Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க எல்லோருக்கும் பிரச்சினைகளை கொடுப்பதற்காகவே பிறந்த ஆபத்தான ஆன்மாக்களாம் -
2 மாம்பழமும் 6 பிரட்டும் இருந்தா.. ஸ்கூல் விட்டு வர பிள்ளைகளுக்கு 10 நிமிஷத்துல இந்த ஸ்வீட் செஞ்சு குடுங்க... -
International Yoga Day 2026: சர்வதேச யோகா தினத்தின் வரலாறு என்ன தெரியுமா? இந்த வருட யோகா தினத்தின் சிறப்பு என் -
சனி பகவான் நிலையால் இனி 2027 வரை இந்த 3 ராசிக்காரங்க நல்ல வளர்ச்சியை காண்பார்களாம்! -
ஆந்திரா மெஸ் ஸ்டைல் கோவைக்காய் துவையல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க -
International Yoga Day 2026: முதுகு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த 4 யோகாசனங்களை தினமும் செய்யுங்க.. -
சூரியன் மிதுன ராசி செல்வதால் உருவாகும் ராஜயோகம் இந்த 3 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் கொடுக்கப்போகுதாம் -
சாணக்கிய நீதி படி பெண்கள் இந்த 5 வகை ஆண்களுடன் நட்போ, காதலோ வைத்துக் கொள்ளக்கூடாதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 15-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்கு நிதி, தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது!
புதிதாக திருமணமான தம்பதிகள் படுக்கையறைக்கு செல்வதற்கு முன்பு என்ன செய்கிறார்கள் தெரியுமா?
தம்பதிகள் ஒரே நேரத்தில் படுக்கைக்குச் செல்வது மிக முக்கியம்.
நாம் எவ்வாறு வித்தியாசமான காரியங்களைச் செய்கிறோம் என்பதை பொருத்தே நாம் தனித்து இருப்போம். திருமணமான புதிதில் நிறைய தம்பதிகள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். மகிழ்ச்சியான திருமணமான தம்பதியினரின் வாழ்க்கையைப் பற்றி அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லாதவர்களிடமிருந்து இது வேறுபடுகிறது. மேலும், ஒரு நாளை நாம் எவ்வாறு முடிக்கிறோம் என்பது, நம் வாழ்க்கையை எவ்வாறு வழிநடத்துகிறது என்பதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

மகிழ்ச்சியாக தொடங்கும் சில நாட்கள் கோபத்துடனும், வெறுப்புடனும், மகிழ்ச்சி இல்லாமல் முடியும். எனவே, படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு மிகவும் மகிழ்ச்சியுடன் திருமணமான தம்பதிகள் செய்யும் சில விஷயங்களைப் பற்றி பார்ப்போம். இது உங்கள் குடும்ப ஆரோக்கியத்திற்கும், மன அமைதிக்கும் வழிவகுக்கும்.

ஒரே நேரத்தில் படுக்கைக்கு செல்வது
தம்பதிகள் அனைவரும் நினைவில் கொள்ளுங்கள். ஒன்றாக தூங்கும் ஒரு ஜோடி எப்போதும் ஒன்றாகவே இருப்பார்கள். ஆனால், தற்போதுள்ள பிஸியான காலகட்டத்தில் ஒன்றாக நேரங்களை செலவிட தம்பதிகளுக்கு நேரம் கிடைப்பதில்லை. சில தம்பதிகள் வெவ்வேறு வேலை நேரங்களைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இதனால் வெவ்வேறு நேரங்களில் படுக்கைக்குச் செல்லக்கூடும். ஆனால் உறவு நிபுணர்களின் கூற்றுப்படி, தம்பதிகள் ஒரே நேரத்தில் படுக்கைக்குச் செல்வது மிக முக்கியம். இது அவர்களின் உறவில் அரவணைப்பையும் நெருக்கத்தையும் அதிகரிக்க உதவுகிறது.

தேவையில்லாத விவாதங்கள்
படுக்கையறை என்பது உங்களுக்கும், உங்கள் துணைக்கும் சொந்தமான ஒரு இடம். அங்கு தேவையில்லாத விவாதங்களை உங்களுக்குள் நிகழ்த்த வேண்டாம். இவ்விடத்தில் உங்களுக்குள் அன்பை அதிகரிக்க என்ன செய்யலாம். உங்களுடைய தாம்பத்திய வாழ்க்கையை இன்னும் மேம்படுத்த என்ன செய்யலாம் என்ற காதலுடன் கூடிய விவாதங்களை படுக்கையறையில் நீங்கள் பகிர்ந்துகொள்ளலாம்.

"நோ” ஸ்மார்ட்போன்
ஸ்மார்ட்போன்கள் நம் வாழ்வில் சாபம் மற்றும் வரம். மக்கள் அனைவரின் கைகளையும் ஆக்கிரமித்திருக்கிறது ஸ்மார்ட்போன். குறிப்பாக சமூக ஊடகங்களில் நாம் அதிகம் சார்ந்திருப்பது நம் வாழ்க்கையையும் நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் பாதிக்கும். மகிழ்ச்சியான ஒருங்கிணைந்த வாழ்க்கையை அனுபவிக்கும் பெரும்பாலான தம்பதிகள், படுக்கையறைக்கு தங்கள் செல்லும்முன் தொலைபேசியை சைலன்ஸில் வைத்திருங்கள். சில தவிர்க்கமுடியாத அழைப்புகளுக்கு மட்டும் அப்போது முக்கியத்துவம் கொடுங்கள்.

கோபம் வேண்டாம்
ஒருபோதும் கோபமாக படுக்கைக்குச் செல்வ வேண்டாம். புதிதாக திருமணமான தம்பதிகள் ஒருபோதும் கோபமாக படுக்கைக்குச் செல்ல மாட்டார்கள். அவர்களுக்கு சண்டை அல்லது கருத்து வேறுபாடு இருந்தாலும், அதைத் தீர்ப்பதற்கான வேலையை அவர்கள் செய்கிறார்கள். நிபுணர்களின் கூற்றுப்படி, தூங்கச் செல்லும்போது எதிர்மறை உணர்வுகளை வளர்ப்பது நம் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, மன அமைதியையும் எதிர்மறையாக பாதிக்கிறது.

படுக்கையறைக்குள் வேலை வேண்டாம்
நீங்கள் படுக்கைக்குச் செல்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே அலுவலகத்தைப் பற்றி தொடர்ந்து நினைப்பதை விட்டுவிடவேண்டும். இன்னும் சொல்லப்போனால், அலுவலக வேலைகளை அலுவலகத்திலே முடித்துவிட்டு, வீட்டிற்கு வரும்போது புத்துணர்ச்சியுடன் வர வேண்டும். படுக்கையறையில் வேலை செய்பவர்களுக்கு மற்றும் அதை பற்றி சிந்திப்பவர்களுக்கு அல்லது கவலைப்படுபவர்களுக்கு மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை கிடைப்பது குறைவு என்று ஆய்வு முடிவு கூறுகிறது.

படுக்கையறையில் நேரத்தை செலவிடுதல்
படுக்கையறை என்பது தம்பதியினர் ஒருவருக்கொருவர் எவ்வித இடையூறும் இல்லாமல் தங்களின் நேரத்தை செலவழிக்கும் ஒரு இடம். திருமணமான தம்பதிகள் தங்கள் படுக்கையறையை சரியாக பயன்படுத்துக்கிறார்கள். தங்களுடைய அன்பை, காதலை ஒருவொருக்கொருவர் சரியாக பரிமாறிக்கொள்கிறார்கள். இதனால் அவர்களுடைய தாம்பத்திய வாழ்க்கையும் மகிழ்ச்சிகரமானாதாக இருக்கும்.

புதிய உலகமாக இருக்க வேண்டும்
உங்களுடைய படுக்கையறை என்பது நீங்களும், உங்களுடைய துணை மட்டும் இருக்கும் புதிய உலகமாக நினைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்குள் மகிழ்ச்சியாக விளையாடுங்கள். காதல் மற்றும் ரொமாண்டிக் திரைப்படங்களை காணுங்கள். தாம்பத்திய வாழ்க்கையை பற்றி இருவரும் பேசி, ஒருவருகொருவர் விரும்புவதைபோல நடந்துகொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையிலும், படுக்கையறையிலும் வசந்தம் என்னும் தென்றல் வீசும்.



Click it and Unblock the Notifications