Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஹீரோ தாத்தா ஆனார்.. பேரனுடன் ஸ்கூலுக்கு சென்ற சுவாரஸ்யம்..!
தாத்தா, பாட்டி உறவு என்பது ஓர் பொக்கிஷமான உறவு. அன்பு, பாசம், பரிவு, அக்கறை, கலாச்சாரம், ஆரோக்கியம், வாழ்வியல் முறை என்று வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் தங்களது செயல்முறையில் கற்பிக்கும் ஒரு ஆசானாகதான் தாத்தா, பாட்டி இருக்கின்றனர். அதிலும் தாத்தா பேரன் உறவு என்பது உணர்வு பூர்வமானது.
தாய் தந்தையிடம் கிடைக்கும் பாசத்திற்கும், தாத்தாவிடம் இருந்து கிடைக்கும் பாசத்திற்கும் வேறுபாடு உள்ளது. இதில், அக்கறை, பரிவு, கொஞ்சுதல், கெஞ்சல்கள் எல்லாம் அதிகமாகவே இருக்கும். உங்களுடைய குழந்தைக்கு தாத்தா ஒரு நல்ல நண்பனாகவும் இருப்பார் என்பதுதான் உண்மை..

ஒரு தாத்தா என்பவர் நாம் எப்படி வாழ வேண்டும், எந்தெந்த தருணங்களை எவ்வாறு கையாள வேண்டும். மகிழ்ச்சி, இன்பம், துன்பம் போன்றவற்றை கடந்து வருவது எப்படி என்ற வாழ்வியல் முறைகளை கற்றுக்கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல் நாமும் நம் குழந்தைகளும் நாட்டின் வரலாறை விடவும் முக்கியமானது குடும்ப வரலாறை தெரிந்துக்கொள்ள வேண்டியது. தாத்தா, பாட்டன் அவர்களது பெற்றோர், வாழ்ந்து வந்த முறை, பரம்பரை வழக்கங்கள் என நாம் பரம்பரை பற்றி கற்றுக்கொள்ள தாத்தா, பாட்டி உறவு மிகவும் முக்கியம்.
தாத்தா என்பவர் நாட்டின் முதல்வராக இருந்தாலும் சரி சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் சரி அவர்களது பேரனுக்கு அவர்கள் தாத்தாதான்.. அந்த வகையில் இன்று காலையில் சூர்ப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்கூல் போக மாட்டேன் என்று சொன்ன தனது பேரன் வீர்-ஐ அவரது பள்ளிக்கு காரில் அழைத்துச் சென்று விட்டுவிட்டு வந்தார்.
அப்போது, வகுப்பறையில் ரஜினிகாந்தை பார்த்த குழந்தைகள் ஷாக்கில் அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு குழந்தையும் ஒருவிதமான ரியாக்ஷனை கொடுத்தனர். இந்த சம்பவத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் பேரனுடன் காரில் செல்லும் ரஜினிகாந்தின் மற்றும் வகுப்பறையில் குழந்தைகள் ரஜினியை பார்த்து கொடுக்கும் ரியாக்ஷன் என புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது,” "என் மகன் இன்று காலை பள்ளிக்குச் செல்ல விரும்பவில்லை... மேலும் சூப்பர் ஹீரோ தாத்தா அவனைப் பள்ளிக்கு அழைத்துச் சென்றார். ஆன் மற்றும் ஆஃப் ஸ்கிரீன் மை டார்லிங் அப்பா” என பதிவிட்டுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் தற்போது நடித்து வருகிறார் ரஜினிகாந்த். கூலி படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைப்பெற்று வரும் நிலையில், பள்ளிக்கு செல்ல அடம்பிடித்த தனது பேரனை தானே காரில் அழைத்துச் சென்ற சம்பவம் அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது..



Click it and Unblock the Notifications