For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விவாகரத்து செய்ய பெரிய அளவில் ஜீவனாம்சம் கொடுத்த நடிகர்கள் - டாப் 10!

By Staff
|

இங்கே முடிவிலியாய் தொடரும் பயணம் ஏதும் இல்லை. கடவுளே எத்தனை பிறவி எடுத்தாலும்... அதை அத்தனையையும் பூலோகத்திலேயே முடித்துக் கொண்டு தான் செல்கிறான். அப்படி இருக்கையில் மனிதன் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன? திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டலும், விவாகரத்து நீதி மன்றங்களில் தான் முடிங்கின்றன.

விவாகரத்து செய்வது அவ்வளவு எளிதல்ல... அதிலும் பிரபலங்கள் விவாகரத்து செய்வது மிகவும் கடுமையானது... மீடியாக்களின் வெளிச்சத்தில் இருந்து சில காலம் ஒதுங்கி இருக்க வேண்டும். ஒரே கேள்வியை கேட்டு, கேட்டு தொல்லை செயவ்வார்கள். இது போக பிரிந்த மனைவிக்கு நிச்சயம் ஜீவனாம்சம் அளிக்க வேண்டும்.

அப்படி தங்கள் மனைவியை விவாகரத்து செய்ய பெருமளவு ஜீவனாம்சம் கொடுத்த பிரபலங்கள் தான் இவர்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரூ. 400 கோடி!

ரூ. 400 கோடி!

இந்தியாவின் செக்ஸியான நடிகர் என்று பெயரெடுத்த ஹ்ரிதிக் ரோஷன் தனது தோழி சுசேனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். கங்கனாவுடன் தொடர்பு இருப்பதாக அறிந்த சுசேன் ஹ்ரிதிக் ரோஷனை விட்டு பிரிந்தார்.

இவர் ஜீவனாம்சமாக ரூ.400 கோடிகள் கேட்டு, பிறகு இறுதியாக 380 கோடி பெற்றார் என்று அறியப்படுகிறது. இவர்கள் மீண்டும் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

MOST READ: எலியை ஓட ஓட விரட்டும் 14 பொருள்கள் இதுதாங்க... உடனே வாங்குங்க... விரட்டுங்க...

மாதம் 10 இலட்சம்!

மாதம் 10 இலட்சம்!

கரீனா கபூரின் சகோதரியான கரீஷ்மா கபூர் சஞ்சயை விவாகரத்து செய்த போது, குழந்தைகளுக்காக 14 கோடி ரூபாயும், மாதம் பத்து இலட்ச ரூபாய் ரொக்கமாக தர வேண்டும் கூற ஜீவனாம்சம் பேசப்பட்டதாக அறியப்படுகிறது.

பங்களா!

பங்களா!

16 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த பர்கான் அக்தர் தனது மனைவியை பிரிய பத்தாயிரம் சதுரடி கொண்ட பங்களாவை வழங்கியதாக அறியப்படுகிறது. மேலும், குழந்தைகள் வளர்ச்சிக்காக இன்வெஸ்ட் செய்ய வேண்டும் என்று பேசப்பட்டதாக அறியப்படுகிறது. விவாகரத்துக்கு பிறகு மனைவியிடம் பிள்ளைகள் வளர்ந்தாலும், தான் விரும்பும் போது பார்க்க அனுமதியும் பெற்றிருக்கிறார் பர்கான் அக்தர்.

அமீர் கான்!

அமீர் கான்!

நீண்ட கால திருமண பந்தத்திற்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த ஜோடிகளில் ஒருவர் அமீர். இவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்ய பெரிய அளவில் பணம் ஜீவனாம்சமாக கொடுத்ததாக கூறப்பட்டாலும், அந்த தொகை எவ்வளவு என்று தெளிவாக எங்கும் பதிவாகவில்லை.

சயப் அலிகான்!

சயப் அலிகான்!

13 ஆண்டுகால திருமண உறவு முறித்துக் கொண்டார் சயப் அலிகான். முதல் மனைவி அம்ரிதாவை விவாகரத்து செய்த பிறகு அவருக்கு ஜீவனாம்சமாக ஐந்து கோடி பேசப்பட்டது. ஆனால், அதில் 2.5 கோடி தான் சயப் அளித்துள்ளார்.

மேலும், தான் ஷாருக் போல பெரிய நடிகர் இல்லை என்றும். தனது மகன் 18 வயது அடையும் வரை மாதம் ஒரு இலட்ச ரூபாய் வழங்குகிறேன் என்றும் கூறிய சயப். மீத தொகையை விரைவில் தந்துவிடுவேன் என்றும் கூறியிருந்தார்.

தனது குழந்தைகளுக்கு எப்போது உதவி வேண்டுமானாலும் செய்ய நான் தயாராக இருக்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார் சயப் அலிகான்.

MOST READ: கண்டதையும் முகத்துல தடவுறத விடுங்க... ஆப்பிளை மட்டும் இதோட கலந்து தடவுங்க... சும்மா ஜொலிப்பீங்க...

சஞ்சய் தத்!

சஞ்சய் தத்!

சஞ்சய் தத்தின் இரண்டாவது மனைவி தான் ரியா. இவரை பிரிந்ததற்காக சஞ்சய் வருத்தம் அடையவில்லை. மேலும், ரியா லியாண்டர் பயஸுடன் உறவில் இருந்தார் என்றும் அறியப்பட்டது. சஞ்சயிடம் இருந்து ஜீவனாம்சமாக எட்டு கோடி ரூபாயும், ஆடம்பர கார் ஒன்றும் பெற்றார் ரியா.

பிரபு தேவா!

பிரபு தேவா!

இந்தியாவின் புகழ்பெற்ற நடன கலைஞர் பிரபு தேவா. இவரது மகனின் இறப்புக்கு பிறகு நயன்தாராவுடன் காதலில் இணைந்தார். அப்போது தனது முதல் மனைவியை விவாகரத்து செய்ய முடிவெடுத்த பிரபு தேவா அவருக்கு பத்து இலட்சம் ரொக்கமும், 20 -25 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை எழுதிக் கொடுத்தார் என்றும் அறியப்படுகிறது.

ஆனால், இதன் பிறகு இவர் நயன்தாராவை திருமணம் செய்துக் கொள்ளாமலே பிரிந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

லியாண்டர் பயஸ்!

லியாண்டர் பயஸ்!

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் விளையாட்டு வீரர் லியாண்டர் பயஸ், இவர் சஞ்சய் தத்தின் இரண்டாவது மனைவி ரியாவை திருமணம் செய்துக் கொண்டார். இவர்கள் இருவரும் ஒருசில வருடங்களில் பிரிந்தனர்.

பிரிவின் போது இவர்கள் மீடியா முன்னிலையில் கொஞ்சம் மோசமாகவே நடந்துக் கொண்டார்கள். மாதம் மூன்று இலட்சம் ரூபாய் போக, மகளின் படிப்பு செலவுக்கு 90 ஆயிரம் என்று மாதம் நான்கு இலட்சம் மொத்தம் ஜீவனாம்சமாக வேண்டும் என்று கேட்டிருந்தார் ரியா.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

These 10 Bollywood Celebs Had The Most Expensive Divorces

However, it is not the same when we talk about reality. There are many Bollywood couples who have got divorced and parted their ways. If the marriages in Bollywood are like big and fat Indian weddings, the divorces are also pretty costly.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more