தந்தையிடமிருந்து மகளைக் காப்பாற்ற வேண்டும்... இளம்பெண் பகிரும் அதிர்ச்சி சம்பவம்! . My story #66

ஒரு பெண் தன்னுடைய திருமணத்திற்கு முன்னால் கர்ப்பமானால் என்னென்ன நிகழும் என்பதை விவரிக்கும் கதை.

காலையில் இருப்பது போன்ற பரபரப்பு ராணுவத்திலும் இருக்காது என்று தோன்றும். நான் எழுந்து, குளித்து, சமைத்து முடித்து,காலைக்கும் மதியத்திற்குமாய் எடுத்து வைத்து கிளம்புவது என்றால் அது பெருங்கதையாக இருக்காது.

காலை நேரத்தை மட்டுமல்ல இனி வரும் நாட்கள் முழுவதும் பரபரப்பாய் என்னை சுழன்றடித்து வேலை வாங்கும் ஒருத்தி வந்திருக்கிறாள். சுழன்றடித்து வேலை வாங்குபவள் என்றாள்.... மாமியாரா?

Shocking story of young girl who got pregnant before her marriage.

கொஞ்சம் சரிதான். ஆனால் இவள் மாமியார் அல்ல அதற்கும் மேலே.... மகள்
தெய்வ மகள் என் நம்பிக்கையின் அரிதாரம் என் வாழ்க்கையின் விடி வெள்ளி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அறிமுகம் :

அறிமுகம் :

மகள் இருக்கிறாள் என்றதும் உங்களது க்ளீசே கேள்விகளையும் எதிர்ப்பார்ப்புகளையும் கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு இதைப் படியுங்கள். என் வாழ்க்கை அனுபவம் உங்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கைப் பாடமாக அமைந்திடலாம்.

காதல் என்பது திரைப்படங்களில் காட்டுவது போல ரோஜாப்பூ ப்ரொப்போசலும் தியேட்டர் பாப்கார்ன் மற்றும் எஸ் எம் எஸில் வாழ்ந்து முடிந்து விடுவதில்லை அதையும் தாண்டி இன்னொரு உலகம் இருக்கிறது. அந்த உலகத்தில் சிரமத்தை தவிர வேறெதுவும் இல்லை என்பதற்கு நான் சாட்சி.

காதல் :

காதல் :

கல்லூரி இரண்டாம் ஆண்டில் தோழியின் அண்ணனின் நண்பனாக அறிமுகமான ஒருவனுடன் நட்பு. ஆரம்பத்தில் எங்கள் இண்டர்ன்ஷிப்புக்கு உதவி இரண்டு பெரிய நிறுவனங்களில் இண்டர்ன்ஷிப் வாங்கிக் கொடுத்தார்.

அந்த நட்பு மெல்லக் காதலாக மாறியது. கல்லூரி படிப்பு முடித்து சென்னையில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் மாதம் இருபதாயிரம் ரூபாய் சம்பளத்துடன் வேலையும் கிடைத்தது.

அவனும் சென்னை நானும் சென்னை.

வாழ்க்கைத் துணை :

வாழ்க்கைத் துணை :

இரண்டு வருடங்கள் கடந்திருக்க எங்கள் காதல் முழுமையடைந்திருந்தது. ஒரு கணவன் மனைவி போல எங்கள் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தோம். அவனுக்கான லேப்டாப் மற்றும் பைக் டியூ என் சம்பளத்தில் கட்டிக் கொண்டிருந்தேன்.

எப்படியும் என் வாழ்க்கைத்துணை தானே நான் கொடுக்காமல் வேறு யார் கொடுக்கப்போகிறார் . தோழிகள் எல்லாம் எச்சரிக்க இதே கல்யாணத்துக்கு அப்பறம் பண்ண ஒத்துப்பீங்க தான? இப்ப பண்ணா மட்டும் ஏன் தப்புன்னு சொல்ற... இவ்ளோ நாள் பழகியிருக்கேன் அவனப்பத்தி எனக்கு தெரியாது.

நாங்க ரெண்டு பேரும் லவ் பண்றோம்... சீக்கிரமே கல்யாணம் பண்ணப்போறோம் என்று சொல்லியே வாயடைத்து விடுவேன்.

பிரிவு :

பிரிவு :

சொந்த ஊருக்குச் செல்வதாக சொல்லிவிட்டு சென்னையிலிருந்து கிளம்பியவன் ஒரு வாரமாக பேச்சு வார்த்தை இல்லை. எப்போதும் ஊருக்குச் சென்றால் இப்படித்தான் இருப்பான்.

அது 4.3.2015 அலுவலகம் முடிந்து மாலையில் வீட்டிற்கு வந்தால் வீட்டு வாசலில் அவன் பைக்கில் காத்திருந்தான்.

வா... உன்ட்ட கொஞ்சம் பேசணும்

எங்கடா போனா? ஒரு வாரமா ஆளக்காணோம்... போன் பண்ணாலும் எடுக்கல

உக்காரு சொல்றேன்.

பைக்கில் உட்கார்ந்து கொண்டேன் . வண்டியை திருப்பிக் கொண்டு வேகமூட்டினான்.

ஏண்டா சீரியசா இருக்க... எனக்கு நெக்ஸ்ட் மன்த் அப்ரைசல் கன்ஃபார்ம் ஆகிடுச்சுடா என்று சொல்ல சுரத்தையே இல்லாமல் கங்கிராட்ஸ் டீ என்றான்.

பெசண்ட் நகர் :

பெசண்ட் நகர் :

பெசண்ட் நகர் பீச்சுக்கு சென்று எதிரில் இருக்கும் ரோட்டின் ஓரத்தில் பைக்கை நிறுத்தி விட்டு பீச்சுக்குச் சென்றோம்.

ஃபிஷ் வாங்கவா?

ம்ம்ம்... ஒன்றை மட்டும் வாங்கினான்.

ஏண்டா உனக்கு வேணாமா?

வேணாம் நீ சாப்டு...

எதோ நிகழ்ந்திருக்கிறது என்பதை யூகித்துக் கொண்டேன். சாப்பிட்டு முடித்ததும் வா கொஞ்சம் வாக் போலாம் என்று சொல்லி அழைத்துச் சென்றான்.

இடைவேளி :

இடைவேளி :

எப்போதும் என்னருகில் இருந்தால் என் தோலை சாய்த்து அணைத்துக் கொள்வது, கையை இருக்கமாக கோர்த்து நடப்பது என்று தான் இருப்பான். நானும் அவன் இருந்தாலே கையை கோர்த்துக் கொள்வேன் எங்கே நடந்தாலும் சரி...

ஆனால் இன்று ஒரு இடைவேளி எங்களுக்குள் வழிய புகுந்திருந்ததை நான் கவனிக்க தவறவில்லை. விலகியே நடந்து கொண்டிருந்தான்.

கால் வலிக்குது உக்காரலாம். என்று சொல்லி சற்றுத் தள்ளி உட்கார்ந்து கொண்டேன். வேறு வழியின்றி அவனும் உட்கார்ந்து கொண்டான்.

என்னாச்சு ? :

என்னாச்சு ? :

ஏதும் பிரச்சனையா? ஏன் இப்டி இருக்க? என்று கேட்க பதிலேதும் சொல்லாமல் போன் நோண்டிக்கொண்டிருந்தான்.

ஒகே.. உனக்கு எப்போ சொல்லணும்னு தோணுதோ அப்போ சொல்லு அதுவரைக்கும் நான் வெயிட் பண்றேன் என்று சொல்லிவிட்டு திரும்பி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.

ஏன் இப்டி சைல்டிஷ்ஷா பிஹேவ் பண்ற? இப்டி திரும்பிட்டு உக்கார தான் அவசர அவசரமா என்னை இங்க கூட்டிட்டு வந்தியா? நான் வேணா கிளம்பவா என்று கேட்டு எழுந்தேன்.

வேறு வழியில்லை :

வேறு வழியில்லை :

சரி சரி... இரு உடனே கோச்சுக்காத என்று கையைப்பிடித்து இருத்தினான்.

அவன் போனை என் கையில் திணித்தான்.

பார்த்தேன்... பார்க்க ஆரம்பித்தேன். அதிர்ச்சியில் வார்த்தை வரவில்லை. தொண்டையை இருக்கிய ஒரு உணர்வு. அவனையும் போனையும் மாறி மாறிப் பார்த்தேன். வரவா என்று அனுமதி கேட்டப்படி கண்களில் நீர் தேங்கி நின்றது.

நேத்து தான் என்கேஜ்மெண்ட் நடந்துச்சு. வீட்ல எவ்ளவோ சொல்லிப் பாத்தேன் அம்மா தூக்கு மாட்டீர்வேன்னு மிரட்டினாங்க தங்கச்சி மாமியார் வீட்ல சேக்க மாட்டாங்கண்ணான்னு சொல்லி என் கால்ல வந்து விழுகுற அப்பா நெஞ்ச பிடிச்சுட்டு உக்காந்துட்டாரு. அந்த சூழல்ல எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல

கல்யாணப்பேச்சு எடுக்குறாங்கன்னு தான் ஊருக்கே போகமா இருந்தேன். அம்மாவுக்கு ரொம்ப முடியலன்னு சொல்லி போன் வந்தனால தான் போனேன். போனா என்கேஜ்மெண்ட்டுக்கு எல்லாம் ஃபிக்ஸ் பண்ணி வச்சிருந்தாங்க.

ஐ எம் ப்ரெக்னெண்ட் :

ஐ எம் ப்ரெக்னெண்ட் :

வீட்டுல கல்யாணப் பேச்சு எடுக்குறாங்கன்னு என்கிட்ட ஒரு வார்த்த கூட சொல்லல என்று சொல்லும் போதே அவன் முன்னால் அழுது விடக்கூடாது என்று இருத்தி வைத்திருந்த வைராக்கியம் கலைந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது.

இவ்ளோ சீரியசா முடிவு எடுப்பாங்க இப்படியான ஒரு சிக்கல்ல நான் மாட்டுவேன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல அவங்கள சமாதானப்படுத்தி எப்டியாவது சம்மதிக்க வச்சிடலாம்னு நினச்சேன்.

இதை எப்படி எடுத்துக் கொள்ள என்று எதுவும் தெரியவில்லை. சரி... ஒகே பாத்துக்கோ என்று சொல்லி எழுந்தேன்.

ஒரு வாரமா உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்னு தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். பட் அத இப்போ சொல்லி வேஸ்ட் என்று சொல்லி விட்டு நடக்க ஆரம்பித்தேன்.

அவனும் என் பின்னாலேயே எழுந்து ஓடி வந்தான்.

ஏய் என்னது? என்னாச்சு ஒழுங்கா சொல்லு... என்று கேட்டு நச்சரிக்க

அவன் கண்களைப் பார்த்து ஐ ம் ப்ரெக்னெண்ட் என்றேன்.

குழந்தை வேண்டாம் :

குழந்தை வேண்டாம் :

ஒரு கணம் ஸ்தம்பித்து தான் போனான்.

ஏய் என்னடி சொல்ற? எப்போ

போன வாரம் தான் கன்ஃபார்ம் ஆச்சு.

அபார்ட் என்று அவன் வாயை திறக்கும் போதே முடியாது என்று சொல்லி விட்டேன்.

குழந்தை பேரச்சொல்லி உன்னைய வந்து மிரட்டுவேன்னு பயப்படாத.

என் வீடு :

என் வீடு :

வீட்டில் அக்காவிடம் மட்டும் இதைச் சொன்னேன்.திட்டித் தீர்த்தாள். அழுதாள் குழந்தையை கலைத்து விடும்படி கெஞ்சினாள்.

அவள் மூலமாக அப்பா அம்மாவுக்குத் தெரிந்தது. நான் தங்கியிருக்கும் வீட்டிற்கே வந்து விடார்கள். இருவருமாய் சேர்ந்து அடித்து உதைத்தார்கள், குழந்தையை கலைத்து விடும்படி மிரட்டினார்கள்.

ஏன் இப்டி மானத்த வாங்குற அவனையே கல்யாணம் பண்ணிக்கப்போறன்னா கூட சரி எக்கேடோ கேட்டுப்போன்னு விட்டுத் தொலையலாம்.

எவனையோ காதலிப்பாலாம். வயித்த நிரப்பிட்டு அவன் வேற ஒருத்திய கல்யாணம் பண்ணிக்கப்போறான்னு கூசாம சொல்ற... இதுக்கு பேரு லவ்வுன்னு சொல்றியா நீ என்று அப்பா கத்த...

இதுக்கு தான் பெரியவளுக்கு பாத்த மாதிரியே இவளையும் டிகிரி முடிச்சதும் கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொன்னேன் கேட்டீங்களா உசுர உருவிட்டா என்று சொல்லி தலையில் அடித்துக் கொண்டார்.

அக்கா :

அக்கா :

பாப்பா... அக்கா சொன்ன கேப்ப தான உன்னைய ஒண்ணும் சொல்ல மாட்டோம். குழந்தை மட்டும் வேண்டாம். நாளைக்கு பெரிய பிரச்சனையாகிடும்.

குழந்தையோட அப்பா யாருன்னு கேட்டா என்ன சொல்றது? உங்கப் பொண்ணு என்ன பண்றான்னு கேட்டா என்ன சொல்றது? ஒழுங்கா அப்பா சொல்றத கேளு என்று கெஞ்ச..

என் குரலை அவள் ஒருத்தியாவது கேட்பாள் என்கிற நம்பிக்கையில் அக்கா குழந்தை எனக்கு வேணும்க்கா என்றேன்.

சேர்த்து வைக்கிறோம் :

சேர்த்து வைக்கிறோம் :

இதுல இவ்ளோ உறுதியா இருக்கிறவ அவன்கிட்டயும் வா நம்ம சேர்ந்து வாழலாம்னு சொல்லி உறுதியா நிக்கணும்ல அவனவன் புள்ள லவ் பண்ணதுன்னு தான் தலையாய அடிச்சிப்பாங்க

இங்க என் புள்ளையப்பாரு என்று சொல்லி அப்பாவும் உடைந்து அழ ஆரம்பித்து விட்டார்.

மாமா அக்கா அப்பா மூவருமாய் பேசிவிட்டு என்னிடம் வந்தார்கள். சும்மா சின்ன சின்ன விஷயத்துக்கு அடம்புடிக்கிற மாதிரி இந்த விஷயத்துல அடம்பிடிக்காத .

சொல்றத கேட்டு ஒழுங்கா நடந்துக்கோ இல்லன்னா இங்கயே கொன்னுட்டு தூக்குல மாட்டீர்வேன் . அதுக்கு வயித்த வலின்னு சொல்லி தூக்கிப் போட்டு போயிட்டே இருப்பேன்.

சனியன்.... இதையெல்லாம் பிறந்து விழுந்தைப்பயே கழுத்த நெரிச்சு கொன்னு போட்டிருக்கணும் என்று சொல்லி கழுத்தை நெரிக்க அக்காவும் மாமாவும் விலக்கி விட்டார்கள்.

குழந்தைய கலச்சிடணும் :

குழந்தைய கலச்சிடணும் :

உன்ன பெத்த பாவத்துக்கு அவங்க வீட்ல போய் நான் பேசுறேன். அவன் கால்ல விழுந்தாவது என் புள்ளைய கட்டிக்கோன்னு கேக்குறேன். என்னை கட்டிக்கிட்ட பாவத்துக்கு உங்கம்மாவும் வந்து அவமானப்படட்டும்.

இல்லன்னா நீ கண்டிப்பா குழந்தைய கலச்சிடணும்....

போய் பேசச்சொல்லவா அல்லது வேண்டாம் என்னால் யாரும் அவமானப்பட வேண்டாம் குழந்தையை கலைத்து விடுகிறேன் என்று சொல்லவா என்று புரியாமல் அழுது கொண்டேயிருந்தேன்.

வாந்தி :

வாந்தி :

மூன்று நாட்களாய் எதுவும் சாப்பிட முடியவில்லை தொடர் வாந்தி... அக்காவும் அவளுக்குத் தெரிந்த கை வைத்தியம் எதை எதையோ கொடுத்துப் பார்த்தால் நிற்கவேயில்லை.

ஏற்கனவே அழுத சோர்வு, இப்போது இந்த வாந்தி வேறு சேர்ந்து கொண்டது . நான் சிரமப்படுவதைப் பார்த்து அம்மாவுக்கு மனசு கேட்கவில்லை.இந்தக் கொடுமைய பாக்கத்தான் நான் இருக்கேனா என்று மாரிலும் தலையிலும் அடித்துக் கொண்டு அழுதார்.

ஹோட்டல் :

ஹோட்டல் :

எப்படியோ அவன் வீட்டில் தகவலை கசிய வீட்டு நிலைமையை புரிய வைத்து நாங்கள் பேச வருகிறோம் என்ற தகவலையும் சொன்னோம். நீண்ட நேரம் கழித்து வீட்டிற்கு எல்லாம் வர வேண்டாம். வெளியில் பொது இடத்தில் பேசி முடிச்சிடலாம் என்றார்கள்.

பேசி முடிக்க வர்ல... உங்க பையனும் என் பொண்ணும் காதலிக்கிறாங்க என் பொண்ணு இப்போ கர்ப்பமா இருக்கா ரெண்டு பேரையும் கல்யாணம் பண்ணி வைக்கிறத தவிர வேற வழியில்ல என்று சொல்லி அப்பா கெஞ்ச அவர்கள் நேரில் பேசிக்கொள்ளலாம் என்று சொல்லி போனை வைத்து விட்டார்கள்.

நீ காதலிக்கிறியா ? :

நீ காதலிக்கிறியா ? :

என்னை, அக்கா, அம்மா மூவரையும் இரண்டு டேபிள் தள்ளி உட்காரச் சொல்லி விட்டு அப்பாவும் மாமாவும் மட்டும் அவர்கள் உட்கார்ந்திருந்த இடத்திற்குச் சென்றார்கள் .

அவன் வீட்டிலிருந்து நான்கு பேர் மட்டும் வந்திருந்தார்கள். அவன் சற்று விலகி நின்று கொண்டிருந்தான்.

ஒரு மணி நேரம் சூடான விவாதத்திற்கு பின் என்னை அழைத்தார்கள். ஏம்மா இவன காதலிக்கிறியா? என்று கேட்டார்கள் ஆமாம் என்றேன். ஏப்பா நீ என்று அவனையும் கேட்க அவன் சுற்றி முற்றியும் பார்த்தான் யோசித்தான்.

லவ் பண்ணேன்.... ஆனா என்று இழுக்க எனக்கு மட்டுமல்ல என் குடும்பத்தினருக்கும் தூக்கி வாரிப்போட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

என்ன ஆளுங்க :

என்ன ஆளுங்க :

அங்கேயே அவன் சட்டையைப் பிடித்து... என்னடா யோசிக்கிற? நீ என்ன லவ் பண்லயா? இவ்ளோ வருஷம் என்கிட்ட நடிச்சியா என்று கேட்க அவன் பதிலேதும் சொல்லாமல் தலை குனிந்திருந்தான்.

ஏம்ம்மா... இப்போ கத்தி என்ன ப்ரோயஜனம் சும்மா சீன் போடாத என்று சொல்ல அப்பாவுக்கும் அவருக்கும் வாக்குவாதம் முற்றியது....

சரி கடைசில என்ன தான் சொல்ல வர்றீங்க..

ரெண்டு பேரையும் கல்யாணம் பண்ணி வச்சிடலாம்.

கல்யாணமா?

நீங்க என்ன ஆளுங்க

காசு வேணும்னா கேட்டு வாங்கிக்கங்க எவ்ளோநாளும் கொடுக்குறோம் கல்யாணம் எல்லாம்.. என்று அவர் சொல்லி முடிக்கும் போதே

அப்பா அவர் காலில் விழச் சென்று விட்டார்..

ஐயா இது மானப்பிரச்சனை மட்டுமில்ல என் பொண்ணோட உயிர்ப்பிரச்சனையும் தான். உங்க வாரிசு என் புள்ள வயித்துல வளரதுன்றது மறந்திறாதீங்க.

வேறு வழியில்லை :

வேறு வழியில்லை :

உன் புள்ளைய கட்டிக்கிட்ட எங்க சாதி சனத்துக்கு முன்னாடி என் கௌரவம் என்னாகுறது.

அவன பையன்னுகூட பாக்காம வெட்டி வீசுவேனே தவிர உன் புள்ளைய கட்டிக்க சம்மதிக்க மாட்டேன் என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்கள்.

அன்று இரவு முழுக்க எங்களுக்கு தூக்கமே வரவில்லை. குழந்தையை கலைப்பது தவிர வேறு வழியே இல்லை என்று முடிவு செய்து விட்டார்கள்.

குழந்தை துடிக்கிறது :

குழந்தை துடிக்கிறது :

மறு நாள் அம்மாவும் அக்காவும் மாமா சொன்ன மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். ஆட்டோவில் மூவரும் கிளம்பினோம். வழியில் ஒரு சவ ஊர்வலம் பறை அடித்துக் கொண்டு பூக்களை தூவியபடி ஒரு கூட்டம் எங்கள் ஆட்டோவைக் கடந்தது.

பறை சத்தம் கேட்க கேட்க... எனக்கு பலமாக மூச்சு வாங்கியது . என்னருகில் உட்கார்ந்திருந்த அக்கா...என்னடீ ஆச்சு ஏன் இப்டி மூச்சு வாங்குது என்று கேட்டுக் கொண்டிருக்க என்னால் பதில் சொல்ல முடியவில்லை. பறை சத்தம் அதிகரித்தது, நான் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு வயிற்றை தொட்டுப் பார்த்தால் வயிற்று துடித்துக் கொண்டிருக்கிறது.

அந்த சூழலிலும் எனக்கு கண்ணீர் தான் வந்தது. இந்த உயிரைத் தான் கொலை செய்யப்போகிறோம். அக்கா காதில் மெதுவாக கிசுகிசுத்தேன்... அக்கா வயித்த தொட்டுப்பாரேன் குழந்தை துடிக்கிதுக்கா.

மருத்துவரிடம் :

மருத்துவரிடம் :

மருத்துவர் பரிசோதித்தார். மூணு மாசம் குழந்தை ரொம்ப ஆரோக்கியமா இருக்கு எந்தப்பிரச்சனையும் இல்ல அப்பார்ட் பண்றப்போ இல்ல அபார்ட் முடிஞ்சதுக்கு அப்பறம் என்ன வேணா க்ரிடிக்கல் சிச்சுவேஷன் ஆகலாம். தேவையில்லாம ரிஸ்க் எடுக்குறீங்கன்னு தான் நான் சொல்லுவேன்.

இல்ல டாக்டர் எங்களுக்கு இந்த குழந்தை வேண்டாம் என்று அம்மா உறுதியாகச் சொல்ல.. சரி அப்போ அப்பார்ட் நடக்குறப்போ என்ன ஆனாலும் அதுக்கு நாங்கதான் பொறுப்புன்னு சொல்லி இந்த அக்ரீமெண்ட்ல சைன் போடுங்க என்று ஒரு லெட்டர் பேடை நீட்டினார்.

அவசர அவசரமாக வாங்கி அம்மா கையெழுத்திட்டு கொடுத்தால்.

குழந்தை வேண்டும் :

குழந்தை வேண்டும் :

ஆப்ரேஷன் தியேட்டரில் என்னை படுக்க வைத்திருந்தார்கள். அழுது கொண்டேயிருந்தேன்.

என்னருகில் வந்த அந்த மருத்துவர் என்ன ரீசன்னு தெரியல உன்னோட ஃபேமில எல்லாரும் இந்த குழந்த வேண்டாம்னு சொல்றாங்க. சின்ன பசங்க தனியா வந்தா கண்டிப்பா இந்த மாதிரி அபார்ட் பண்றதுக்கு நான் ஒத்துக்கவே மாட்டேன், ஆனா உனக்கு உன் ஃபேமிலி வந்திருக்கிறனால தான் நான் சம்மதிச்சேன் என்றார்.

டாக்டர் எனக்கு இதுல கொஞ்சம் கூட விருப்பமில்ல நம்ம பண்ணத்தப்புக்கு அந்த குழந்தை என்ன பண்ணுச்சு எனக்கு இந்த குழந்தை வேணும்

ஒதுக்கி வைத்த குடும்பம் :

ஒதுக்கி வைத்த குடும்பம் :

வெளியில் வந்த மருத்துவர் நிலைமை மோசமாகிவிட்டது. குழந்தையை கலைக்க முடியாது அதை விட உங்க பொண்ணுக்கு குழந்தையை கலைக்கிறதுல விருப்பம் இல்ல என்று சொல்லி கை விரித்து விட்டார்.

எக்கேடோ கெட்டுப்போ... நான் செத்தாகூட என் முகத்த பாக்க வந்திராத எனக்கு ஒரே ஒரு பொண்ணு தான். இந்த நிமிஷம் நீ செத்துட்ட என்று மருத்துவமனையிலேயே என்னை தலைமுழுகிவிட்டுச் சென்றது என் குடும்பம்.

மகள் :

மகள் :

நவம்பர் 29 அதே மருத்துவமனையில் மகள் பிறந்தாள். ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்துவிட்டு வீட்டிற்கு வந்து விட்டேன். நண்பர்கள் சிலர் செய்த பண உதவியுடன் என் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது.

இந்த சமூகம் என்னைப் பல கேள்விகளால் துளைத்தெடுத்துக் கொண்டிருக்கிறது தான், இல்லையென்று சொல்ல மாட்டேன்.

முதல் மாதத்திலேயே குழந்தையை க்ரீச்சில் விட்டு விட்டு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன். இதோ இப்போது மகளுக்கு இரண்டு வயதாகப்போகிறது. இதுவரை அவள் அப்பாவை தேடியதில்லை கேட்டதில்லை இனியும் கேட்டுவிடக்கூடாது என்ற வேண்டுதலுடனே என் ஒவ்வொரு நாளும் துவங்கி முடிகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, November 18, 2017, 13:09 [IST]
Desktop Bottom Promotion