பிரபலங்களின் திருமணம் விவாகரத்தில் முடிய காரணங்கள் என்ன??

Posted By:
Subscribe to Boldsky

பிரபலம் என்பது பெரிய அடையாளம். அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் ஊடகம் எனும் பெரிய கண்ணாடி சமூகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டிவிடும். இதனால் அவர்களுக்கு ஏற்படும் நன்மைகளை விட, உளைச்சல்கள் தான் அதிகம்.

காதலுக்கு கண்களில்லை என்பதை நிரூபித்த சினிமா பிரபலங்கள்!!!

புரளி, கிசு, கிசு என உண்மையான தகவல் கிடைக்கும் முன்னரே அவர்களை பற்றிய தகவல்களை பரப்பிவிடுவது இவர்களது வாழ்கையில் அடிக்கடி பெரும் புயலாக வீசும். இதை அனைத்தையும் தாண்டி தனது வேலையில் கவனம் செலுத்தி வெற்றியும் பெற வேண்டும்.

தன்னை விட வயது அதிகமான பெண்ணை திருமணம் செய்து கொண்ட இந்திய பிரபலங்கள்!!!

இதற்கிடையில் இவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளையும் சமாளிக்க வேண்டும். சில சமயங்களில் அதிகரிக்கும் மன உளைச்சல் மற்றும் அழுத்தம் திடீரென விவாகரத்தில் சென்று முடித்துவிடும்.

திரையில் சிறந்த காதல் ஜோடியாக திகழ்ந்த தமிழ் சினிமா பிரபலங்கள்!!

பெரும்பாலும் பிரபலங்களின் வாழ்க்கையில் விவாகரத்து ஏற்பட சில காரணங்கள் இருக்கின்றன, அவற்றை பற்றி இனிக் காண்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாதுகாப்பின்மை

பாதுகாப்பின்மை

பெரும்பாலும் இவர்கள் வாரக் கணக்கில், மாதக் கணக்கில் ஷூட்டிங் சென்றுவிடுவதால் பாதுகாப்பின்மை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இந்த பிரிவு நாள்பட உறவில் விரிசல் ஏற்பட காரணமாகிவிடுகிறது.

தனிமை

தனிமை

பெரும்பாலான நேரம் தனிமையில் கழிப்பதால் இருவருக்குள் இருக்கும் நெருக்கம் குறைய வாய்ப்புகள் இருக்கின்றன. இதன் முடிவில் தனிமையில் இருப்பதற்கு தனியாகவே இருக்கலாம் என்ற எண்ணம் எழ காரணமாகிவிடுகிறது.

அதிக அழுத்தம்

அதிக அழுத்தம்

எப்போதுமே ஓர் பெரும் கூட்டத்தின் பார்வையின் முன்னிலையில் இருப்பது இவர்களுக்குள் மன அழுத்தம் அதிகரிக்க காரணமாகிவிடுகிறது.

ஊடக வெளிச்சம்

ஊடக வெளிச்சம்

இவர்கள் சாதாரணமாக செய்யும் காரியங்கள் கூட ஊடகங்களினால் ஊதி பெரிசாக காண்பிப்பது. இவர்களுக்குள் மனதளவில் பெரிய தாக்கங்களை ஏற்படுத்துகிறது.

தூரம்

தூரம்

விளையாட்டு வீரர்கள், நடிகர்கள், கலைஞர்கள் துணையை விட்டு தொலைதூரத்தில் இருக்க வேண்டிய நிர்பந்தம் நேரிடும். இது நாள்பட அவர்களுக்கு மத்தியிலான காதலை குறைக்கும் கருவியாக மாறிவிடுகிறது.

புதியவர்கள்

புதியவர்கள்

பிரபலங்கள் எப்போதும் புதிய நபர்களை சந்தித்துக் கொண்டே இருப்பார்கள். சில சமயங்களில் அவர்கள் மீது ஏற்படும் ஈர்ப்பு விவாகரத்தில் சென்றுக் கொண்டு நிறுத்திவிடுகிறது.

ஈகோ

ஈகோ

இருவருமே பிரபலங்களாக இருக்கும் பட்சத்தில் நீயா, நானா என்ற ஈகோ வளர வாய்ப்புகள் இருக்கின்றன. இருவரில் யாரேனும் ஒருவரை விட அதிக பிரபலாம் அடையும் போது இந்த பிரச்சனை ஏற்படலாம்.

வேலைக்கு முக்கியத்துவம்

வேலைக்கு முக்கியத்துவம்

வேலையா, இல்லறமா என்று வரும் போது பெரும்பாலும் வேலை தான் முக்கியம் என முடிவெடுப்பது இவர்களுக்குள் பிரிவை ஏற்படுத்தும் முக்கிய காரணியாக இருக்கிறது.

இருதுருவங்கள்

இருதுருவங்கள்

இருவரும் வெவ்வேறு துருவங்களை விரும்புவார்கள். இதனால் சில மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

வயது வித்தியாசம்

வயது வித்தியாசம்

பல தருணங்களில் பிரபலங்களின் திருமணத்தில் வயது வித்தியாசம் மிகவும் அதிகமாக இருக்கும். இதுவும் கூட சில சமயங்களில் விவாகரத்து ஏற்பட காரணமாகிவிடுகிறது.

வாழ்வியல் முறை

வாழ்வியல் முறை

இருவரின் வாழ்வியல் முறையும் வேறுபட்டு இருக்கும். அந்த வேளையில் இருவரில் யாருமே விட்டுக் கொடுக்க முன்வராமல் இருப்பதும் கூட விவாகரத்து ஏற்பட காரணமாகிவிடுகிறது.

முயற்சிகள் இன்றி இருப்பது

முயற்சிகள் இன்றி இருப்பது

தங்களுக்குள் ஏற்படும் சண்டைகள் விவாகரத்தில் முடியும் என்று தெரியும் போது, இருவருமே அதை தடுக்க முயற்சிகள் எடுக்காமல் இருப்பது தான் மிக முக்கியமான காரணம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Reasons Behind Celebrities Divorces

What Makes Celebrities Marriages Go Away, reasons behind quick divorces.
Story first published: Tuesday, February 2, 2016, 13:21 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter