Latest Updates
-
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
இந்த அறிகுறிகள் உங்க கணவன் அல்லது மனைவிகிட்ட இருந்தா... நீங்க ஓர் பாதுகாப்பான உறவில் இருக்கீங்களாம்!
ஆண், பெண் இருவரும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ உறவில் சில விஷயங்கள் கண்டிப்பாக தேவைப்படுகின்றன. ஓர் உறவு ஆரோக்கியமானதாகவும் பாதுகாப்பானதாகவும் அமைய நம்பிக்கை, உணர்ச்சி வெளிப்பாடு, புரிதல் உணர்வு போன்றவை அவசியம் தேவைப்படுகின்றன.
என்னதான் எல்லாரும் உறவில் இருந்தாலும், ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பங்கள், ஆசைகள் மற்றும் உணர்வுகள் இருக்கும். இது இயல்பானது. உங்கள் தனிப்பட்ட உணர்ச்சிகளில் மூழ்கி, பின்னர் உங்கள் உணர்வுகளை பற்றி, உங்கள் துணையிடம் பகிர்ந்து கொள்வது உங்களுக்கு பயமாக இருக்கலாம். ஏனெனில், அதை அவர்கள் எவ்வாறு எடுத்துக்கொள்வார்கள் என்பது பற்றி தெரியாது.

உங்களின் தனிப்பட்ட விஷயங்களை உங்கள் துணையுடன் பகிர்ந்துகொள்ள நீங்கள் அவர்கள் மீது அதிக நம்பிக்கையை கொண்டிருக்க வேண்டும். உங்களுடனும் உங்கள் துணையுடனும் ஒரு பாதுகாப்பான பிணைப்பை வளர்த்துக்கொள்வது உங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும், ஒருவருக்கொருவர் உண்மையாகவும் இருக்க உதவும்.
நம்பிக்கையுடன் இருப்பது, கோபம், வலி மற்றும் உணர்வுகளை புரிந்துகொள்வது போன்று உணர்ச்சி ரீதியாக இணைந்திருக்க வேண்டும். விஷயங்களை பகிர்ந்துகொள்வது மற்றும் நன்றாகக் கேட்பது, பிரச்சினைகளைப் புரிந்துகொள்வது மற்றும் கவலைகளை சரிசெய்வது போன்ற ஒரு துணையுடன் இருப்பது உணர்வுபூர்வமாக பாதுகாப்பான உறவாக இருக்கும்.
சிலர் பாதுகாப்பற்ற உறவில் இருக்கலாம். அந்த உறவில் இருக்கும் நபர், தங்களை பற்றி வெளிப்படுத்தும்போது, அது உறவில் பெரிய சிக்கல்களாக மாற வாய்ப்புள்ளது. மேலும், உணர்ச்சி ரீதியாக பாதுகாப்பற்ற சூழலில் வாழ்வதும், உங்களை வெளிப்படுத்த முடியாமல் இருப்பதும் நீங்கள் ஒரு பாதுகாப்பாற்ற உறவில் இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
உணர்ச்சி ரீதியாக பாதுகாப்பான உறவு எப்படி இருக்கும் என்பதைப் பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் உறவு சரியான பாதையில் செல்கிறதா? இல்லையா? என்பதை அறிய நீங்கள் பின்பற்ற வேண்டிய குறிப்புகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
உணர்திறன் உடையவராக இருப்பது
நீங்கள் அல்லது உங்கள் துணை பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்ளும்போது அல்லது கவலைகளை வெளிப்படுத்தும்போது நம்பிக்கையான நபராக நடந்துகொள்ள வேண்டும். எனவே, அவர்கள் கூறிய விஷயங்களை எந்த நிலையிலும் ஒருவருக்கொருவர் எதிராக எப்போதும் பயன்படுத்தப்படக்கூடாது. இது நம்பிக்கைக்கு புறம்பானதாகக் கருதப்படுகிறது.
உங்கள் துணை அவர்களின் ஆழ்ந்த உணர்ச்சிகளைப் பகிர்ந்துகொள்ளும் போது, அவர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். உங்களுடன் உறவில் இருப்பதை உங்கள் துணை பாதுகாப்பாக உணரலாம். உங்களையோ அல்லது உங்கள் துணையையோ நம்பகத்தன்மை குறைந்தவராக மாற்ற வேண்டாம்.
உணர்ச்சிகளைக் வெளிகாட்டுவது
ஒரு உறவில் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது முதலில் பயமாக இருக்கலாம். ஆனால், அதை மறைப்பது, எதிர்காலத்தில் உறவில் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தலாம். உங்கள் கூட்டாளருடன் உணர்வுகளைப் பற்றி விவாதிப்பது மிகப்பெரிய விஷயமாக இருக்கும். ஆனால் அது அந்த நபரை ஒரு உறவிலும் தனிநபராகவும் புரிந்து கொள்ளவும் வளரவும் அனுமதிக்கும். அதனால், உங்கள் உணர்ச்சிகளை உறவில் வெளிப்படையாக வெளிப்படுத்துங்கள்.
பாதிக்கப்படக்கூடியதாக இருப்பது
ஓர் உறவில் நம்பிக்கையும் பாதுகாப்பான உணர்வையும் உணருவது என்பது உணர்வு ரீதியாக நீங்கள் பாதுகாப்பான உறவில் இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். இந்நிலையில், உங்கள் பலவீனங்களை உங்கள் துணையுடன் பகிர்ந்து கொள்வதும், பாதிக்கப்படக்கூடியவர்களாக இருப்பதும் தம்பதிகளிடையே வலுவான பிணைப்பை உருவாக்க உதவும். இது கூட்டாளர்களை நெருக்கமாகக் கொண்டுவரும் மற்றும் உணர்ச்சி பாதுகாப்பை ஏற்படுத்தும்.
புரிதல் பற்றிய தெளிவு
ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான உறவில் தம்பதிகளுக்குள் நல்ல புரிதல் உணர்வு இருக்கும். தம்பதிகள் இருவருக்கும் உறவு எந்த இடத்தில் இருக்கிறது மற்றும் அதன் எதிர்கால வாய்ப்புகள் பற்றிய தெளிவான யோசனை மற்றும் புரிதல் இருக்க வேண்டும். இது எதிர்காலத்திற்கான குழப்பத்தை நீக்கி உறவை மகிழ்ச்சியாக வாழ அனுமதிக்கும். ஒவ்வொருவரு தம்பதிகளுக்குள்ளும் புரிதல் இருக்க வேண்டியது மிக முக்கியம்.
எல்லைகளை அமைத்தல்
உறவில் எல்லைகளை அமைப்பது மிக முக்கியம். ஒரு உறவில் உங்களுக்கென்று தனிப்பட்ட இடத்தை வைத்திருப்பது உங்கள் தனித்துவத்தை பராமரிக்க உதவும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் நெருக்கமாகவும் அன்பாகவும் இருக்க இந்த எல்லைகள் உதவும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் எல்லைகளை மீறாமல் இருப்பது உறவை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
எதிர்பார்ப்புகள் கொண்டவை
ஒரு உறவில் நிலைத்தன்மை மிக முக்கியமானது. நீங்கள் அல்லது உங்கள் துணையின் நடத்தை சீரானதாக இருந்தால், அது தம்பதியர் ஒருவருக்கொருவர் சில எதிர்பார்ப்புகளை வைத்திருக்க அனுமதிக்கும். உங்கள் அல்லது உங்கள் கூட்டாளியின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். ஏனெனில், உறவுகளில் எப்போதும் எதிர்பார்ப்புகள் இருக்கும், அவற்றை ஒருவருக்கொருவர் பூர்த்தி செய்ய வேண்டும்.



Click it and Unblock the Notifications

