக்காமல் தாங்களாகவே இருக்க அனுமதிக்கும் உறவுகளை விரும்புகிறார்கள், தங்கள் சுயத்தை இழக்காமலேயே மரியாதையுடன் உயரத்தில் பறப்பதை பெண்கள் விரும்புகிறார்கள்.
இந்த அடிப்படை விஷயங்களை பெண்கள் தங்கள் காதலர் அல்லது வாழ்க்கைத்துணையிடமிருந்து மட்டுமல்ல அனைத்து உறவுகளிடம் இருந்தும் எதிர்பார்க்கிறார்கள். ஏனெனில் இவை ஒருவர் ஒரு உறவில் மதிக்கப்படுவதற்கான அடிப்படை விஷயங்களாகும்.



Click it and Unblock the Notifications
