Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
மனைவிகளைக் கடுப்படிக்கும் இந்திய ஆண்களின் 8 மோசமான பழக்கவழக்கங்கள்!!
கணவர்கள் செய்யும் சிறுசிறு தவறுகளைக் கூடப் பொறுத்துக் கொள்ள முடியாத படித்த இந்தியப் பெண்கள் இந்தக் காலத்தில் கோர்ட் படியேறிக் கொண்டிருப்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் ஓரளவே படித்த அல்லது படிப்பறிவே இல்லாத பெரும்பாலான இந்தியப் பெண்கள், தங்கள் கணவர்கள் எவ்வளவு பெரிய தவறுகளைச் செய்தாலும் பெட்டிப் பாம்பாக அடங்கியே இருக்கின்றனர்.
ஆண்களுக்கு பெண்கள் செய்யும் சில கொடூரமான செயல்கள்!!!
அப்படி இருந்தாலும், இதுபோன்ற ஆண்கள் தங்கள் மனைவிகளைக் கடுப்படிக்கும் விதமான நடவடிக்கைகள் எல்லாம் இல்லையென்று ஆகி விடுமா? சம்பந்தமே இல்லாமல் கோபப்படுவது, கோபம் வரும்போது சாப்பாட்டுத் தட்டை விசிறியடிப்பது, எப்போதுமே அடிமையாக நடத்துவது என்று அவர்களுடைய மோசமான பழக்கங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். இவ்வளவு பெரிய விஷயங்களில் கூட நம் நாட்டுப் பெண்கள் பொறுமையாக இருப்பதுதான் அவர்களுடைய பெருந்தன்மையாகும்.
பெண்களை மதி மயங்கச் செய்யும் ஆண்களின் 7 குண நலன்கள்!!!
இந்திய ஆண்கள் தங்கள் மனைவிகளை எரிச்சலடையச் செய்யும் விதமாக நடந்து கொள்ளும் எட்டு மோசமான பழக்கவழக்கங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

கட்டிலில் ஈர டவல்...
இந்தியக் கணவன்மார்களின் மிக மோசமான பழக்கங்களில் இதுவும் ஒன்று. காலையில் குளித்து விட்டு டவலோடு வரும் ஆண்கள், உடை மாற்றிய பின் டவலைக் கொண்டு போய் கொடியில் உலர்த்தப் போடுவது கிடையாது. அப்படியே கட்டிலிலேயே போட்டுவிட்டுப் போய்விடுவார்கள். எத்தனை முறை இது குறித்து மனைவிமார்கள் சொன்னாலும் கேட்பதே இல்லை.

வார இறுதியில் தூக்கம், தூக்கம்...
சனி, ஞாயிறு விடுமுறை வந்து விட்டால் போதும், நம் இந்திய ஆண்கள் காலையில் நேரத்தோடு எழுந்திருப்பதே இல்லை. அப்படியே கட்டிலைக் கட்டிக் கொள்ளாத குறையாக, படுத்துத் தூங்கிக் கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு காபி, உணவு எல்லாம் கட்டிலுக்கே வந்தாக வேண்டும். குளிப்பது கூடக் கிடையாது. இந்தச் செய்கைகள் யாவும் எந்த மனைவியையும் கடுப்படிக்கத்தான் செய்யும்.

வருவேன், ஆனா வரமாட்டேன்...
வீட்டிலிருக்கும் போது, சில சமயம் கணவன்மார்கள் எப்ப பார்த்தாலும் டி.வி. பார்ப்பது, ஃபேஸ்புக்கில் மூழ்குவது, வாட்ஸ் ஆப்பில் சாட் பண்ணுவது அல்லது நியூஸ்பேப்பர் படிப்பது என்று அவற்றில்தான் மூழ்கிக் கிடப்பார்கள். மனைவி சாப்பிடக் கூப்பிட்டால், "இதோ வந்துட்டேன்மா" என்ற குரல் மட்டும்தான் வரும். ஆனால் அவர்கள் வருவதற்குள் உணவுகள் எல்லாம் ஆறி உலர்ந்து போய்விடும்.

நோ வீக்கெண்ட் ஷேவிங்...
திருமணத்திற்கு முன் எப்போதுமே நீட்டாக ஷேவ் செய்து வலம் வரும் நம் இந்திய ஆண்கள், திருமணத்திற்குப் பின் ஆஃபீஸுக்குச் செல்லும் போது மட்டும் தான் ஷேவ் செய்வார்கள். வார இறுதியிலோ முழுக்க முழுக்க தாடியுடன் தான் திரிவார்கள். இப்படி தேவதாஸாக இருந்தால் எந்தப் பெண்ணுக்குத்தான் பிடிக்கும்?

சோம்பல் திலகம்...
நம் கணவன்மார்களுக்கு வீட்டில் எல்லாமே முறையாக இருந்தால் பிடிக்கும். ஆனால் அதையெல்லாம் அவர்கள் செய்ய மாட்டார்கள். தங்கள் மனைவிகள் தான் செய்ய வேண்டும். அது மட்டுமல்ல, பிரஷ்ஷில் பேஸ்ட் வைத்துக் கொடுப்பது, குளிக்க டவல் எடுத்துக் கொடுப்பது, அன்று அணியும் டிரஸ்சை எடுத்துக் கொடுப்பது, ஷூ மாட்டி விடுவது, வண்டி சாவியை எடுத்துக் கொடுப்பது என்று எல்லாவற்றையும் மனைவிகள் தான் செய்ய வேண்டும்.

பாத்ரூமில் அடைந்து கிடப்பது...
நம் ஊர் ஆண்கள், காலையில் எழுந்து பாத்ரூமிற்குள் போனால் அவ்வளவு சீக்கிரம் வெளியே வருவதே கிடையாது. அங்கேயே உட்கார்ந்து தூங்குவது, இல்லையென்றால் பேப்பர் படிப்பது அல்லது புகைப்பிடிப்பது என்று அங்கேயே அடைந்து கிடப்பார்கள். வெளியே யார் அடக்கிக் கொண்டு, காத்துக் கிடந்தாலும் அவர்கள் கவலையே படுவதில்லை.

குறட்டை விடுவது...
இரவு தூங்கும்போது நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்குவது பெரும்பாலான இந்தியக் கணவன்மார்களின் வழக்கம். ஆனால் மறுநாள் காலை எழுந்ததும் தன்னால் சரியாகவே தூங்க முடியவில்லை என்றும், அதற்கு மனைவி தான் காரணம் என்றும் புகார் கூறிக் கொண்டிருப்பார்கள். சில வெளிநாடுகளில், கணவன் குறட்டை விட்டதற்காகவே விவாகரத்து செய்த பெண்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

படுக்கையிலேயே சாப்பிடுவது...
பெரும்பாலான இந்திய ஆண்கள், தங்கள் படுக்கையில் உட்கார்ந்து கொண்டே டி.வி. பார்ப்பது, கம்ப்யூட்டரை நோண்டுவது என்று இருப்பார்கள். அப்படி இருந்தால் கூடப் பரவாயில்லை. பிரேக் ஃபாஸ்ட், ல்ஞ்ச், டின்னர் என்று சகலத்தையும் கட்டிலில் உட்கார்ந்து கொண்டே சாப்பிடுவது என்பது கொஞ்சம் ஓவர்தான். அதிலும், சாப்பிடும் போது படுக்கை முழுவதும் உணவுத் துணுக்குகளை சிந்திச் சீரழித்தும் விடுவார்கள். கடைசியில், அவர்களுடைய மனைவிமார்கள் தான் அவற்றையெல்லாம் சுத்தம் செய்ய வேண்டும்.



Click it and Unblock the Notifications











