Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
உங்க உறவில் சிவப்பு கொடி காட்ட வேண்டிய இடங்கள் என்னென்ன? அதுக்கு என்ன காரணம் தெரியுமா?
மனித தொடர்பு என்பது உறவில் மிக முக்கியமான விஷயம் ஆகும். ஒருவரை நேசிப்பதும் அவர்களுடன் தொடர்பில் இருப்பதும் மிகவும் அவசியம். இருப்பினும் எல்லா உறவுகளும் நமக்கு நிலைப்பதில்லை. ஒரு சில உறவுகள் சில ஆண்டுகளுக்கு பிறகு நமக்கு கசக்க தொடங்கி விடுகின்றன. அந்த உறவில் இருந்து வெளி வரவே நாம் மிகவும் முயற்சிப்போம்.
உண்மையில் உங்க உறவு நன்றாகத்தான் இருக்கிறதா இல்லையா என்பதை எப்படி அறிவீர்கள். உங்கள் உறவில் சிவப்பு கொடி காட்டக் கூடிய இடங்கள் நிறைய இருக்கிறதா. உங்கள் உறவு ஒரு ஆரோக்கியமற்ற நிலையை அடைந்தால் என்ன செய்ய வேண்டும். அதைப்பற்றி தான் நாம் இக்கட்டுரையில் காணப் போகிறோம்.

உறவில் சிவப்பு கொடி என்றால் என்ன?
சிவப்பு கொடி என்பது உங்கள் உறவில் எதிரொலிக்கும் ஒரு எச்சரிக்கை மணியாகும். இது உங்கள் உறவு ஆபத்தில் இருக்கிறது என்பதை பிரதிபலிக்கிறது. அவ்வப்போது ஏற்படும் இந்த சிவப்பு கொடி இடங்களை நீங்கள் சரிவர கவனிக்கா விட்டால் காலப்போக்கில் உங்களுக்கு பெரிய சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது உங்களுக்கும் உங்கள் துணைக்கு இடையே ஒரு பெரிய பிரச்சினையாக உருவெடுத்து நிற்கும்.
இந்த சிவப்பு கொடிகள் என்பது ஆக்கிரமிப்பு, பழி வாங்குதல், தவறான நடத்தை இவற்றின் அறிகுறிகளாக இருக்கலாம். இந்த சிவப்பு கொடிகளை நீங்கள் அறிந்து கொள்வதன் மூலம் நீங்கள் நச்சு உறவில் இருந்து விடுபட முடியும். சரி வாங்க இந்த சிவப்பு கொடிகள் என்னென்ன என்பதைப் பற்றி அறிந்து கொள்வோம்.
உறவில் காணப்படும் சிவப்பு கொடிகள்
நடத்தையை கட்டுப்படுத்துதல்
ஒருவரின் நடத்தையை அதிகமாக கட்டுப்படுத்துவது உறவில் இருக்கும் மிகப்பெரிய சிக்கலாகும். உங்களுடைய விருப்பங்கள் மற்றும் முடிவுகளுக்கு முக்கியத்துவம் தராமல் அவர்களின் விருப்பங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய நபராக இருப்பார்கள்.
ஒரு உறவில் ஆண் மற்றும் பெண் இருவர் இருந்தால் மற்றவர் என்ன ஆடை அணிய வேண்டும், எது அணியக் கூடாது போன்ற விஷயங்களை கட்டுப்படுத்த முயற்சிப்பார்கள். இந்த மாதிரியான கட்டுப்பாடுகள் உறவில் இருந்தால் அது உங்களுக்கு ஒரு சிவப்பு கொடி என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
நம்பிக்கை இல்லாமல் போதல்
எந்தவொரு ஆரோக்கியமான உறவிலும் நம்பிக்கை என்பது மிகவும் அடித்தளமான விஷயமாகும். சில நேரங்களில் சந்தேகம் வரலாம் ஆனால் சந்தேகமே வாழ்க்கையாக இருந்தால் கொஞ்சம் யோசித்து பார்த்து கொள்ளுங்கள். எனவே இதுவும் உங்களுக்கான சிவப்பு கொடி. ஆரோக்கியமான உறவு என்றால் இருபக்கமும் நம்பிக்கை என்பது மிகவும் அவசியம்.
சுயமரியாதை குறைந்த உணர்வு
உங்களுடைய நெருக்கமானவர் உங்களை தட்டி எழுப்ப வேண்டுமே தவிர உங்களை உடைக்கக் கூடாது. நீங்கள் ஒருவரை காதலிக்கும் போது அவர் உங்களை ஆதரிக்க வேண்டும், உங்களை மேம்படுத்த வேண்டும். உங்கள் நண்பரிடம் இருந்தோ அல்லது உங்க கணவரிடம் இருந்தோ அதை நீங்கள் உணரவில்லை என்றால் உங்கள் உறவு பிரச்சினையில் உள்ளது. உங்கள் சுயமரியாதையை குறைக்கும் உறவில் இருப்பது நல்லது அல்ல. இதுவும் உங்கள் உறவுக்கான சிவப்பு கொடி.
உடல், உணர்ச்சி மற்றும் மன ரீதியான துஷ்பிரயோகம்
எந்தவொரு உறவிலும் உடல், உணர்ச்சி மற்றும் மனரீதியான துன்புறுத்தல் மறுக்க முடியாத சிவப்புக் கொடிகள் ஆகும். உடல் ரீதியாக துன்புறுத்தல், உணர்ச்சி மற்றும் மன ரீதியாக துஷ்பிரயோகம் செய்வது மிகவும் கண்டிக்க வேண்டிய ஒன்றாகும்.
அவர்களுடைய சொந்த பிரச்சினைகளுக்கு உங்களை பலிகெடாவாக ஆக்க யாருக்கும் உரிமை இல்லை. எனவே உங்கள் உறவில் இது போன்ற பிரச்சினைகள் இருந்தால் அதை நீங்கள் கவனிக்க வேண்டியது அவசியம்.
போதைப் பொருள் துஷ்பிரயோகம்
உங்கள் நெருக்கமானவர் போதைப் பொருள் பழக்கத்திற்கு உள்ளாகி இருந்தாலோ, மதுப்பழக்கத்திற்கு உள்ளாகி இருந்தாலோ கவனிக்க வேண்டும். இந்த கெட்ட பழக்க வழக்கங்களால் அவரால் உங்களுக்கு இன்னல்கள் ஏற்பட்டால் அந்த உறவு சரி வர இருக்காது. எனவே இதுவும் உங்கள் உறவுக்கான ஒரு எச்சரிக்கை மணியாகும்.
நாசீசிசம்
நாசீசிஸ்டிக் என்பது ஒரு ஆளுமைக் கோளாறு மனநிலை ஆகும். இந்த எண்ணத்தால் உங்கள் நெருக்கமானவர் உங்களை அடக்க முயலலாம். இதனால் உங்கள் இருவருக்கிடையே ஈகோ உந்துதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இந்த மாதிரியான மனநிலை இருப்பவர் உங்கள் துணையாக இருந்தால் நீங்கள் யோசியுங்கள்.
கோபம்
பெரும்பாலான உறவில் கோபம் தான் முக்கியமான சிவப்பு கொடியாக உள்ளது. உணர்ச்சி கட்டுப்பாடு இல்லாத உறவு எப்பொழுதும் சிக்கலைத் தான் ஏற்படுத்தும். கோபத்தை மிரட்டும் தந்திரமாக ஒரு ஆண் அல்லது பெண் பயன்படுத்தினால் அதைப் பற்றி நீங்கள் யோசிக்க வேண்டும். உங்கள் நெருக்கமானவர் உங்கள் மீது அதிகமாக கோபப்பட்டால் அதைப் பற்றி யோசியுங்கள். ஏனெனில் இதுவும் உறவில் ஒரு சிவப்பு கொடி.



Click it and Unblock the Notifications
