For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஷில்பா ஷெட்டி சொல்லும் பெட்ரூம் ரகசியங்கள்... இத ட்ரை பண்ணினா சண்டையே வராதாம்

|

திருமண உறவு என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாத ஒரு பந்தமாகும். ஒவ்வொரு வருடமும் இந்த உறவிற்குள் ஏராளமான புதுமணத் தம்பதிகள் அடியெடுத்து வைக்கிறார்கள். இப்பொழுது எல்லாம் அம்மா வீட்டிற்கு போய்ட்டு வந்தாலே விவகாரத்து செய்து விடுகிறார்கள். தொட்டது எல்லாத்துக்கும் குத்தம் தான் கணவன் மனைவி இடையே இருந்து வருகிறது. ஏன் பாலிவுட்டிலயே டீப்வீர், விருஷ்ஸ்கா, நிக்க்யங்கா, சோனம்-ஆனந்த் என்ற ஏராளமான திருமணங்களை நீங்கள் கண்டு இருப்பீர்கள்.

எல்லாரும் திருமணத்திற்கு பிறகு அவர்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டியிருக்கிறது. இதுவரை நாம் இருந்தது தனியாக, இப்போது ஒருவருடன் சேர்ந்து பயணிக்க போகிறோம். எதிலும் இருவராக முடிவுகள், விருப்பங்கள் எடுக்கப்பட வேண்டிய தருணம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கணவன் - மனைவி

கணவன் - மனைவி

Image Courtesy

இருகோடுகள் போல் தங்கள் வாழ்க்கையை ஒரு சேர பயணிக்க வேண்டும். எதாவது சிக்கல்கள், பிரச்சினைகள் வந்தால் திருமண உறவுகள் சிதைந்து போகக் கூடும். நூறு வருஷம் சிறந்த தம்பதிகளாக வாழ்வது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல. இன்றளவும் நம்மளைச் சுற்றி ஏராளமான தம்பதிகள் தங்கள் உறவை முறித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் சிலர் ஆத்மார்த்தமான தம்பதிகளாக வாழ்ந்து கொண்டு தான் இருக்கவும் செய்கிறார்கள்.

MOST READ: பிரா அணியாமல் சிவப்பு சட்டையோடு காலண்டருக்கு போஸ் கொடுத்த ஹாட் சன்னி லியோன்...

சகிப்புத்தன்மை

சகிப்புத்தன்மை

சின்ன சின்ன விஷயத்தை கூட சகித்து போகாமல் விவகாரத்து வாங்கி வரும் கணவன் மனைவிகள் பெருகிக் கொண்டு தான் இருக்கிறார்கள். எங்கே செல்கிறது இந்த உறவின் பந்தம்? அவர்கள் மனதில் இருக்கும் காதல் எங்கே போய்விட்டது? ஏன் எந்த உறவு பிரச்சினைகள்? இப்படி ஏராளமான பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் விதமாக தன்னுடைய வாழ்க்கை அனுபவத்தை நம்முடன் பகிர்கிறார் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி அவர்கள்.

ஷில்பா ஷெட்டி

ஷில்பா ஷெட்டி

ஷில்பா ஷெட்டி குந்த்ரா, அவரது கணவர் ராஜ் குந்த்ராவுடன் ஒரு வலுவான உறவை வளர்த்துக் கொள்வதற்கான கடினமான பிரச்சினைகளைக் கடந்து வந்தவர். ஒரு வலுவான உறவை நீட்டிக்க அவர் என்ன கூறுகிறார் என்பதை பற்றி தான் நாம் காண போகிறோம்.

உறவில் பொறுமை அவசியம்

உறவில் பொறுமை அவசியம்

Image Courtesy

இப்பொழுது உள்ள உறவில் பொறுமை என்பதே கிடையாது என்கிறார் ஷில்பா. தன் அன்பான துணைக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க கூட சிலருக்கு பொறுமை இருப்பதில்லை. எதிலும் எடுத்தோம் கவுத்தோம் முடிவு தான் எடுக்கிறார்கள். உங்கள் துணை உங்களை புரிந்து கொள்ள சிறிது நேரம் கொடுங்கள். உடனே உறவுக்குள் நுழைந்ததும் உங்களை புரிந்து நடந்து கொள்ள வேண்டும் என்று மல்லு கட்டாதீர்கள். எல்லாரும் மனிதர்கள். எல்லாரும் தவறு செய்வோம் என்பதை புரிந்து பொறுமையாக நடந்து கொள்ளுங்கள்.

ஓட்டம் தேவையில்லை

ஓட்டம் தேவையில்லை

காதலில் அவசரம் கூடாது. நிதானமாக உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள். காதலை பரிமாறிக் கொள்ளுங்கள். அப்பொழுது தான் உறவு சலிக்காது. திருமணமான இரண்டு நாட்கள் மட்டும் உருக உருக காதலித்து விட்டு பிறகு காதலை வெளிப்படுத்தாமல் இருக்காதீர்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதலை வெளிப்படுத்துங்கள். இது உங்கள் பிணைப்பை வலுவாக்கும். நேரம் ஒதுக்குங்கள்.

ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளுங்கள். உணர்வு ரீதியான ஒரு பந்தம் என்றைக்கும் தோற்று போகாது. காதலிக்க ஏன் வெட்கப்படுகிறீர்கள். உங்களில் பாதி உங்கள் வாழ்க்கையில் பாதியாக உங்களுடன் கைகோர்த்து வரும் அவர்களுக்காக உங்கள் காதலை கொடுப்பதில் தப்பில்லையே என்கிறார் ஷில்பா.

MOST READ: பிணத்தை எரித்து அதை வாழைப்பழத்தில் தொட்டு சாப்பிடும் விநோத பழக்கம்... எங்க நடக்குது தெரியுமா?

பழைய காலம்

பழைய காலம்

முந்தைய காலத்தில் ஒரு திருமண உறவு என்பது ஏராளமான கட்டுப்பாடுகள் இருந்தது. ஆண் பெண் இருவருக்கும் சமமான உரிமை கிடைப்பதில்லை. ஆனால் இப்பொழுது நிறைய மாறியிருக்கிறது. பெண்கள் தங்கள் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் வரை முன்னேறி இருக்கிறார்கள்.

ஆண் பெண் இருபாலரும் சேர்ந்து குடும்பத்தை கவனித்து கொள்கிறார்கள். எனவே இந்த புரிதல் உறவில் இருக்க வேண்டும். இந்த மாற்றங்களை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும். இருவருடைய உணர்வுகளை புரிந்து நடந்து கொள்வது உறவில் விரிசல் ஏற்படாமல் இருக்க உதவும்.

அழகை மட்டும் பார்க்காதீர்கள்

அழகை மட்டும் பார்க்காதீர்கள்

எல்லாருக்கும் அழகான பெண், பையன் என்றால் பிடிக்காமல் இருக்காது. ஆனால் அழகு மட்டுமே வாழ்க்கை முழுவதும் வரப் போவதில்லை. அது இன்று இருக்கலாம் நாளை போய்விடலாம். அதையும் தாண்டி ஒருவரின் குணம், நடத்தை, பழக்க வழக்கங்கள், அறிவு, நகைச்சுவை உணர்வு இவை தான் என்றும் மாறாமல் நம்முடன் பயணிக்கும். எனவே வெளிப்புற அழகை மட்டும் பார்த்து உறவுக்குள் நுழையாமல் அகத்தின் அழகையும் பாருங்கள். வாழ்க்கை அழகாகும் .

தேவைகள்

தேவைகள்

உறவில் எதிர்ப்பார்ப்புகள் தேவைகள் என்பது மிக முக்கிய இடம் வகிக்கிறது. உங்களுடைய துணையின் தேவைகளும் உங்களின் தேவைகளும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனவே அவர்களின் தேவைகள், எதிர்ப்பார்ப்புகள் குறித்து காது கொடுத்து கேளுங்கள். அதை ஒரு காதலராக/காதலியாக நிறைவேற்றி வையுங்கள். இது உங்கள் உறவை முன்னோக்கி கொண்டு செல்லும். இதை நீங்கள் செய்யாவிட்டால் அவர்கள் உறவில் விரக்தி அடைய வாய்ப்புள்ளது.

உறவு சமநிலை

உறவு சமநிலை

நாம் எல்லாரும் மனிதர்கள். எல்லாரும் சமமானவர்கள். ஆண் பெண் என்ற பேதம் உறவில் கிடையாது. உங்கள் துணையை சரிசமமாக நடத்த கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் அன்பிற்கு பாத்தியப்பட்டவர் அவர், உங்களுக்கு நம்பிக்கை கொடுப்பவர், உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை உள்ளவர், உங்கள் பிரச்சினைகளுக்கு காது கொடுப்பவர் அப்படிப்பட்ட உங்கள் துணையை அடிமை படுத்துவதை நிறுத்துங்கள். மரியாதை கொடுங்கள், மதிப்பளியுங்கள். அவர்கள் செலவழிப்பதற்கு பணம் கேட்பது, அவர்கள் தேவைகளுக்கு தடை விதிப்பது இது போன்ற சில்லித்தனமான விஷயங்களை செய்யாதீர்கள்.

MOST READ: 4 மாத கர்ப்பமாக இருந்த ஆட்டை கதறக் கதற பாலியல் வன்புணர்வு செய்த காமக்கொடூரன்...

என்ன செய்ய வேண்டும்?

என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் இருவரும் காதலிக்கிறீர்கள். அவருடைய சந்தோஷம் உங்களுடையது உங்களுடைய சந்தோஷம் அவர்களுடையது என்று ஒருத்தர் நிலையில் இருந்து ஒருத்தர் என புரிந்து கொண்டு வாழுங்கள். அப்பொழுது தான் எத்தனை காலம் ஆனாலும் உங்கள் திருமண உறவு உயிரோடு இருக்கும். ஒரு உறவு மடிவதும் உயிர்த்தெழுவதும் நம் கையில் தான் இருக்கிறது. ஆண் பெண் இருவரும் இதை புரிந்து கொண்டு அனுசரித்து வாழ்ந்து வந்தால் அந்த உறவு என்றைக்கும் பேசும். உறவின் அர்த்தம் புரியும் என்கிறார் ஷில்பா ஷெட்டி அவர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Shilpa Shetty Shares 6 Relationship Goals

While all relationships are unique, with different issues, most of them can benefit from some solid, common sense advice, and that’s what Shilpa is about to lay down.
Story first published: Tuesday, February 5, 2019, 12:50 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more