Latest Updates
-
ஹைதராபாத் முட்டை மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் உச்சமடைவதால் கோடி நன்மைகளை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது!
கூட்டுக் குடும்பத்தில் தாம்பத்தியம்? தம்பதிகள் கூறும் பதில்கள்!
Quora எனும் இணையத்தில் கூட்டுக்குடும்பத்தில் வாழும் தம்பதிகள் மத்தியில் தாம்பத்தியம் எவ்வாறு நிலவுகிறது என கேட்கப்பட்ட கேள்விக்கு பலரும் பலவிதமான பதில்கள் அளித்துள்ளனர். இளம் தம்பதிகளில் இருந்து, திருமணமாகி பல வருடமான தம்பதிகள் வரை பலரும் இந்த கேள்விக்கு அவரவர் பார்வையில் பதில்கள் பதிவு செய்திருந்தனர்.
புருஷன்கிட்டே இந்த 12 குவாலிட்டி கண்டிப்பா இருக்கணும்னு பொண்ணுக எதிர்பாக்குறாங்கப்பு!
பெரும்பாலும் அனைவரும் கூட்டுக் குடும்பத்தில் தாம்பத்தியத்தில் ஈடுபடுவது சற்று அசௌகரியமானதாக தான் இருக்கிறது என கூறுகின்றனர். பெரியோர், சிறியவர்கள் அனைவரும் உறங்கிய பிறகும் கூட தாம்பத்தியத்தில் ஈடுபடுவது சற்று சிரமமானதாக இருக்கும் எனவும் சிலர் பதில் அளித்துள்ளனர்.
உங்க மனைவியின் சோகத்தை போக்க இத முயற்சி பண்ணியிருக்கீங்களா?
இயல்பாகவே கூட்டுக் குடும்பம் என்று வந்துவிட்டால் உடுத்தும் உடையில் இருந்து, கணவன், மனைவி கொஞ்சம் கொஞ்சிக் கொள்ள வேண்டும் எனிலும் கூட நீண்ட தயக்கத்திற்கு பிறகு தான் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியும்...

பதில் #1
விளக்குகள் அணைத்த பிறகும் கூட உணர்சிகளை வெளிப்படுத்த முடியாது. ஆங்காங்கே உறக்கத்தில் சிலரின் சிறு அசைவுகளும் கூட சத்தத்தை உண்டாக்கும், அது பதட்டத்தை உண்டாக்கும். அனைவரும் உறங்கிவிட்டனரா என சோதிக்க வேண்டும், இதற்கு பதிலாக வார இறுதிகளில் எங்கேனும் அருகே வெளியிடங்களுக்கு பிக்னிக் சென்று வந்து விடலாம். இல்லையேல் குடும்பத்தைபிக்னிக் அனுப்பி விடலாம்.
#அபூர்வா

பதில் #2
உடை அணியும் விஷயத்தில் நிறைய தியாகம் செய்ய வேண்டி இருக்கும். ஸ்கர்ட், ஷார்ட்ஸ் எல்லாம் அணிய முடியாது கால்கள் மறைக்கும் அளவிலான நீளமான உடைகளை தான் தேர்வு செய்ய வேண்டும். இதையும் தாண்டி கணவருக்கு உணர்ச்சி ஏற்பட்டால், அனைவரும் உறங்கும் வரை காத்திருக்க தான் வேண்டும்.
#ரிச்சா

பதில் #3
இந்திய சமுதாயத்தில் ஓர் கட்டமைப்பு கோளாறு இருக்கிறது. குழந்தை பருவத்தில் மட்டுமின்றி, திருமணத்திற்கு பிறகும் கூட குழந்தைகள் மீது பெற்றோர் ஆதிக்கம் செலுத்துவது தவறு என்கிறார். குழந்தைகளும் கேள்விகள் கேட்க தயங்குவது தவறு என பெயர் கூறாத ஒருவர் பதிலளித்துள்ளார்.

பதில் #4
நெருக்கம் என்பதை தவிர்த்து, ஒரு மருமகள் கூட்டுக் குடும்பத்தில் மகிழ்ச்சியாக வாழ்வதே கடினம். கணவன், மனைவி உடனான உறவே இதனால் பதிக்கப்படுகிறது. திருமணத்திற்கு பிறகும் அம்மாவுடன் தான் இருப்பேன் என்றால் என்ன தான் செய்ய.
#வித்யா

பதில் #5
நான் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள். இருபது வயதாக இருக்கும் போது திருமணம் நடந்தது. நான், கணவர் மற்றும் மாமியார் சிறு அறை கொண்ட வீட்டில் தான் தங்கியிருந்தோம். கணவர் கட்டிலில், மாமியார் தரையில், நான் சமையல் அறை அருகில் என தான் உறங்குவோம். தேவையை பூர்த்தி செய்துக்கொள்ள முனைவதே மிகவும் சிரமம். இதில் உணர்சிகளை பூர்த்தி செய்துக் கொள்வது மிகவும் கடினம்.
#பெயர் தெரியாத ஒருவர்

பதில் #6
வார இறுதி விடுமுறை, வார நாட்களில் வரும் விடுமுறை வரும் போது தம்பதிகள் வீட்டில் கூறுவதில்லை. எங்கேனும் லாங் டிரைவ் சென்று விடுவார்கள். சில வார இறுதிகளில் அலுவலக வேலை என கூறு சுற்றுலா சென்றுவிடுவார்கள்.
#பெயர் தெரியாத நபர்

பதில் #7
பல அறைகள் கொண்ட வீடுகளில் நள்ளிரவில் தான் தாம்பத்தியத்தில் ஈடுபடுவார்கள். இந்நேரத்தில் அவர்கள் மற்றவர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதாக கருதலாம். ஆயினும், யாரேனும் நீர் குடிக்க அல்லது என்ன நடக்கிறது என்பதை அறிந்து எழுந்திருக்க வாய்ப்புகள் உண்டு.
#பெயர் தெரியாத நபர்

பதில் #8
கூட்டுக் குடும்பத்தில் நாங்கள் தனி அறையில் தான் இருக்கிறோம். எனவே, தாம்பத்தியத்தில் ஈடுபடுவது பெரிய பிரச்சனை இல்லை. இங்கு பிரச்சனை என்னவெனில் அனைத்தும் சத்தமின்றி நடக்க வேண்டும். முக்கியமாக மறுநாள் ஆணுறையை யாருக்கும் தெரியாமல் வெளியேற்ற வேண்டும்.
#பெயர் தெரியாத நபர்

பதில் #9
இது ஒன்றும் விகாரமான செயல் அல்ல. எப்படியும் குடும்பத்தார், பெற்றோர் வெளி அறையில் தான் இருப்பார்கள். என்ன திருமணத்திற்கு பிறகு தம்பதிகளாக இருப்பவர்கள் அட்டாச்டு பாத்ரூம் இருப்பது போன்ற படுக்கையறைய தேர்வு செய்துக் கொள்வது நல்லது.
#முஹம்மது

பதில் #10
தொடக்கத்தில் சற்று தயக்கமாக தான் இருக்கும். ஏனெனில், மற்றவர் ஹாலில் டிவி பார்த்துக் கொண்டிருக்கலாம். உறங்காமல் இருக்கலாம். அந்நேரத்தில் படுக்கையறையில் தாம்பத்தியத்தில் ஈடுபடுவது சிரமமாக தான் இருக்கும். முக்கியமாக வீட்டில் பருவ வயதினர் இருந்தால் தான் மிகவும் அசௌகரியமான உணர்வு தரும்.
#அருண்
சுவையான கோவில்பட்டி கடலை மிட்டாய்..!!



Click it and Unblock the Notifications