Latest Updates
-
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம்
துணையோட ஹேப்பியா இருக்க, வேலை முடிச்சு வீட்டுக்கு வந்ததும் இந்த 13 விஷயம் நீங்க செய்றீங்களா?
இல்வாழ்க்கை குதுகலமா இருக்க, வேலை முடிச்சு வீட்டுக்கு வந்ததும் 13 விஷயம் நீங்க செய்றீங்களா?
வீட்டுல நீங்க ரெண்டு பேருமே வேலைக்கு போறீங்களா? டெய்லி வாழ்க்கை ஒரே மாதிரி மந்தமா போயிட்டு இருக்கா.. எழுந்திருக்கிறோம், குளிக்கிறோம், சாப்பிடுறோம், வேலைக்கு போறோம்... திரும்ப வீடுக்கு வந்து சோர்வா அதே சமையல், தூக்கம்ன்னு என்னடா வாழ்க்கைன்னு நொந்து போய் இருக்கீங்களா? இல்வாழ்க்கையில முன்ன இருந்த மாதிரி உங்க துணை கூட சந்தோஷமா பேசி, சிரிச்சு, இன்பமா இருந்த நாட்கள் திரும்ப கிடைக்குமான்னு நினைக்கிறீங்களா?
நிச்சயம் கிடைக்கும்! நீங்க தினமும் இந்த 13 விஷயத்துல... அஞ்சாறு விஷயத்தை பின்பற்றினா கூட போதும். உங்கள் லைப்ல நீங்க மிஸ் பண்ண அந்த இன்பமயம் திரும்ப கிடைக்கும்...

கலந்தாலோசித்தல்...
கணவன் - மனைவி இருவரும் வேலைக்கு செல்பவராக இருந்தாலும், கணவன் மட்டும் வேலைக்கு சென்று வருபவராக இருந்தாலும் சரி... வீடு திரும்பியதும்... அடுத்த என்ன செய்யலாம் என்று இருவரும் சேர்ந்து முடிவு செய்வது ஆரோக்கியமான இல்லறத்திற்கு ஆதாரமாக இருக்கும். மனைவியை மட்டும் வேலை செய்யவிடாமல்.
குறைந்தபட்சம் என்ன செய்யலாம், இரவு உணவு, காலை உணவு, மறுநாளுக்கான திட்டங்கள் என கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து செய்வது ஒரு நல்ல விஷயமாகும்.

கொஞ்சம் சிரிங்க...
இருவருமே வேலைக்கு செல்வதாக இருந்தால், வேலை சார்ந்த மன அழுத்தம் என்ன என்பது நன்கு தெரிந்துக் கொள்ளலாம். ஒருவராக இருந்தால், வேலைக்கு செல்பவரை காட்டிலும், வீட்டில் நாள் முழுக்க தனியாக இருப்பவரின் மன அழுத்தம் கொஞ்சம் அதிகமாக இருக்கும்.
எனவே, வீட்டுக்கு திரும்பியவுடன் சோர்வாக இருக்கிறது, தொல்லை செய்யாதே என்று புலம்பாமல். ஒருவருடன் ஒருவர் அன்றைய நாள் குறித்து பேசி விசாரித்து. கொஞ்சம் வாய்விட்டு சிரிக்கும் படி ஏதாவது பேசிக் கொண்டால் இல்லறம் நல்லறமாக அமையும்.

மசாஜ்!
முடிந்தால் கணவன் மனைவி ஒருவருக்கு ஒரு மாறி, மாறி மசாஜ் செய்து விடலாம். இது உடலை மட்டுமின்றி, மனதையும் இலகுவாக உணர செய்யும். ஒரு மீது ஒருவர் அன்பு, காதல், நெருக்கம் அதிகரிக்க இதுவொரு சிறந்த கருவியாக அமையும்.
எனக்கு மசாஜ் எல்லாம் செய்யத் தெரியாது என்று கூற வேண்டாம். தோள்கள், கை, கால்களை சற்று இதமாக பிடித்துவிட்டால் கூட போதும். நான் கணவன், ஆண் என்ற கர்வம் எல்லாம் இங்கே கூடவே கூடாது.

தனிமை!
வீடு திரும்பியதும் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்வதை போலவே, சிறிது நேரம் தனிமையில் ரிலாக்ஸ் செய்ய வேண்டியதும் அவசியம். இது அந்தந்த நாளில் ஏற்பட்ட அனுபவம், கடந்த வந்த சூழலை பொருத்தது.
ஒரு சிலருக்கு அன்றைய நாள் மகிழ்ச்சிகரமாக அமைந்திருக்கலாம். ஒரு சிலர் உடன் பணிபுரியும் நபர்களுடன் சண்டையிட்டு, வாக்குவாதம் செய்து வந்திருக்கலாம். இந்த நேரத்தில், சிரித்து பேசுவதோ, மசாஜ் செய்வதோ எல்லாம் முடியாத காரியம். எனவே, தனிமையில் கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் ஆன பிறகு, துணையுடன் அன்றைய நாள் குறித்து பேசலாம்.

கொஞ்சலாம்!
கண்டதை பேசி நேரத்தை வீணடிக்காமல், கொஞ்ச நேரம் ஒருவரை ஒருவரை காதலித்து கொஞ்சி மகிழலாம். புதியதாக திருமணமானவர்கள் இதை நிறையவே செய்வார்கள். ஆனால், வருடங்கள் கடந்து செல்லலும் போது, தாங்கள் செய்த இந்த ரொமான்ஸ் வேலைகளை எல்லாம் மறந்துவிடுவதால் தான் சிலருக்கு இல்வாழ்க்கை போரடிக்கிறது.
இன்னையில இருந்து திரும்ப முயற்சி பண்ணி பாருங்களேன். நிச்சயம் அதே இன்பமயமான இல்லற வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கும்.

போட்டி!
அலுவல் வேலை முடிந்து வந்தவுடன் வீட்டு வேலையில் மூழ்கிவிடாமல். உங்கள் இருவருக்கும் பிடித்தமான வேறு விஷயங்களை ஈடுபடலாம். உதரணமாக உங்களுக்கு பிடித்த விளையாட்டுகளை ஆடுவது. பிடித்தமான பாடல் கேட்பது, படம் பார்ப்பது, புத்தகங்கள் படிப்பது போன்றவை வேலை டூ வேலை என மீண்டும், மீண்டும் உடலை சோர்வாகாமல் கொஞ்சம் ரிலாக்ஸாக உணர உதவும்.

வாக்கிங்!
கை, கால் முகம் கழுவிட்டு... சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு... காற்றாட ஒரு நடைப்பயணம் மேற்கொள்ளலாம். வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள் இதை தவறாமல் செய்வார்கள். மரங்கள் நிறைந்த சாலையில் (வாய்ப்பிருந்தால்) நடைப்பயணம் மேற்கொண்டால் அது உறவுக்கு மட்டுமின்றி, உடலுக்கும் ஆரோக்கியமானதாக அமையும்.

பிக்னிக்!
வாரத்தில் ஐந்து நாட்களில் நாங்கள் இதை எல்லாம் செய்ய நேரமே இல்லை. நான் ஒரு ஷிப்ட் வேலை செய்கிறேன். என் துணை ஒரு ஷிப்டில் வேலை செய்கிறார். நாங்கள் ஒருவரை, ஒருவர் பார்த்துக் கொள்வதே கடினமாக இருக்கிறது என்று கருதும் நபர்கள். தயவு செய்து மாதத்தில் ஒரு வார இறுதியிலாவது ஒரு பிக்னிக் சென்று வாருங்கள். இது உங்களுக்கும், உங்கள் உறவுக்கும் அழுத்தம் ஏற்படாமல் ஆரோக்கியமாக இருக்க உதவும்.

ஹாபி!
எப்படியும் உங்களுக்கும், உங்கள் துணைக்கும் தனித்தனி ஹாபி இருக்கும். படம் வரையலாம், கவிதை எழுதலாம், சமையலில் கெட்டிக்காரராக இருக்கலாம். புகைப்படம் எடுப்பது, வீட்டை அலங்காரம் செய்வது என ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு திறமை இருக்கும். அதை ஒருவருடன் ஒருவர் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

படம் பாருங்க!
தியேட்டர் தான் போகவேண்டும் என்றில்லை, நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம், யூடியூப் என வீட்டில் இருந்தபடியே படம் பார்க்க நிறைய வழிவகை இருக்கிறது. இருவரும் சேர்ந்து ஒருசில மணிநேரம் அனைத்தையும் மறந்து கொஞ்ச நேரம் வேறு உலகில், வேறு கதாபாத்திரங்களை கண்டு மனதை ஃபீல் குட்டாக உணர செய்யுங்கள்.

வீட்டு வேலைகள்!
வீட்டு வேலைகளை இருவரும் சரி பாதியாக பிரித்து செய்யுங்கள். சுத்தமாக வீட்டு வேலை தெரியாது என்றாலும், கொஞ்சம், கொஞ்சமாக பழகிக் கொள்ளுங்கள். இது உங்கள் துணையை உங்கள் மீது பெருமிதம் கொள்ள செய்யும். பாத்திரம் கழுவுவது, வீடு கூட்டுவது எல்லாம் மிக எளிதான வேலை தான். எதிலாவது கொஞ்சமாவது உங்கள் பங்களிப்பை அளியுங்கள்.

குளியல்!
காலை குளியலை காட்டிலும், இரவு குளியல் மிகவும் ஆரோக்கியமானது. நல்ல உறக்கம் பெற்று தரும் இரவு குளியல். முடிந்தால் ரொமான்சாக இருவரும் ஒரு சூடான குளியல் போடுங்கள்.
இரவும், உறவும் இரண்டும் சிறப்பாக அமையும். மற்றதில் எல்லாம் அவரை தனியாக வேலை செய்ய விட்டு, இதில் மட்டும் ஒன்றாக சேர நினைப்பது சுயநலம். அனைத்திலும் உங்கள் துணைக்கு உதவியாக இருக்க பழகுங்கள்.

நல்லவை பேசுங்க!
இரவு உறங்க செல்லும் போது கொஞ்ச நேரம் ஒருவரும் படுக்கை அறையில் பேசுங்கள். ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் நோண்டி கொண்டிருக்க வேண்டாம். பேசுவது நல்லவையாக இருக்கட்டும். நல்லவை பேசிவிட்டு உறங்க செல்வது மனதுக்கும் நிம்மதி அளிக்கும். மேலும், கெட்ட கனவுகள் வராமல், நல்ல கனவுகள் வரவும் உதவும்.
இந்த 13யும் தாண்டி இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. கோவிலுக்கு சென்று வருவது, எதிர்கால திட்டங்கள் போடுவது. இருவரும் இரவில் உணவருந்திய பிறகு வாக்கிங் சென்று வருவது என இல்லறம் இன்பமயமாக மாற கணவன் - மனைவி நிறைய விஷயங்களை ஒன்றாக செய்ய வேண்டியது அவசியம்.



Click it and Unblock the Notifications