For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மனைவியின் கள்ளத்தொடர்பு கணவனுக்கு தெரியவரும் போது கிடைத்த அதிர்ச்சி! My story 131

|

காதல் இந்த நேரம் காலம் பார்த்து தான் வர வேண்டுமா என்ன? அதை விட திருமணத்திற்கு பிறகு காதல் நினைத்து கூட பார்க்க முடியாது என்று யார் சொன்னது என்று தெரியவில்லை.

திருமணத்திற்கு பிறகு பிரிந்த காதலனையும் சரி புதிதாக வேறு ஆடவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டாலும் அதனை நாம் வெளியில் சொல்லக்கூடாது. ஏன் அதனை வெளிப்படுத்தக்கூடாது. அப்படி மூடி மறைத்து சாயம் பூசி என்ன செய்யப்போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காதல் கணவா :

காதல் கணவா :

கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்ததிலிருந்து திருமணப் பேச்சு எடுக்கப்பட்டது. ஆனால் எப்படியோ தட்டுத் தடுமாறி பி ஜி வரை படித்தேன். நடுவில் விமலுடன் காதல்.என் சீனியரின் நண்பனாக அறிமுகமாகி பின் காதலனாகி பின் கணவரானவன்.

வீட்டில் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. கோவிலில் திருமணம் செய்து கொண்டு வீட்டு வாசலில் நின்றோம். உள்ளே வந்து விடாதே என்ற எச்சரிக்கையுடன் அப்படியே அனுப்பினார்கள் கூடவே... நீ உருப்படவே மாட்ட நாசமாப்போய்டுவ என்ற வாழ்த்தும் கிடைத்தது.

புகுந்த வீடு :

புகுந்த வீடு :

அவனுக்கு அடிக்கடி வெளியூர் செல்லவேண்டிய வேலை. ஊரில் அத்தை மாமாவுடன் இருந்தேன். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இங்கே வருவான். தொடர்ந்து நான் நச்சரித்ததால் என்னையும் குழந்தைகளையும் அவன் வேலை பார்த்துக் கொண்டிருந்த சென்னைக்கு அழைத்துச் சென்றான். அத்தை மாமா இங்கேயே ஊரிலேயே இருப்பதாக சொல்லிவிட்டார்கள்.

புது இடம் :

புது இடம் :

நானும் குழந்தைகளும் அங்கே ஜாலியாக நேரத்தை செலவழிக்கலாம். குழந்தைகளை பெரிய பள்ளிக்கூடத்தில் படிக்க வைக்கலாம் போன்ற எக்கச்சக்க கனவுகள்.எதிர்பாராத விதமாக அலுவலகத்திலிருந்து திடீரென்று வேலையிலிருந்து நீக்கப்பட்டான் விமல்.

காரணம் அங்கே பணத்தை கையாடல் செய்ததாக சொன்னார்கள். திருமண வாழ்க்கை அப்படியே தலைகீழாக மாறியது.

நான் காரணமல்ல :

நான் காரணமல்ல :

என் உயரதிகாரி ஒருவர் கையாடல் செய்து விட்டார். அவரைக் காப்பாற்றுவதற்காக என் பெயரை இழுத்து விட்டிருக்கிறார்கள் . என் மீது எந்த தவறும் இல்லை இந்த புகார் இருப்பதால் இனி வேறு இடத்தில் வேலை கிடைப்பதும் கஷ்டம் என்றான்.

நகைகளை விற்று பணம் கொடுத்தேன். பிஸ்னஸ் ஆரம்பிக்க நானும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன். இரண்டு குழந்தைகளையும் சாதரண பள்ளிக்கூடத்திற்கு மாற்றினேன். எவ்வளவு இறுக்கி பிடிக்க முடியுமோ அவ்வளவு இறுக்கிப் பிடித்து பணத்தை சேமித்தேன்.

சந்தோசம் என்றால் என்ன ? :

சந்தோசம் என்றால் என்ன ? :

வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருந்தது. மூன்று வேலை உணவு நிம்மதியாக கிடைத்தது. தன் மீது வீண் பழி சுமத்தி அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டதிலிருந்து விமல் நார்மலாக இல்லை. மிகவும் இறுக்கமாகவே இருந்தான். தினமும் இரவில் குழந்தைகளுடன் டிவி பார்க்கும் பழக்கமுடையவன் அதை முற்றிலுமாக தவிர்த்தான்.

அடிக்கடி கோபப்படுவது, என்னையும் குழந்தைகளையும் அவ்வப்போது அடிப்பதும் உண்டு. அவனின் கோபத்தை இங்கே தானே காட்டமுடியும் என்று நானும் அமைதியாக இருந்து விடுவேன்.

இதல்லவா வாழ்க்கை :

இதல்லவா வாழ்க்கை :

மிகவும் சலிப்புத் தட்டிய வாழ்க்கை. வீடு அலுவலகம் என்று மாறி மாறி பயணித்து எனக்கு மிகவும் எரிச்சலாய் இருந்தது. இங்கிருந்து தப்பிக்க முடியாது அதைவிட இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக அந்த வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தேன்.

அப்போது அலுவலகத்தில் ஒரு நண்பன் கிடைத்தான். நண்பன் என்ற முறையில் அறிமுகமானவன் என் மீது அதீத அக்கறை கொண்டிருந்தான். நாங்கள் நிறைய விஷயங்களை பேச ஆரம்பித்தோம். கணவரைப் பற்றி , அவர் ஏமாற்றப்பட்டதைப் பற்றி எல்லாம் சொன்னேன்.

காதல் :

காதல் :

ஆதாரமில்லாமல் இப்படி வெளியேற்ற முடியாது. நாம் போலீசில் புகார் அளிக்கலாம். அந்த அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வைக்கலாம். அதற்கு என்ன செய்ய வேண்டும் போன்ற நடைமுறைகளைச் சொன்னான்.

நம்பிக்கையளித்தான். அதை விட நீங்க ரொம்ப போல்ட் , இந்த நேரத்துல ஹஸ்ப்ண்ட் மேல நீங்களும் கோபப்படாம சப்போர்ட் பண்ணும்னு வேலைக்கு வந்திருக்கீங்க. அத விட இப்டி ஒரு பிரச்சனை வந்தா எப்டி ஃபேஸ் பண்றதுன்னு தெரியாம முழிப்பாங்க.. யூ ஆர் க்ரேட் என்று சொல்லி கை குலுக்கினான்.

சபாஷ் :

சபாஷ் :

நினச்சேன்.... எங்கடா என் பொண்டாட்டி தினமும் விதவிதமா பொடவ கட்டிட்டி காலங்காத்தால கிளம்பி போறாலேன்னு இப்போ வீட்டுக்கே கூட்டிட்டு வர ஆரம்பிச்சிட்டியாடீ என்று திடீரென்று எதிரில் வந்து நிற்கிறான் விமல்.

ஒரு கணம் கூசி நின்றேன். விமல் என்ன பேச்சு பேசுற சாய்ந்த்ரம் பாப்பா பொறந்தநாள் ஃபன்க்‌ஷனுக்கு வந்திருக்காரு அவரு ஆபிஸ்ல கூட வேலப்பாக்குறவறு. தேவையில்லாம பேசாத என்றேன்.

கள்ளக்காதலன் :

கள்ளக்காதலன் :

விமல் நம்பவேயில்லை. அவன் உன் கைய பிடிச்சிருந்தான் நான் வந்த உடனே விலகிட்டான். என்னை ஏமாத்திட்டியேடி.... பாவி குழந்தைங்கள நினச்சுப் பாத்தியா. இப்டி ஏமாத்திட்டியே என்று சொல்லி என்னை கண்ணத்தில் அறைந்தான். அந்த நண்பரையும் அடிக்க அவன் தெரித்து அறையை விட்டு வெளியேறினான்.

வீட்டை விட்டு வெளியே போ:

வீட்டை விட்டு வெளியே போ:

எனக்கு அன்றைக்கு முழுவதும் அடியும் உதையும் விழுந்தது. குழந்தைகளுக்கும் அடி, இனி நீ வீட்லயே இருக்க கூடாது போ அவன் கூடவே போய்டு இங்க வந்திராத என்று கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளினான்.

குழந்தைகள் இருவரும் என்ன செய்வதென்று தெரியாமல் அழுது கொண்டிருந்தார்கள். அப்பா அம்மாவ அடிக்காதப்பா அம்மா பாவம்பா என்று மகன் விமல் காலில் விழுந்து கெஞ்சினான். எழக்கூட முடியாமல் வீட்டு வாசலில் கிடந்த என்னை அம்மா எந்திரி.... அம்மா முழி என்று சொல்லி மகள் உசுப்பிக் கொண்டிருந்தாள்.

இறந்து விடுகிறேன் :

இறந்து விடுகிறேன் :

அன்று முழுவதும் நான் அங்கேயே கிடந்தேன். குழந்தைகள் அழுது அழுது சோர்ந்து போய் தூங்கிவிட்டார்கள். என்னை வெளியே தள்ளி கதவைப் பூட்டிய விமல் கதவைத் திறக்கவேயில்லை.

கையில் ஒரு பைசா இல்லை, உதவிக்கு யாரையாவது அழைக்கலாம் என்றாலும் கையில் போன் இல்லை. என்ன செய்வதென்றே தெரியவில்லை இந்த வாழ்க்கையே வேண்டாம் என்று எங்காவது போய் விழுந்து இறந்து விடலாமா என்று தோன்றியது.

கையாடல் :

கையாடல் :

நான் பணத்த எடுக்கவேயில்ல அவங்க எந்த பணத்த பத்தி பேசுறாங்கன்னு கூட எனக்குத் தெரியாது. ஆர்டர் வாங்குறதோட என் வேல முடிஞ்சது கமிஷன் பத்தி கூட நான் பேச மாட்டேன் ஆனா பணத்த கையாடல் பண்ணிட்டேன்னு என் மேல பழின்னு விமல் பஸ்ஸ்டாப்ல நின்னு அழுதப்போ அரவணுச்சு கவலப்படாதன்னு சொன்னேன்.

சந்தேக புத்தி :

சந்தேக புத்தி :

ஆனா விமல் இவ இப்டி செய்வாளான்னு ஒரு நிமிஷம் கூட யோசிக்காம கை வச்சிட்டான். குழந்தைங்க முன்னாடி இவ்ளோ கேவலமா அசிங்கமா பேசிட்டான் குழந்தைங்க முன்னாடி...

அத விட எனக்கு உதவுணும்னு நினச்ச அவன் என்ன நினச்சிருப்பான்.

எச்சில் இலை :

எச்சில் இலை :

இனி இந்த வாழ்க்கையே வேண்டாம் எங்காவது போய் இறந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் அழுது கொண்டே கால் போன போக்கில் நடந்தேன். இரவு பத்து மணியிருக்கும் பசி வயிற்றை கிள்ளியது. அடடே இந்நேரம் குழந்தைகளுக்கும் பசிக்குமே... இப்படி ஆனாதையாக போட்டு வந்து விட்டோம் என்று தோன்றியது.

ரோட்டோரக் கடையில் சாப்பிட்டுவிட்டு எச்சில் இலையை தூக்கி வீசினார்கள். இனி என்ன செய்யப்போகிறேன்,யாரிடம் சென்று உதவி கேட்கப் போகிறேன் என்று எதுவும் தெரியாது. தூக்கி வீசப்பட்ட இலையை போல் அங்கே நானிருந்தேன். எந்த போக்கிடமும் இல்லாமல் அங்கே ஓரத்தில் ப்ளாட்பாரத்தில் உட்கார்ந்திருந்தேன். சாலையில் போவோர் வருவோர் என்னை ஒரு மாதிரி பார்த்துச் சென்றார்கள்.

என்னுடன் வா :

என்னுடன் வா :

என் முகத்தில் ஒளியை பாய்ச்சப்படி ஒரு பைக் வந்து நின்றது. என் கணவரால் அடித்து விரட்டப்பட்ட அந்த அலுவலக நண்பன். அந்த ரோட்டோரக் கடையிலிருந்து இட்லியை வாங்கி கையில் திணித்தான்.

எதுவும் பேசாமல் வாங்கி சாப்பிட ஆரம்பித்தேன். முழுவதும் சாப்பிட்டு முடித்ததும் எழுந்து அவனைப் பார்த்தேன். தோலில் கை போட்டான். மனதில் புழுங்கிக் கொண்டிருந்தவை எல்லாம் அழுகையாய் வெடித்தது. முழுவதுமாக அவனிடம் அழுதுத் தீர்த்தேன்.

இங்க அழ வேண்டியது நீ இல்ல.... உனக்கு இப்போ ரெண்டு வழியிருக்கு இங்கயிருந்து புது வாழ்க்கைய ஆரம்பிக்கலாம் இன்னொன்னு பழைய வாழ்க்கைக்கே திரும்பலாம் உன்ன இந்த வழில தான் போகணும்னு கட்டாயப்படுத்தல நீ வாழப்போற அந்த வாழ்க்கை எப்டி இருக்கணும்னு நீயே முடிவு எடுத்துக்கோ என்றான். புதிய வாழ்க்கையா பழைய வாழ்க்கையே எந்தப் பக்கம் செல்வது என்று தெரியாமல் குழம்பி நிற்கிறேன்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What happens when husband comes to know wife has illegal Affair

What happens when husband comes to know wife has illegal Affair
Story first published: Saturday, January 6, 2018, 16:30 [IST]