வேலை கொடுப்பதாக சொல்லி நிறைய பெண்களை ஏமாற்றியதால் கொலை! my story #271

கணவனை கொலை செய்த மனைவி சொன்ன பகீர் காரணம்.

கடந்த வாரம் மத்திய பிரதேசத்தில் இருக்கிற ஒரு அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து போலீசாருக்கு ஒரு போன் வந்தது, பக்கத்து வீட்டில் வசித்து வந்த மருத்துவரை யாரோ வெட்டி கொலை செய்து விட்டு சென்றிருக்கிறார்கள் என்றார்கள். புகார் வந்த இடத்திற்கு உடனடியாக போலீசார் விரைந்தார்கள். படுக்கையறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார் அந்த மருத்துவர் .

சஃபதுல்லா கான் என்ற அந்த மருத்துவரின் மனைவி அழுது கொண்டிருந்தார். இரவு திருடன் உள்ளே நுழைந்துவிட்டான் அவனை கணவர் பார்த்துவிட்டார் எங்கே சத்தம் போட்டுவிடுவாரோ என்று சொல்லி இப்படி செய்து விட்டான் என்று அழுது தீர்த்தாள். மார்பு பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட வெட்டு காயங்களோடு இறந்து கிடந்த கானின் உடலை பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள் மருத்துவர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

இந்த கொலையை செய்தது யார்? முதலில் திருடன் எந்த வழியாக வீட்டிற்குள் நுழைந்திருப்பான் ஆட்கள் தூங்கிக் கொண்டிருப்பார்கள் என்று தெரிந்தே படுக்கை அறைக்குள் நுழைய வாய்ப்பில்லை பல கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டார்கள்.

மனைவி முன்னுக்குப் பின் முரணாக பேசிவே போலீசாரின் கவனம் மனைவி மீது திரும்பியது.

#2

#2

அதோடு மருத்துவர் கானின் உடலில் வெட்டுக் காயங்களை பார்க்கும் போது எதோ தப்பிப்பதற்காக அவசரமாக வெட்டியதைப் போல இல்லை உயிர் போக வேண்டும் என்ற எண்ணத்தில் ஆளமாக வெட்டப்பட்டிருக்கிறது. அதோடு மிக அருகில் இருந்து வெட்டியிருந்தால் மட்டுமே இவ்வளவு ஆளமாக வெட்டியிருக்க முடியும்.

இந்த விவகாரத்தில் கவனிக்கத்தக்க இன்னொரு முக்கியமான விஷயம் கானின் பிறப்புறுப்பும் துண்டிக்கப்பட்டிருந்தது.

#3

#3

இது திருடர்கள் செய்த வேலையல்ல நிச்சயமாக கானுக்கு மிக நெருக்கமானவர் செய்திருக்க கூடும் என்ற முடிவுக்கு வந்தார்கள். முதல் விசாரணையை அவரின் மனைவியிடமிருந்தே ஆரம்பித்தார்கள். முதலில் மறுத்து வந்தவர் பின்னர் வேறு வழியின்றி குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

கொலை செய்ததை ஒப்புக் கொண்டதை விட அதற்கான காரணம் தான் போலீசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

 #4

#4

முதலில் இந்த கொலையை மனைவி மட்டும் தனியாக செய்திருக்க முடியாது இவருக்கு துணையாக யார் இருந்தார்கள் இந்த கொலையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்று விசாரித்தார்கள். அந்த அப்பார்ட்மெண்ட் வாயிலில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் மூலமாக கொலை நடந்த அன்று உறவுக்கார பெண் மற்றும் அவரது கணவர் வந்திருக்கிறார்கள்.

இன்னும் இரண்டுக்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபர்கள் வந்திருக்கிறார்கள்.

#5

#5

கானின் மனைவி இது குறித்து கூறுகையில், எங்களுக்கு திருமணமாகி ஒரு மகள் இருக்கிறாள். கணவர் சரியான வுமனைசர் அவர் மீது ஏகப்பட்ட புகார்கள் தன்னுடைய மருத்துவமனையில் நர்ஸ் வேலை தருவதாக சொல்லி பல பெண்களை ஏமாற்றியிருக்கிறார்.

பல முறை இதைக் கண்டித்தும் கேட்பதாயில்லை. பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவரது உறவினர்கள் ஒரு கட்டத்தில் என்னை அசிங்கமாக பேச ஆரம்பித்தார்கள்.

 #6

#6

வெளியில் மட்டுமல்ல வீட்டிலும் அவர் அப்படித்தான் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த எங்கள் உறவுக்கார பெண்ணை மைனராக இருக்கும் போதிருந்தே என் கணவர் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அந்த பெண்ணுக்கு திருமணமான பின்னும் இந்த கொடுமை தொடர்ந்திருக்கிறது.

எத்தனையோ முறை எடுத்துச் சொல்லியும் அவர் கேட்கவில்லை.

 #7

#7

இதைவிட மிகப் பெரிய கொடுமையாக தன் சொந்த மகளையே தன் காம பசிக்கு இரையாக்க நினைத்தார். நானும் மகளும் பல இரவுகள் தூங்காமல் விழித்துக் கொண்டேயிருந்தோம்.

பொதுஇடங்களில் கவனமாக இருக்க வேண்டிய நிலைமை மாறி சொந்த வீட்டிலேயே அதுவும் அப்பாவை நினைத்தே பயந்து நடுங்கிக் கொண்டிருக்க வேண்டிய அவல நிலை எங்கள் வீட்டில்.

#8

#8

கெஞ்சியும் மிரட்டியும் என எத்தனையோ முறை சொல்லிப் பார்த்தோம். இவரால் பாதிக்கப்பட்ட பெண்களை நினைத்தால் மிகவும் வருத்தமாக இருந்தது. அதோடு ஒவ்வொரு நாளும் இவரை நினைத்து பயந்து கொண்டு காலத்தை ஓட்ட முடியாது என் மகளையாவது கண்டிப்பாக நான் காப்பாற்றியாக வேண்டும் என்று துணிந்து ஒரு முடிவுக்கு வந்தேன்.

நாளுக்கு நாள் அவரின் கொடுமை அதிகரித்து வருகிறது தயவு செய்து இதற்கு எதாவது ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று சொல்லி உறவுக்கார பெண்ணிடம் சொன்ன போது தான் தானும் இவரால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொன்னாள்.

#9

#9

நான் அந்த உறவுக்கார பெண் மற்றும் அவரது கணவர் மூன்று பேரும் சேர்ந்து கானை கொன்று விடலாம் என்று முடிவெடுத்தோம். முதலில் இவரை கொலை செய்து உடனடியாக விடுவித்து விடக்கூடாது அவரது பிறப்புறப்பை மட்டும் அறுத்துப் போட வேண்டும் என்றேன்.

ஒரு வேலை எங்களிடமிருந்து தப்பித்துவிட்டாள் ? அதனை கூலிக்கு ஆட்கள் அழைத்து கண்டிப்பாக இதை முடித்து விட வேண்டும் என்று முடிவெடுத்தோம்.

#10

#10

நாங்கள் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடியே ஜூன் 10 ஞாயிற்றுக்கிழமை இரவு கணவர் தூங்கியதும் சுமார் பன்னிரெண்டு மணியளவில் கூலிக்கு கொலை செய்ய நாங்கள் நியமித்த இரண்டு நபர்கள், உறவுக்கார பெண் மற்றும் அவரது கணவர் ஆகியோர் எங்களுடைய உறவினர் போர்வையில் அப்பார்ட்மெண்ட்டுக்குள் வந்தார்கள்.

நானும் மகளும் ஒரு அறையிலும் கணவர் தனியாக இன்னொரு அறையிலும் படுத்திருந்தார்.

 #11

#11

நான் மட்டும் எழுந்து வந்து மகள் படுத்திருந்த அறையை பூட்டினேன். நானும் உறவுக்கார பெண்ணும் முதலில் கணவர் படுத்திருந்த அறைக்கு சென்று அவரது காலை பிடித்துக் கொண்டோம் ஆனால் அவர் விழித்துக் கொண்டு அறையை விட்டு செல்ல நினைத்தார்.

ஆனால் அறையின் வாசலில் நின்றிந்த உறவுக்கார பெண்ணின் கணவர் மற்றும் கொலை செய்வதற்காக நியமித்த ஆட்கள் அவரை இடைமறித்தார்கள் அவர்களையும் மீறி வெளியேற முயன்றார் அதோடு சத்தம் போட்டதால் குரலை அடக்க வெட்டிவிட்டோம் என்றார்.

 #12

#12

இந்த கொலை தொடர்பாக கானின் மனைவி அவரது உறவுக்கார பெண் மற்றும் அவரது கணவரை கைது செய்திருக்கிறார்கள் கொலைக்காக நியமிக்கப்பட்ட கூலிப்படையினரையும் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தையும் போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

கானின் மருத்துவமனை மற்றும் உறவினர்களிடத்தில் போலீசார் விசாரணை நடத்த இருக்கிறார்கள் அதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றிருக்கிறார்கள் போலீசார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Monday, June 18, 2018, 13:04 [IST]
Desktop Bottom Promotion