For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மூர்க்கத்தனமான பெண்களும் கூட திருமணத்திற்கு பிறகு சாந்த சொரூபியாய் மாறிவிடுவது எப்படி?

|

சில பெண்கள் திருமணத்திற்கு முன்பு மிகவும் முரட்டுத்தனமாக இருப்பார்கள். மல்யுத்த வீராங்கனையாக அல்ல, தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் தான் என்பது போல, கருத்து ரீதியாகவும், தங்கள் குணாதிசயங்கள் ரீதியாகவும் யாருக்காகவும் எதையும் மாற்றிக் கொள்ளமாட்டார்கள்.

காதல் வாழ்க்கையை பற்றி உங்கள் கைரேகை என்ன சொல்கிறது என்று பார்க்கலாமா?

ஆனால், திருமணத்திற்கு பிறகு நேர் எதிராக மாறி சாந்தமே குணமாக கணவன் பேச்சை மதித்து, மாமியாரை அம்மா என்று அழைக்கும் பண்புடன் பிரளயம் வந்து ஓய்ந்தது போல அமைதியாக நடந்துக் கொள்வார்கள். கண்டிப்பாக, உங்கள் வீட்டிலோ, உறவுகளிலோ இப்படி ஒருவரையாவது நீங்கள் கண்டிருக்க கூடும்.

இல்லறத்தில் பெண்கள் நாட்டமில்லாமல் இருப்பதை வெளிகாட்டும் 10 அறிகுறிகள்!

இது எப்படி? யார் செய்யும் மாயாஜாலம் இது? இந்த மாற்றத்திற்கு என்ன தான் காரணம்? வாங்க பாக்கலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அறிவியல்

அறிவியல்

கடந்தாண்டு நடத்தப்பட்ட ஓர் அறிவியல் ஆய்வில், ஆண்களின் விந்தணு பெண்களின் உடலுக்குள் சென்ற பெண்களின் உடலில் பல மாற்றத்தை ஏற்படுத்துகிறது என ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டது.

தாக்கம்

தாக்கம்

உடலளவில் மட்டுமின்றி மனதளவிலும் விந்தணு பெண்கள் மத்தியில் தாக்கத்ததை உண்டாக்குகிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

விந்தணு புரதம்

விந்தணு புரதம்

மேலும், ஆண்களின் விந்தணுவில் புரதம் இருக்கிறது எனவும் கூறப்படுகிறது. இந்த புரதமானது, பெண்களின் என்சைம், ஹார்மோன் ஏற்பிகளை தனது செயல்பாடுகளால் கட்டுப்படுத்த துவங்குகிறது எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

குடும்ப பெயர்

குடும்ப பெயர்

அறிவியல் காரணிகள் விடுத்து மற்றவை என்ற கோணத்தில் பார்க்கையில் முக்கியமாக தென்படுவது குடும்ப பெயர். தனது குணாதிசயங்கள் மற்றும் பண்புகளால் தன் பிறந்த வீட்டின் பெயர் கெட்டுவிடக் கூடாது எனவும் பெண்கள் தங்கள் மனநிலை மற்றும் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்கின்றனர்.

பெற்றோர் வளர்ப்பு

பெற்றோர் வளர்ப்பு

ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி தங்கள் பெற்றோரை யாரேனும் குறைக் கூறினால் கோபம் வரும், தாங்கிக் கொள்ள முடியாது. எனவே, எந்த காரணத்தாலும் கூட பெண்களின் நடவடிக்கைகளில் மாற்றங்கள் உண்டாகலாம்.

பொறுப்பு

பொறுப்பு

திருமணதிற்கு முன்னர் தான், தன் வாழ்க்கை என்ற போக்கு இருந்ததன் காரணத்தினால் கூட மூர்க்கத்தனம் இருந்திருக்கலாம். இப்போது தனக்கென தனி வாழ்க்கை, கணவன், குழந்தை எனும் போது, இல்லற பொறுப்புகள் அவர்களை சாந்தமாக மாற்றிவிடுகிறது.

தாய்மை

தாய்மை

மற்றும் தாய்மை அடைந்துவிட்டால் பெண்களின் குணாதிசயங்கள் தானாக மென்மையடைந்துவிடும் என கூறப்படுகிறது. இது பண்டையக் காலத்திலேயே நமது முன்னோர்கள் கூறி வைத்தது தான்.

பழமொழி

பழமொழி

எலியும், பூனையுமாக திரியும் கணவன், மனைவியை கண்டால் நம்ம ஊர் பெரியவர்கள் "எல்லாம் ஒரு குழந்தை பிறந்தால் சரியாகிவிடும்.." என்றும் "உங்க ரெண்டு பேருக்குள்ளையும் "அந்த" விஷயம் நடந்துச்சா இல்லையா? அப்பறம் ஏன் இப்படி கீரியும் பாம்பா இருக்கீங்க" என கேட்பதுண்டு.

பழமொழி

பழமொழி

ஒருவேளை ஆராய்ச்சியாளர்கள் சென்ற ஆண்டு கண்டறிந்ததை நமது முன்னோர்கள் முன்னரே அறிந்து வைத்திருந்தார்களோ என்னவோ??? யாருக்கு தெரியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Even Rude Girls Becomes Softer After Marriage, How?

Reasons Behind The Softer Character Of Rude Girls After Marriage, read here in tamil.
Desktop Bottom Promotion