கருத்தரிக்கும் முயற்சியில், உடலுறவு வாழ்க்கையை சீர்குலைத்து கொள்ளும் தம்பதிகள்!

Posted By:
Subscribe to Boldsky

குழந்தை என்பது பாக்கியம், வரம் என்பார்கள். ஆம், அனைவருக்குமே அவர்கள் நினைத்தவுடன் குழந்தை வரம் கிடைத்துவிடுவதில்லை. இதை அறியாமல் சிலர் கருகலைப்பு செய்து விலைமதிப்பில்லா உயிரை உதிக்கும் முன்னரே கொன்றுவிடுகிறார்கள்.

Don't Let Trying To Conceive Ruin Your Love Making

அந்த சிலருக்கு தெரிவதில்லை, இளம் வயதில் செய்யும் கருகலைப்பு, பின்னாட்களில் கருத்தரிக்க முயலும் போது தடையாக அமையும் என்று. ஆம், கருகலைப்பு செய்வதால் கர்ப்பப்பை வலிமை குறைய வாய்ப்புகள் உண்டு.

இனி, கருத்தரிக்கும் முயற்சியின் போது, உடலுறவில் தம்பதிகள் செய்யும் தவறுகள் பற்றி பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முதன் முதலில்?!

முதன் முதலில்?!

முதன் முதலில் தம்பதிகள் அறிந்துக் கொள்ள வேண்டிய விஷயம். முதல் முறை / ஒரே முறை உடலுறவில் ஈடுப்பட்டவுடன் கருத்தரிக்கும் சதவீதம் மிகவும் குறைவு. ஏன் நீங்கள் தாம்பத்தியத்தில் ஈடுபட்ட முதல் மாதத்தில் கூட கருத்தரிக்க முடியாமல் போகலாம்.

கரு திறன்!

கரு திறன்!

பெண்களின் கரு திறன் அதிகமாக இருக்கும் நாளில் உடலுறவில் ஈடுபட்டால் தான் கருத்தரிக்கும் வாய்ப்புகள் அதிகம். இதை அறியாமல், நீங்கள் தினமும் உடலுறவில் ஈடுபட்டால் பெண்களுக்கு வலி தான் மிகுதியாக உண்டாகுமே தவிர கருத்தரிக்க முடியாது.

உடலுறவு எண்ணிக்கை!

உடலுறவு எண்ணிக்கை!

இத்தனை முறை உடலுறவில் ஈடுபட்டால் கருத்தரித்து விடலாம் என்ற கணக்கு எதுவும் இல்லை. சிலர் சரியான நாளில் உடலுறவில் ஈடுபட்டால் முதல் முறையிலேயே கருத்தரிக்க வாய்ப்புகள் உண்டு. மேலும், ஆண், பெண் உடல் மற்றும் மனநிலையும் கருத்தரிக்க ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

நல்லது, கெட்டது!

நல்லது, கெட்டது!

திட்டமிட்டு சரியான நாட்களில் உடலுறவில் ஈடுபட்டால் கருத்தரிக்க நிறைய வாய்ப்புகள் உண்டு. ஆனால், சரியான நாள் என்பது பெண்ணின் கருவின் ஆரோக்கியம் சார்ந்தது. கருத்தரிக்க ஆணின் விந்தும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இதனால், திட்டமிட்டாலும் கருத்தரிக்க முடியாமல் போக வாய்ப்புகள் உண்டு. எனவே, கருத்தரிக்க முயலும் போது ஆண்கள் உணவு மற்றும் பழக்க வழக்கங்கள் சார்ந்து ஆரோக்கியத்தை பின்பற்ற வேண்டும்.

லியூபிரிகென்ட்!

லியூபிரிகென்ட்!

ஒருவேளை உடலுறவில் ஈடுபடும் போது வலி மிகுந்த காணப்பட்டால், உணர்வை தூண்ட முடியாவிட்டால் லியூபிரிகென்ட் பயன்படுத்தலாம். ஆனால், நீங்கள் பயன்படுத்தும் லியூபிரிகென்ட் சரியானதாக இருக்க வேண்டும்.

பேசவும் வேண்டும்...

பேசவும் வேண்டும்...

ஒருவேளை உங்களால் கருத்தரிக்க முடியவில்லை, அதில் சிரமம் உணர்கிறீர்கள் எனில், வெளிப்படையாக பேசுங்கள். உங்கள் துணையிடம், குடும்ப, மகப்பேறு மருத்துவரிடம் இதுக்குறித்து பேசுவதால். எங்கு நீங்கள் தவறு செய்கிறீர்கள். அதை எப்படி சரி செய்வது என்ற ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

பொறுமை அவசியம்!

பொறுமை அவசியம்!

நினைத்தவுடன் கருத்தரிக்க முடியவில்லை என மன அழுத்தம் கொள்ள வேண்டாம். இந்த தேவையற்ற மன அழுத்தம் காரணத்தால் உண்டாகும் உடல்நல பிரச்சனைகள் விந்தின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். இதனால் கூட உங்களால் கருத்தரிக்க முடியாமல் போகலாம். எனவே, அமைதியாக, பொறுமையாக இருங்கள் இன்றைய அறிவியல் யுகத்தில் முடியாதது எதுவும் இல்லை. அனைத்திற்கும் தீர்வுண்டு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Don't Let Trying To Conceive Ruin Your Love Making

Don't Let Trying To Conceive Ruin Your Love Making
Subscribe Newsletter