Latest Updates
-
நீட் மறுதேர்வு எப்போது? சிபிஐ அதிரடி கைதுக்கு பின் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு! -
Shani Jayanti 2026: சனி ஜெயந்தி நாளில் இதெல்லாம் செய்யாதீங்க.. இல்ல சனி பகவானின் கோபத்துக்கு ஆளாவீங்க.. -
Shani Jayanti 2026: சனி ஜெயந்தியான இன்று எந்த ராசிக்கு சூப்பராகவும், எந்த ராசிக்கு மோசமாகவும் இருக்கும்? -
ராகி சுரைக்காய் தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 16 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க உச்சத்தை தொடப்போறாங்களாம் -
சனி ஜெயந்தி நாளில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது! -
புதன் ரிஷப ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரங்கள ஆபத்தும், நஷ்டமும் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
ராஜ்மாவை ஒருடைம் இப்படி கிரேவி செய்யுங்க.. மட்டன் கிரேவியே தோத்துப் போயிடும்... -
சனி ஜெயந்தி அன்று சனிபகவானை இந்த மாதிரி வழிபடுங்க - உங்கள் பாவமெல்லாம் மன்னிக்கப்படும் -
பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு! சாமானிய மக்களின் பட்ஜெட் இனி என்னவாகும்? அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!
பார்வதியா? சரஸ்வதியா? லட்சுமியா? - உங்க மனைவி எப்படி இருக்கணும்...
பார்வதி, சரஸ்வதி, லட்சுமி என்ற மூன்று தெய்வங்களும் ஆதிபராசக்தி உருவங்களாக வழிப்பட படுகின்றனர். இவர்களில் பார்வதி ஆக்கம், அழிவு எனும் இருபெரும் சக்திக்கும், சரஸ்வதி கல்வி மற்றும் அறிவுக்கும், லட்சுமி செல்வத்திற்கும் அதிபதியாக திகழ்கின்றனர்.
நவராத்திரியை ஏன் வருடத்திற்கு இரண்டு முறை கொண்டாடுகிறோம்?
இல்வாழ்க்கையில் என்ன தான் ஆண் மகன் குடும்ப தலைவனாக இருந்தாலும் ஓர் பெண்ணால் மட்டுமே அந்த குடும்பத்தை நல்வழியில் வழிநடத்த முடியும். ஆண் மகன் என்பவன் உழைப்பிற்கு இலட்சினையாக திகழ்பவன். மனைவி என்பவள் தான் ஓர் குடும்பத்தின் அஸ்திவாரம்.
நவராத்திரியின் ஒவ்வொரு நாளின் முக்கியத்துவம்!!!
ஓர் குடும்பம் சிறந்து விளங்க ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் மனைவியிடம் பார்வதியின் சக்தியும், சரஸ்வதியின் அறிவும், லட்சுமியின் செல்வமும் இருத்தல் வேண்டும். அதாவது, சக்தியை எப்படி வெளிபடுத்தினால் குடும்பம் சிறக்கும் என்றும், அறிவை எப்படி பயன்படுத்தினால் குடும்பம் மேலோங்கும் என்றும், செல்வத்தை எப்படி செலவு செய்து, சேமித்தால் குடும்பம் வளரும் என்றும் அறிதல் வேண்டும்....

பார்வதி
ஓர் குடும்பத்தின் ஆக்கமும், அழிவும் பெண்களின் கையில் தான் இருக்கிறது. இது தான் இயற்கை. ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்ற வாக்கியத்தின் பொருளும் இது தான். பிறவியிலேயே ஆண்களைவிட முதிர்ச்சி அதிகமாக வாய்க்கப்பட்டவர்கள் பெண்கள். ஓர் குடும்பத்தை காக்கும் தொழிலானது பெண்களின் முதிர்ச்சியில் தான் இருக்கிறது.

ஆக்கம், அழிவு
ஓர் பெண்ணின் செயல் தான் சமூகத்தில் ஓர் குடும்பத்தை நல்ல முறையில் எடுத்துக் காட்டுகிறது. மற்றும் ஓர் பெண்ணால் மட்டுமே குடும்பத்தில் நல்லவை உதயமாக ஆக்க சக்தியாகவும் மற்றும் கெடுதல், தோல்வி, மன சோர்வு போன்ற தீயவை அண்டினால் அதை அழிக்கும் சக்தியாகவும் இருக்க முடியும்.

சரஸ்வதி
ஏறத்தாழ ஓர் 18 வயது பெண்ணுக்கு இருக்கும் முதிர்ச்சி தான் 24 வயது ஆண்மகனுக்கு இருக்கும். இதனால் தான் திருமணத்தின் போது வயது வித்தியாசம் முக்கியம் என்று பெரியவர்கள் கூறுகிறார்கள். அப்போது தான் இருவரும் குடும்பம் சார்ந்த முடிவுகள் எடுக்கும் போது ஒரே மாதிரி சமநிலையில் யோசித்து செயல்பட முடியும்.

கல்வி அறிவு
கல்வி அறிவு இல்லையெனிலும் கூட வீட்டு மேலாண்மையில் சிறந்து விளங்குபவர்கள் பெண்கள். எது சரி, எது தவறு என கணிப்பதில் பெண்களுக்கு நிகர் பெண்களே. இந்த அறிவு மிகவும் முக்கியமானது. இதனால் தான் எந்த ஒரு முடிவை எடுக்கும் முன்னரும் வீட்டில் தாய் மற்றும் மனைவியிடம் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

லட்சுமி
வீட்டில் செல்வம் பெருக முக்கிய காரணமாக இருப்பவர்கள் பெண்கள் தான். அது பணமாக இருந்தாலும் சரி, ஆபரணமாக இருந்தாலும் சரி. ஓர் பக்கம் நகைகளாக செல்வதை சேர்க்கும் பண்புக் கொண்ட பெண்கள், மறுபக்கம் செல்வதை எப்படி செலவு செய்ய வேண்டும், சேமிக்க வேண்டும் என்றும் நல்ல திட்டமிடுதல் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

வீண் செலவு
ஒரு வீட்டில் எவ்வளவு சம்பாதித்தாலும், பெண்கள் வீண் செலவு செய்பவர்களாக இருந்தால், அந்த வீட்டில் செல்வம் தங்குவது மிகவும் கடினம். எனவே, பெண்களின் சேமிப்பில் தான் ஓர் குடும்பத்தின் முன்னேற்றம் இருக்கிறது.

ஆண்களை கட்டி ஆள்தல்
என்ன தான் ஓர் ஆண்மகன் நாட்டையே கட்டி ஆண்டாலும், வீட்டில் அவனை ஆள்வது பெண்ணாக இருக்க வேண்டும். சக்தி இன்றி சிவமே இல்லை என்ற போது, மானிடர்கள் எம்மாத்திரம். ஆண்மகனை வீண் செலவு செய்யாமல் பார்த்துக் கொள்வதும் பெண்களின் கையில் தான் இருக்கிறது.

ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே
நிறையே பேர் "ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே" என்ற வாக்கியத்திற்கு பொருள் இராமயண சீதை மற்றும் மகாபாரத திரௌபதி என்று கருதி வருகிறார்கள், இது தவறு. பராசக்தி, தன் உலக மக்களை ஆக்கவும், காக்கவும், அழிக்கவும் வல்லமை படைத்தவள். அவள் இந்த மூன்று தொழில்களையும் திறம்பட நடத்தி வருகிறாள். அதனால், ஆவதும், அழிவதும் பெண்ணாலே என்பது இங்கு பொருந்தும்.

குடும்ப குத்துவிளக்கு
ஒவ்வொரு பெண்ணும் பார்வதி, சரஸ்வதி, லட்சுமி எனும் மூவர்களின் குணாதிசயங்களும் கொண்டிருக்க வேண்டும். அப்போது தான் ஓர் குடும்பம் சிறந்து விளங்கும்.



Click it and Unblock the Notifications